தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் சுவர் விளம்பரங்களில் தவறாமல் இடம் பெறும் வாசகம் – புரட்சித் தலைவரின் ஆசி பெற்ற, கலைஞரின் ஆசி பெற்ற, அம்மாவின் ஆசி பெற்ற —  இதாவது பரவாயில்லை, கட்சித் தலைவர்களுக்கு ஒவ்வொரு வேட்பாளரையும் தெரியும், கூட்டணி வைத்திருப்பதால் இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கும் – அன்னை இந்திராவின் ஆசி பெற்ற, ராஜீவ் காந்தியின் ஆசி பெற்ற, அன்னை சோனியாவின் ஆசி பெற்ற —  சரி, என்ன செய்யறது… இனிமே தலைவர் உதயநிதியின் ஆசி பெற்ற என்பதும் இடம் பெறும். இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் இங்கிருக்கும் வேட்பாளரைத் தெரியுமா என்றால் சந்தேகம்தான். அவர்கள் கட்சி வேட்பாளர்களையே கூடத் தெரிந்திருக்காது. ஆனாலும் இந்த வாசகத்தின் நோக்கம் தேசியத் தலைவர்களின் பெயரைச் சொல்லி வாக்காளர்களைக் கவருவதுதான். 2020 அமெரிக்கத் தேர்தலில் மோடியின் ஆசி பெற்ற உங்கள் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கே உங்கள் ஆதரவு என்று பிரச்சாரம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

கீழடியில் கிடைத்த சில உடைந்த பானைத் துண்டுகளை வைத்துக் கொண்டு சில டுமீல் போராளிகள் கடைந்தெடுத்த பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். மதுரையில் கிடைத்தது என்றால் மனிதன் மதுரையில் மட்டும்தான் வாழ்ந்தானா?  ஒரு உண்மை சொல்லட்டுமா? சென்னையில் பல்லாவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான புதைமப் படிமங்களும் மனித எலும்புக்கூடுகளும் கிடைக்கும் எனவும் அதனால் இந்தப் பகுதியை அகழ்வாராய்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது இங்கே வீடு வெச்சிருக்கவங்க சும்மா விடுவாங்களா?  அதனால் அப்படியே நிற்கிறது முயற்சி. ஒருவேளை தோண்டி எடுத்தால் சங்கத் தமிழ் காலம் இன்னும் 10000 வருடங்கள் பின்னால் கூடப் போகலாம். இது தமிழனுக்குப் பெருமை இல்லையா? இதைவிடவா உங்கள் வீடுகள் பெரியது?

 

உண்மை உறைக்கிறதா? பழம்பெருமை ஒன்றுக்கும் உதவாது. இப்போது  என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். இதெல்லாம் டுமீல் போராளிகளுக்குத் தேவையில்லை, ஏனென்றால் அவர்களுக்குப் பெருமையும் முக்கியமில்லை, நிகழ்காலமும் முக்கியமில்லை. 200தான் பெரிது.

 

ரிச்சர்ட் நிக்ஸன் —  வாட்டர் கேட் ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தவர். இவர் ஒரு முறை நமது பிரதமர் இந்திரா காந்தி அவர்களை பி** என்று கூறியதாகப் பல ஆண்டுகளுக்குப் பின்பு ரகசியக்காப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன.  கடும் உணவுப் பஞ்சம் வந்த போது அமெரிக்காவிடம் கோதுமைக் கையேந்தி நின்றதும் ஞாபகம் வருகிறது. இந்தியப் பிரதமர்கள் அமெரிக்கா வந்தால் அமெரிக்க ஜனாதிபதியின் கண்பார்வைக்காகக் காத்திருப்பதும் ஒரு கடமைக்காக சந்தித்து விட்டு ஜனாதிபதி புறப்பட்டு விடுவதும் சாதாரண நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைத் தவிர சாதாரணமாக இருந்தது.  உலகத் தலைவர்களின் மாநாடுகளில் இந்தியப் பிரதமர் தனித்து விடப்பட்ட காட்சிகளும் ஏராளம்.

