சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவைப் பற்றி 2014ல் என்ன சொல்லியது, 2018ல் என்ன சொல்கிறது?
அருண் ஜெயிட்லி ஆகஸ்ட் 26 2018

சர்வேதச நாணய நிதியம் (IMF) வருடா வருடம் தன் உறுப்பினர்களுடன் இரு தரப்பு விவாதங்களை நடத்துவது வழக்கம். பல்வேறு வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தி, பொருளாதார புள்ளி விவரங்களை ஆய்ந்து அவர்கள் ஓர் அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவர். அரசியல் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் வெளியிடும் அறிக்கைகள் அவரவர் அரசியல் சார்பு நிலையிலேயே அதாவது ஆளும் கட்சியா எதிர்க் கட்சியா என்பதைப் பொறுத்தே கருத்துகளும் இருக்கும். அதனால் நான் இந்தியாவைப் பற்றி IMF ஜனவரி/பிப்ரவரி 2014ல் அதாவது ஐக்கிய முற்போக்குக் கட்சியின் கடைசி ஆட்சி காலத்தில் வெளியிட்ட அறிக்கையையும் தற்போது மோடி அரசின் போது ஜூலை/ஆகஸ்ட் 2018ல் சொல்லியிருப்பதையும் அப்படியே அவர்கள் சொற்களில் உங்களிடம் பகிர்கிறேன். கீழே சொல்லியிருப்பது சொல் மாறாமல் IMF அறிக்கையில் இருப்பது மட்டுமே!

பண வீக்கம்

2014
முக்கிய பிரச்சினைகள்

தறுவாய்(சூழல்): சர்வதேச பணத் தட்டுப்பாட்டின் காரணமாக வெளியில் இருந்து வரும் அழுத்தம் இந்தியாவின் மேல் அதிகரித்து இந்தியாவின் சமநிலையற்ற பெரிய பொருளாதார நிலையின் மீது (அதிக பண வீக்கம், நடப்புக் கணக்கில் பெரிய தொகை, நிதி பற்றாக்குறை) கட்டமைப்பின் பலவீனங்கள் (முக்கியமாக அடிப்படை வசதி, மின்சாரம், சுரங்கத் தொழில்) ஆகிய குறைபாடுகளின் மேல் பார்வை சென்றது.

எதிர்பார்ப்புகளும் அபாயங்களும்

உலக அளவிலான முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு விநியோக கட்டுப்பாடு காரணங்களால் பத்து வருட கால வரலாற்றில் மிகக் குறைந்த அளவே வளர்ச்சி விகிதமாக இந்த வருடம் வளர்ச்சி 4.6%க்கு குறைய உள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் இரட்டை எண்களில் தான் மீதமுள்ள நிதி ஆண்டிலும் நிலைத்து நிற்கப் போகிறது. அதிக ஏற்றுமதிகளினாலும், வெளிநாட்டில் இருந்து அதிகத் தொகை இந்தியாவிற்கு அனுப்பபடுவதாலும், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாலும் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஆனாலும் எதிர்மறையான கொள்கைகளை இந்தியா பின்பற்ற பல பிரச்சினைகள் உள்ளன, அவை தொடர்ந்துவரும் அதிக பண வீக்கம், உள்நாட்டு வெளிநாட்டு சமநிலையின்மை, உள்நாட்டுப் அபாயங்களுடன் வெளியில் இருந்து வரும் தொடர் அழுத்தம் ஒன்றோடுன்று செயலாற்றும்போது ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை.

முக்கிய கொள்கை பரிந்துரைகள்:

  • தொடர்ந்து வரும் மிக அதிகமான பண வீக்கமே இந்தியா தற்போது எதிர்நோக்கும் சவால். அதிக வட்டி விகிதம் இந்தப் பண வீக்கத்தையும் எதிர்பார்ப்பையும் கட்டுப்படுத்தத் தேவையாக உள்ளது.
  • பன்னாட்டு நிதிச் சந்தையின் ஏற்ற இறக்கத் தொடக்கத்தினால் உண்டாகும் அழுத்தத்தை எதிர்கொண்டு சமாளிக்க ரூபாய் நெகிழ்வுத் தன்மை தான் முதல் தற்காப்பு சாதனமாக அமையும். அடுத்து கையிருப்பு நிதியை பயன்படுத்துதல், குறுகிய கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை அதிகப் படுத்துதல், நிதியை சரியாகக் கையாளுதல், மூலதன உள்வரவை அதிகரிக்க சட்ட திட்டங்களை தளர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • மேலும் நிதி ஒருங்கிணைப்பு தேவைப்படும். வரி மற்றும் மானிய சீர்திர்த்தங்கள் நிதி ஏற்றத்தாழ்வுகளை குறைக்கத் தேவைப்படும். நிதித்துறையை கண்காணிக்க மேம்படுத்தப்பட்ட முறைகள், வங்கிகளின் கடன் கொடுக்கும் தரத்தை கண்காணித்தல், பெருநிறுவன மற்றும் நிதித்துறை விகாரங்களின் பாதிப்புகளை கையாள மேம்படுத்தப்பட்ட தகவல் ஆகியவை தேவைப்படும்.
  • உற்பத்திகளை வழங்குவதில் உள்ள சிக்கல்கள், கட்டுமான சவால்கள், முக்கியமாக விவசாயம் மற்றும் மின்சார துறைகளில் இயற்கை வளங்கள் விலை மற்றும் ஒதுக்கீடு (கரி, இயற்கை வாயு, உரம் உள்ளிட்டவை) இவற்றில் கவனம் செலுத்தினால் வேகமான வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் ஏழ்மை ஒழிக்கப்படும்.

