
2014ல் இந்த அரசாங்கம் பதவியேற்றவுடன் பொருட்கள் மற்றும் சேவை மீதான மறைமுக வரிகள் அத்தனையும் GST யின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும் கூச்சல்கள். GST என்றால் என்னென்று நன்கு அறிந்தவர்கள் கூட நாட்டுக்கு நல்லதில்லை என குந்தகம் விளைவிக்க எத்தனித்தார்கள். வருடங்கள் இரண்டு உருண்டோடி 2017 ஜுலை மாதம் முதல் நாளிலிருந்து GST அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.
GSTக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காலத்திலிருந்து கடுமையான எதிர்ப்புகளும் குழப்பத்தை ஏற்படுத்தும் பதிவுகளும் கட்டுரைகளும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. இன்றா நேற்றா.. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறத் தொடங்கிய காலத்திலிருந்து எதிர்ப்புகள்; குறிப்பாக சொல்லப்போனால் 1986ஆம் ஆண்டு திரு. வி.பி.சிங் இந்தியாவின் வரி விதிப்பு முறை சரியானதல்ல என்று திருத்தப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (Modified VAT) பரிந்துரைக்கிறார். மாநிலங்கள் எதிர்ப்பினால் பெரிய மாற்றங்கள் நடக்காமல் நின்றது.
1988லிருந்து 1991 வரை நாட்டில் நடந்த பெருங்குழப்பங்களால் வரிவிதிப்பில் மாற்றம் ஏற்படவில்லை. 1991ல் பொருளாதார கொள்கைகள் மாற்றத்திற்கு பின்னர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மாநிலங்களோடு மல்லுக்கட்ட வேண்டாமென மாநிலங்கள் தாங்களாகவே மதிப்பு கூட்டு வரியை செயல்படுத்த அறிவுருத்துகிறார்.
அப்போதும் நடக்காமல், 1999ஆம் ஆண்டு பிரதமாராயிருந்த வாஜ்பாய் தலைமையிலான குழு முழுமையான GST (Goods and Service Tax-சரக்கு மற்றும் சேவை வரி) முறைக்கு பரிந்துரைக்கிறது. 12ஆம்(2002) நிதிக்குழு ஆணையமும் இந்த வரிவிதிப்பை பரிந்துரைக்கிறது. 2004கில் அரசு மாறிய பின்னர் நிதி அமைச்சராக இருந்த திரு. ப.சிதம்பரம் 2010-2011 நிதியாண்டிலிருந்து நாடு முழுக்க இந்த வரிவிதிப்பு முறை பின்பற்றப்படும் என்று அறிவித்தார். 2011ல் அரசியல் மாற்றங்களால் மேற்கு வங்கத்தை சேர்ந்த GST தலைமை குழுவிலிருந்த அசிம் தாஸ்குப்தா வெளியேறுகிறார்; மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
ஒன்று மட்டும் நிச்சயம் எப்பொழுதெல்லாம் வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வர முயற்சித்தார்களோ அப்பொழுதெல்லாம் நாட்டில் குழப்பம்/ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்க “4L” பிரச்சனை என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்:
- Land (நிலம்)
- Labour (பணியாளர்கள்)
- Levies (வரிகள்)
- Law (சட்டங்கள்).
இதில் சட்டங்கள், பணியாளர் சட்டங்கள் ஓரளவுக்கு திருத்தியமைக்கப்பட்டது. கடுமையான வரிவிதிப்பினை சரி செய்யவே சரக்கு மற்றும் சேவை வரி.
GST ஆதரவாளர்கள்
- தொழிலதிபர்கள் (கடலை மிட்டாய் செய்பவரும் தொழிலதிபரே!)