 

 

ஆனால் இன்றைக்கு பாரதப் பிரதமரின் வருகைக்காக அமெரிக்காவின் காங்கிரஸ் ( அய்யய்ய ராகுல் காங்கிரஸ் இல்லீங்க) மற்றும் செனட் உறுப்பினர்கள் காத்திருப்பது பாரத தேசத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்பதை விடவும் இந்த நிலைமைக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற ஒரு தலைவனின் உழைப்பையும் அதன் வெற்றியையும் காட்டுகிறது.  உலக அளவில் எந்த ஒரு தலைவருக்கும் இதுவரை அளிக்கப்படாத மரியாதையும் அன்பும் முக்கியத்துவமும் பிரமிக்க வைக்கிறது. ஒரு நேரத்தில் வெள்ளை மாளிகையின் வெளியே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு சாதாரண தொண்டனை வரவேற்க அமெரிக்க நாடே திரண்டு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தானாகவே முன்வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.  அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது India is the largest democracy on the face of the earth and America is proud to be your friend.  இந்தியாவின் நண்பன் என்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது – இதைவிட ஒவ்வொரு இந்தியனுக்கும் என்ன பெருமை வேண்டும்? கர்வம் கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

 

உலகம் முழுவதும் தங்களது கலாச்சாரத்தைத் திணித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா இன்றைக்கு இந்தியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.  அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மோடியை வரவேற்ற போது பாரதக் கலாச்சாரப்படி இரு கை கூப்பி வணங்கியது நமது கலாச்சாரத்தின் வலிமையைக் காட்டுகிறது.

 

 

காசுக்கு விலை போன கும்பல் சும்மா இருக்குமா? இதனையும் எதிர்த்து கோஷம் போடத்தான் செய்யும்.  இந்தியாவுக்குப் பெருமை என்றால் இவர்களுக்கு ஏன் எரிய வேண்டும்? அமெரிக்காவுடனான உறவு சீனாவுக்கு எதிரானது —கம்மினாட்டிகளின் கோஷம்.  ஆமாம், சீனாவுக்கு எதிரானதுதான். என்ன இப்போ? பாக்கிஸ்தானை வாழ வைத்துக் கொண்டிருப்பதே சீனாதான்.  ஆனாலும் நாம் சீனாவை எதிர்க்கக் கூடாதாம். ஏன்? வேறொன்றுமில்லை, 1962 யுத்தத்தின் போது சீனாவை ஆதரித்தவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியுமா? சீனப் போரில் காயமுற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது டோலர்களுக்குக் கட்டளையிட்ட உத்தமர்கள்தானே இவர்கள்!

 

இந்தியப் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும்போது இந்த விஜயம் தேவையா?  சரி, அப்போ பொருளாதாரம் வளர்ச்சியடையும் வரைக்கும் இந்த அனாவசியங்களான திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், பாடல் வெளியீட்டு விழா இதையெல்லாம் தள்ளிவைக்கலாமா?  இந்த விஜயத்தின்போது அமெரிக்க – இந்திய வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், இது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத்தானே தவிர யாருடைய மருமகனுக்கும் மகளுக்கும் இல்லை.

 

இந்தியா என்றாலே பிச்சைகாரர்களும் பாம்பை வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்களும் என்று  நினைத்துக் கொண்டிருந்த நிலை மாறி இன்றைக்கு நாங்கள் இந்தியாவின் நண்பர்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம் என்றால் அதில் பல வருட கடின உழைப்பு இருந்திருக்கிறது. காங்கிரஸைச் சார்ந்த பிரதமர்கள் யாருக்கும் இந்த உழைப்பில் பங்கில்லை என்பதும் உண்மை.  என்றைக்குமே மேல் நாடுகள் துரைகள் போலவும் நாம் அவர்களைச் சார்ந்து நிற்பவர்கள் போலவுமே இந்தியாவை வைத்திருந்தனர் இவர்கள்.