2018

“ஸ்திரத் தன்மை கண்ணோட்டத்துடனான பெரிய பொருளாதார கொள்கைகள் மற்றும் கட்டுமான சீர்திருத்தங்களில் முன்னேற்றம் நல்ல பலனைக் கொடுத்து வருகிறது. நவம்பர் 2016ல் நாணய மாற்று முயற்சியினால் உண்டான தடைகளைத் தொடர்ந்து ஜூலை 2017ல் பொருட்கள் மற்றும் சேவை வரி பயன்பாட்டிற்கு வந்ததால் நிதியாண்டு 2017/18ல் வளர்ச்சி 6.7க்குக் குறைந்தது. ஆனால் முதலீட்டில் உயர்வு ஏற்பட்டதால் மீண்டு வருகிறது. நிதியாண்டு 2017/18ல் பணவீக்கம் சராசரியாக 3.6%. இது 17 வருட கால அளவில் குறைந்த அளவாகும். நல்ல பருவ மழையினால் உண்டான மகசூலினால் ஏற்பட்ட உணவுப் பண்டங்களின் குறைந்த விலை, விவசாயத் துறையில் மேற்கொள்ளப் பட்ட சீர்திருத்தத் திட்டங்களின் பலன், உள்நாட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட தேவை, நாணய உயர்வு ஆகியவையே குறைந்த பணவீக்கத்துக்குக் காரணமாக உள்ளன. தேவை அதிகரித்தும், எண்ணெய் விலை உயர்வினாலும் மத்திய காலத்தில் பணவீக்கம் மே மாதம் 2018ல் 4.9% ஆக உயர்ந்ந்தது. இது ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த மத்திய புள்ளியான 4% ± 2% விட சற்றே அதிகம். நிதி ஆண்டு 2017/18ல் நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறை, இறக்குமதி அதிகரிப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% அதிகரித்தது.

2018 மார்ச் கடைசியில் மொத்த சர்வதேச இருப்புக்கள் 424.5 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு உயர்ந்தது (பொருட்கள் மற்றும் சேவைகளின் 8மாத வருங்கால இறக்குமதி தொகை). ஆனால் 2018ஜூன் மூன்றாவது வாரத்தில் $407.8 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு இறங்கியது. தொடர்ந்து இருக்கும் அதிகப்படியான வீட்டு பணவீக்க எதிர்பார்ப்புகளும், அரசாங்க நிதி பற்றாக்குறையும், கடனும் முக்கியமான பெரிய பொருளாதார சவால்களாக அமைந்துள்ளன. வளர்ச்சியை பாதிக்கும் பலவீனமான கடன் சுழற்சியினாலும் இறையாண்மை வங்கி உறவு ஏற்படுத்திய பாதிப்பாலும் அமைப்பு ரீதியான மிகப் பெரிய அபாயங்கள் விடாப்பிடியாய் தொடர்கின்றன.

அருகு கால பெரிய பொருளாதார கண்ணோட்டம் பரவலாக சாதகமாகவே உள்ளது. முதலீடுகள் வலுப் பெறுவதாலும், தனியார் நுகர்வு அதிகரிப்பாலும் நிதியாண்டு 2018/19ல் வளர்ச்சி 7.3%மும், 2018/19ல் 7.5%மும் எதிர்பார்க்கப்படுகிறது. தேவை நிலைமை இறுகுவதாலும், சமீபத்திய ரூபாய் மதிப்பு சரிவாலும் எண்ணெய் விலை உயர்வாலும், வீட்டு வாடகை கொடுப்பனவுகள், விவசாய குறைந்தபட்ச ஆதரவு விலைகள் ஆகிய காரணிகளால் நிதியாண்டு 2018/19ல் பணவீக்கம் 5.2% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SDP

நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம், எண்ணெய் விலையில் ஏற்றம், இறக்குமதிகளுக்கு வலுவான தேவை அதில் கொஞ்சம் வெளிநாட்டில் இருந்து வரும் பணவரவு சற்றே சாதகமாக அமைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்ததனால் ஜூன் 2018ல் பணவியல் கொள்கை இறுக்கப்பட்டது. Article IV of the IMF’s Articles of Agreementன் கீழ் நிதி ஒருங்கிணைப்பு மறுபடியும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. IMF வருடா வருடம் இரு தரப்புப் பேச்சு வாரத்தைகளை ஒவ்வொரு நாட்டுடனும் நடத்துகிறது. ஒரு குழு அந்தந்த நாட்டுக்கு சென்று பொருளாதார, நிதி தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் சேகரித்து நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகளை அதிகாரிகளிடம் விவாதிக்கிறது. தலைமையகத்துக்குத் திரும்பியவுடன் அதிகாரிகள் ஓர் அறிக்கை தயாரிக்கிறார்கள். இதுவே நிர்வாக குழுவால் விவாதத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
International Monetary Fund 700 19th Street, NW Washington, D. C. 20431 USA FY2018/19, with the FY2018/19 Union Budget deficit target of 3.3 percent of GDP (equivalent to 3.6 percent of GDP in IMF terms).
இருப்பு இருப்புநிலை சிக்கல்களை எதிர்கொள்ள நிதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கி மற்றும் பெருநிறுவன இருப்புநிலைக் குறிப்புகளை தூய்மைப்படுத்துவதை துரிதப்படுத்தி வங்கிக் கடன்களை உயிர்ப்பிக்க, கடன் கொடுக்கும் முறையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடுத்தர காலத்தில் கண்ணோட்டம் 7¾% வளர்ச்சியுடன் மேம்படுத்துவதற்கும், பெரிய அளவு நிதி மற்றும் கட்டமைப்பு கொள்கைகள் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மக்கள்தொகை பங்கீட்டிற்கும் உதவுவதற்கும் முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன.
பொருளாதார அபாயங்கள் கீழ்நோக்கி சாய்ந்துள்ளன. வெளியில் இருந்து வரும் அபாயங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்க உள்ளது, சர்வதேச நிதித் துறை மேலும் இறுக்கமான நிலையை அடையப் போகிறது. இந்த சர்வதேச பாதிப்பு நம் நாட்டையும் தாக்காமல் விடாது. வளர்ந்து வரும் பிராந்திய புவிசார் அரசியல் அழுத்தங்கள், வர்த்தக முரண்பாடுகளினால் வரும் சச்சரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உள்நாட்டில் சேவை வரி செயல்பாட்டில் உண்டான பிரச்சினைகள், இரட்டை இருப்பு நிலை விவரிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் மற்றும் கட்டமைப்பில் சீர்திருத்தம் ஆகியவற்றால் வரி வருமானத்தில் குறைபாட்டை சந்திக்க வேண்டியிருந்தது.

கருத்துரை
IMF 2014ல் சொன்னதையும் 2018ல் சொன்னதையும் ஆய்வு செய்து பார்க்கையில் நிதர்சனமாகத் தெரிவது – 2014ல் உயர்ந்த பணவீக்கம், பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கில் பெரிய அளவில் பற்றாக்குறை, உள்கட்டமைப்பில், மின்சாரத் துறை, இயற்கை வளங்களின் பங்கீடு ஆகிய இடங்களில் வளர்ச்சியின்மை அல்லது தேக்கம். ஆனால் நாம் இப்பொழுது அந்நிலையில் இருந்து வெகு தூரம் பயணப்பட்டு வந்திருக்கிறோம். கடந்த நாலு ஆண்டுகள் வரிசையாக பல நல்ல சீர்திருத்தங்களைப் பார்த்திருக்கிறது, சட்டமன்றத்தில் மற்றும் இதர விஷயங்களிலும். அமைப்புமுறை பெரிய அளவில் தூய்மைப் படுத்தப் பட்டிருக்கிறது, மறைமுகத் தன்மை நீக்கப்பட்டு தெளிவாக விஷயங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெரியுமாறு மாற்றப்பட்டிருக்கின்றன. தெளிவின்மை நீக்கப்பட்ததால் முடிவெடுக்கும் ஆற்றல் மிகுந்துள்ளது. அதனால் நம் நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டு மற்ற நாடுக்களைவிட தனித்து உயர்வாக நிற்கிறது. உங்கள் அனைவரையும் இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவை எவருக்கும் கிடைக்கும் வகையில் பொது வெளியில் உள்ளன.
~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.