- சுங்க/வரி தணிக்கை அதிகாரிகள்
- மத்திய/மாநில அரசுகள்
- அரசியல் கலக்காத மக்கள்
1. தொழிலதிபர்கள்
பெரும்பாலும் தொழில் (சிறிதாயினும் பெரிதாயினும்) சார்ந்தவர்கள் வரி திரும்ப பெருதல், வேறொரு மாநிலத்தில் அதே பொருளுக்கு வரி செலுத்துதல், மாநிலம் விட்டு மாநிலம் சரக்கு போக்குவரத்து நடக்கையில் வேறு மாநில அதிகாரிகள் அலட்சிய போக்கு, நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல், இன்னொரு மாநிலத்தில் அதே நிறுவனத்தின் கிளை தொடங்க புதிய வழிமுறைகள்/ புதிய வரிகள், வரி செலுத்துதலில் கால தாமதம் இன்னும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்கள். அதற்கு விடிவெள்ளியாய் அமைந்தது தான் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை.
2. சுங்க/வரி தணிக்கை அதிகாரிகள்
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வருமான வரி பதிவுகளை சரி பார்க்க வேண்டும். வரி செலுத்துபவர் நீதிமன்றம் சென்றால் தன் அன்றாட பணியை விட்டு நீதிமன்றம் செல்வதால் மீண்டும் பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவார். பெரும்பாலான கணக்கு வழக்குகளை GSTN செய்வதால் குழப்பம் மிஞ்சாது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு அதனால் மூலப்பொருள் முதல் விற்பனை வரை யார் வரி வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என்று கண்டுகொள்வது மிகக்கடினம். யாராவது சொத்து வைத்திருக்கிறாகள் என்று தகவல் வந்தால் சோதனை நடத்தி கணக்குகளை கைப்பற்றி தணிக்கை செய்து பின் தண்டம் விதிப்பார்கள். இப்போது GSTIN நம்பரை வைத்து பண பரிவர்த்தனைகளை கணக்கு பார்த்து தானாக கணக்குகளில் உள்ள மாற்றங்களை தணிக்கை அதிகாரிக்கு அனுப்பும். பின்னர் என்ன… வருமான வரி நோட்டிஸ் + தண்டம் தான்.
3. மத்திய/மாநில அரசுகள்
வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. ஆட்கள் கூடினால் அரசின் செலவினம் கூடும். செலவினங்களை குறைத்து நல்ல திட்டங்களுக்கு அந்த பணம் மடை மாற்றப்படும். அரசு மானியங்களுக்கும்/ நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவிங்களை சமாளிக்க நிறைய கடன் வாங்க வேண்டியிருந்தது. நிதிசுமை கூட நிறைய புது வரிகள் வாங்கியது (CST, VAT, CENVAT, customs, excise….).
4. அரசியல் கலக்காத மக்கள்
பொருட்களின் விலை குறையும் என்ற காரணத்தால் மக்களும் ஆதரித்தார்கள். (GSTயை பூதம் போல மக்களிடம் காட்ட இதுவரை வரி செலுத்தாத சில தொழில் அமைப்பினர் வரியை மக்கள் மேல் திணித்தனர்; அதனால் சில பொருட்களின் விலை அதிகமானது என்பது வேறு கதை)
அதேபோல தற்போதிருக்கும் அரசாங்கத்தின் “குறைந்த அரசாங்கம் நிறைந்த ஆட்சி” என்ற கொள்கையில் அரசாங்க கெடுபிடிகள் இல்லாது தொழில் செய்பவருக்கும் மக்களுக்கும் சுதந்திரம் கிட்டும்.
GSTயை எதிர்ப்பவர்கள்
- சில மாநிலங்கள் (இப்போது எதிர்க்கவில்லை)
- நம்பர் 2 பில் போடுகிறவர்கள்
- புதிதாக வரி செலுத்துபவர்கள்
- திராவிடம், தமிழ் சார்ந்த பிரிவினை அமைப்புகள்
- இணைய நக்சல்கள்
- சர்ச் அமைப்புகள்
- இஸ்லாமிய அமைப்புகள்
- சில மாநிலங்கள்
1. சில மாநிலங்கள்
தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற தொழிலால் வளர்ந்த மாநிலங்கள் புதிய வரிவிதிப்பு முறையினால் தங்களின் வருமானம் குறையும் என்ற கருத்தை தெரிவித்தன. வரி வருமானம் குறைந்தால் அடுத்த 5 வருடங்களுக்கு மத்திய அரசு பற்றாக்குறையை வழங்கும் என்று நம்பிக்கையூட்டியதால் எல்லா மாநிலங்களும் தலையாட்டின.