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு தேவையா?  ஒருவேளை ஈரானுக்கும் சவூதிக்கும் இடையில் போர் மூண்டால் எண்ணைக்கு எங்கே போவது?  அதைவிட முக்கியம் பெட்ரோல் விலையேற்றத்தை எப்படி சமாளிப்பது? அமெரிக்காவின் அபிரிமித எண்ணைதான் நம்மைக் காப்பாற்றும். அதனைப் பெற வேண்டுமானால் அமெரிக்காவின் நட்பு வேண்டும்.  இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது இந்தியா எந்த நிலையிலும் அமெரிக்காவிடம் பணிந்து விடவில்லை. ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஆயுதங்களை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா வற்புறுத்தியும் நாம் வாங்கி இருக்கிறோம்.  நமது நாட்டின் தேவைகளிலும் நன்மையிலும் நாம் என்றைக்கும் சமரசம் செய்து கொள்ளவில்லை – மோடி ஆட்சியில். ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி குறைக்கப்பட்டதற்குக் காரணம் லூஸு என்று பெயர்பெற்ற அறிவுஜீவி உளறுவதைப் போல பயம் கிடையாது. சர்வதேச புவி அரசியல் காரணிகளும் பொருளாதார பாதிப்புகளும்தான்.  அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து ஐரோப்பிய நிறுவனங்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறி விட்டன என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.

 

நல்லரசு போதும், வல்லரசு வேண்டாம் – இப்படி ஒரு கோஷம்.  நல்லரசாக இருந்ததன் பயன் – ஜம்மு & காஷ்மீரின் 50%க்கும் மேற்பட்ட பகுதி இன்று சீனாவிடமும் பாக்கிஸ்தானிடமும். இப்போது புரிகிறதா? வல்லரசு வேண்டாம் என்று சொல்பவர்களின் நோக்கம் இந்தியாவை பாக்கிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தாரை வார்ப்பதுதான்.

 

கீழடியில் கிடைத்த பொருட்கள் நமது பழம்பெருமையைக் குறிக்கலாம். மகிழ்ச்சி. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்? உடைந்த பானை ஓட்டை வைத்துக் கொண்டு அடுத்த வேளை கஞ்சி கூட காய்ச்ச முடியாது. ஆனால் அத்தகைய பழம்பெருமையை நினைவு கூர்ந்து அந்தப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் சரியான வழியாக இருக்கும். 

 

ஆனால் ரொட்டித்துண்டுக்கும் எலும்புத் துண்டுக்கும் விலைபோன கும்பல் 200 ரூபாய்க்கு அங்கே கடவுள் சிலை இல்லை, ஆகவே தமிழன் ஹிந்து அல்ல, இந்தியனும் அல்ல என்று வாங்கின காசுக்கு விசுவாசமாக கூவிக் கொண்டிருக்கிறது. அடி முட்டாள் கூட்டமே, சங்கத்தமிழ் காலம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கவனிக்கவும் சங்கத்தமிழ் காலம். இதே சங்கத்தமிழில்தான் ஹிந்து மதத்தின் கடவுள்களைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழன் ஹிந்து இல்லை என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள்? ஒரு வேளை சங்கப்புலவர்கள் என்றால் ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் சங்கப் புலவர்கள் என்று  நினைத்து விட்டீர்களோ? இருக்கலாம், கீழடியில் 40000 வருடத்துக்கு முற்பட்ட சிலுவை கிடைத்தது, 3000 வருடத்துக்கு முற்பட்ட இயேசுவின் பெயர் கிடைத்தது என்று ஏமாற்ற ஆரம்பித்திருக்கும் ஒரு கும்பலுக்கு இயேசு பிறந்ததாகச் சொல்லப்படுவதே 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது கூடத் தெரியவில்லை. அது சரி, ராஜாஜிக்கும் நேதாஜிக்கும் வித்தியாசம் தெரியாத மூடர் கூடம்தானே இது.  

 

22 செப்டம்பர் 2019.  உலக அளவில் முதன்முறையாக இந்தியா தனக்குரிய இடத்தை நோக்கி உறுதியாகநகர்வதைக் காட்டிய நாள்.  உலக அரங்கில் பல நூறு ஆண்டுகளாக உதாசீனத்தையும் அவமானத்தையுமே சந்தித்து வந்த பாரதம் முதன் முறையாகத் தனது பழம்பெருமையை மீட்டெடுக்க எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கிய நாள்.  இந்தியர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த கர்வத்தோடு பெருமிதம் கொள்ள வேண்டிய நாள். இந்த நாளை இனி ஒவ்வொரு வருடமும் பாரதத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும். ஜெய் ஹிந்த்.

 

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.