அதுபோக வரி வசூலிக்கும் மாநில உரிமையை மத்திய அரசு எடுத்துக்கொள்வதாகவும், கூட்டாட்சி தத்துவம் காற்றில் விடப்பட்டதாகவும் கூச்சல்களை கேட்க முடிந்தது. GST council எனப்படும் குழுவில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் (இல்லாதபட்சத்தில் பிரதிநிதிகள்) உறுப்பினர்களாக உள்ளனர். இதை தானே கூட்டாட்சி என்பர்?
2. நம்பர் 2 பில் போடுகிறவர்கள்
அரசாங்கத்துக்கு நியாயமான கணக்குகளை காட்டுகிற பில், நம்பர் 1 பில் (இவை தொழில் செய்வோர் உபயோகிக்கும் சொற்கள்). பணப் பரிமாற்றங்கள் அத்தனைக்கும் கணக்கு கச்சிதமா இருக்கும். போலி கணக்குகளை காட்டி வரி ஏய்க்க நம்பர் 2 பில்.
100க்கு செங்கல் விற்பனை ஆகிறது. ஒரு செங்கல் ₹10 வீதம் ₹1000க்கு வியாபாரம் நடக்கிறது. ஆனால் அரசாங்க விதிகளின்படி செங்கல் வியாபாரத்தில் ₹999 வரைக்கும் வரி செலுத்தத் தேவையில்லை. ₹1000த்துக்கு வியாபாரம் நடந்தால் 10% வரி போட்டு ₹100 நீங்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும். இதை ஏய்க்க, நடந்த ₹1000க்கு ஒரு கணக்கும் போலியாக ₹700க்கு வியாபாரம் நடந்ததா ஒரு கணக்கும் எழுதப்படும்.
இந்த ₹700 கணக்கு தான் அரசு தணிக்கை, வரி செலுத்துவதற்கான பதிவு. அதாவது போலி கணக்குகளை காண்பிக்கப் பயன்படுவது நம்பர் 2 பில் (₹ 700க்கான பரிவர்த்தனைகள் மட்டும் TIN நம்பரில் பதிவாகும்)
“பில் போடாம ₹300 கம்மி சார்” என்று கேட்டது உண்டு தானே?
நம்பர் 2 பில் தொழில் செய்பவரும் ஆடிட்டர்களும் நன்றாக அறிவர்.
3. புதிதாக வரி செலுத்துபவர்கள்
பல சிறிய தொழில்கள் இதுநாள்வரை வரி செலுத்தியதே இல்லை. எப்படி? உங்கள் கையில் கொடுக்கப்படும் பில்லில் வரி VAT 12%/14%/14.4% என்றிருக்கும். ஆனால், அவர்கள் அரசாங்கத்திடம் அந்த வரியை செலுத்த மாட்டார்கள். பல லட்சக்கணக்கான பதிவர்களை அரசு சரி பார்ப்பது சாத்தியமில்லாததால் இன்று வரை வரி ஏய்த்தவர்கள் யாவரும் தப்பித்தனர். இப்பொழுது Input Tax Credit/ Line item-wise tax முறைகள் பயன்படுத்துவதால் ஒரு பொருளுக்கு யார் வரி செலுத்ததாதவர் என்று கண்டுபிடிக்கலாம்.
தானியங்கி மென்பொருள்களே எல்லா தகவல்களையும் திரட்டி வரி வசூல்/தணிக்கை அதிகாரியிடம் காட்டும். வரி செலுத்துபவரின் கணக்குகளை சரிபார்த்து Input Tax Credit சங்கிலி தொடர்பில் யார் வரி செலுத்தாமல் ஏமாற்றினார்களோ அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்படும். திருடனை தேள் கொட்டிய கதை தான்.
4. திராவிடம், தமிழ் தேசியம் சார்ந்த பிரிவினை அமைப்புகள்
இந்த பிரிவினைவாதிகளிடம் குறிப்பிடப்படும்படியான ஒரு குணாதிசயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் தங்களுக்கு சாதகமான கட்சி ஆட்சியில் இல்லையென்றால் யார் என்ன செய்தாலும் தவறு தான்.
ஏசுநாதர் 10 கட்டளைகள் கொடுத்ததைப் போல இவர்களுக்கும் விதிகள் உண்டு. அந்த விதிகளை மீறி யார் சிந்தித்தாலும் பேசினாலும் அவர் மீது வசை மழை பொழியும். உதாரணம்: மரபுகளை பற்றி பேசினால் பிற்போக்குவாதி, கடவுளை பற்றி பேசினால் மூடநம்பிக்கையாளன், இன்னும் பல. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
5. இணைய நக்சல்கள்
கொஞ்சம் படித்த, ஆனால் முழுவதும் புத்தி மழுங்கடிப்பட்ட புதிய சமூகம். எல்லாவற்றையும் இந்த சமூகம் கேள்வி கேட்கும், உண்மையான நோக்கம் அறியாமல். உதாரணம்: சிங்கப்பூரில் 7% GST என்பது இவர்கள் வைக்கும் வாதம்; ஆனால் சிங்கப்பூரில் எத்தனை சதவிகிதம் மக்கள் வரி செலுத்துகிறார்கள் என சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் referenceஆக சில பேரை வைத்திருப்பார்கள்.
- பொருளாதாரம் – சிதம்பரம்
- செய்தி – கார்பரேட் செய்தி
- மனோவியல் – சிக்மன்ட் பிராட்
- மதம்/கடவுள் – பெரியார்
மேற்சொன்னவர்கள் சொன்னது/பேசியது இல்லாமல் புதிதாக ஒன்றை அல்லது வேறு கோணத்தில் சிந்தித்தால் அவர்கள் பார்வையில் நீங்களும் முட்டாள்களே!
6. சர்ச் அமைப்புகள்
இவர்களுக்கு GST எதிர்க்க வேண்டும் என்பது நோக்கமல்ல, மொத்தமாக இந்தியாவை வாங்குமளவுக்கு பணம் வைத்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை(NGO க்களை ரத்து செய்து, வெளிநாட்டு பண பரிமாற்றங்களை கண்காணிக்கும் அரசாங்கத்தை/பிரதமரை) எந்த வகையிலாவது எதிர்க்க வேண்டுமென்பது தான் உண்மையான நோக்கம்.
7. இஸ்லாமிய அமைப்புகள்
வழக்கம் போல எந்த மாற்றங்கள் நடந்தாலும் தாங்களும் இருக்கிறோம் என்ற காட்டவே கூச்சல். பெரும்பாலானவர்கள் GSTயால் வரி செலுத்த வைக்கப்பட்டிருக்கிறார்கள். வரி, வட்டி இஸ்லாத்திற்கு எதிரானது என்பது இவர்கள் வாதம்.
இவைகள் போக கட்சியிடம் பணம் பறிக்க பத்திரிக்கையாளர்கள், அரசியல் செய்ய எதிர்கட்சிகள், பிரபலம் ஆக லெட்டர்பேட் கட்சிகள், அரசை மிரட்ட நினைக்கும் நக்சல்/மாவோ/உண்டியல் கும்பல் என பலரும் GST எதிர்ப்பாளர்கள்.
உண்மையில் GSTயால் கொஞ்சம் சிரமம் இருப்பது யாருக்கென்றால், வரி வரம்புக்குள் வராதவர்களுக்கு தான். ஏனென்றால் அவர்களையும் கணக்கு தாக்கல் செய்யச் சொல்கிறார்கள். அதுவும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். ஆரம்பத்தில் GSTN பிணையம் கொஞ்சம் தகராறு செய்தது; இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது.
~நொய்யலன் (@noyyalan)
Image credits: hamza butt via Flickr