
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி – அதன் சூழ்நிலையும் தரமும் – அருண் ஜெயிட்லி
மத்திய புள்ளியியல் அமைப்பு 1993-94 முதல் 2011-12 வரையான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை இப்பொழுது கணக்கிட்டுள்ளது. வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கணக்கு விவரங்கள் தேசிய கணக்கு புள்ளி விவர அமைப்பின் ஆலோசனை குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது ஏற்றுக் கொண்டபிறகு அரசு அங்கீகாரம் பெற்ற புள்ளிவிவரங்களாக அவை எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த புள்ளிவிவரங்களை வைத்து ஒரு வல்லுநர் குழு அலசி ஆராய்ந்ததில் சந்தை விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகையும், காரணி செலவில் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகையும் பழைய தொடர் 1994-95 முதல் 2002-03 வரையான காலத்தை விட குறைவாக உள்ளது. ஆனாலும் 2003-04 – 2011-12 காலத்தை விட அதிகமாக உள்ளது. 2012க்குப் பிறகான புதிய தொடரின் எண்ணிக்கைகள் இப்பொழுது வெளியிடப்பட்டு பொது வெளியில் உள்ளன. எண்ணிக்கைகளில் உள்ள முரண்பாட்டின் காரணம் பயன்படுத்திய சூத்திரம்/விதிமுறை என்றே தெரிகிறது. இதை வல்லுனர்கள் சரிபார்த்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த எண்ணிக்கைகள் சொல்வது என்ன?
2003-04ல் உலக நாடுகள் அனைத்தும் ஒரு மிகப் பெரிய ஏற்றகாலத்தைப் பார்த்தது. அதனால் உலக அளவில் நல்ல பொருளாதார முன்னேற்றம் இருந்தது. வளரும் நாடுகளும் இதனால் நல்ல வளர்ச்சியை கண்டன. அதனால் இந்தியாவும் 2003முதல் 2008வரை கூடுதல் வளர்ச்சிப் பெற்றதில் ஆச்சரியமில்லை. இந்த வளர்ச்சி 2008வரை, சர்வதேச நெருக்கடி நிலை உருவாகும் வரை தொடர்ந்தது. 2004ல் அடல் பிகாரி வாஜ்பேயி அரசாங்கம் ஆட்சியை விட்டு போனபோது 8%+ வளர்ச்சி விகிதத்தில் இருந்தது பொருளாதார வளர்ச்சி.
அதையும் தவிர வாஜ்பேயி அரசு 1991ல் இருந்து 2004வரை செயல்படுத்தத் தொடங்கியிருந்த முன்னேற்ற திட்டங்களின் பலனையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2004ல் அனுபவித்தது. மேலும் உலகளாவிய முன்னேற்றக் காற்று இந்தியாவுக்கும் வீசியதால் இந்தியாவின் பொருளாதாரமும் இதனால் பயனடைந்தது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இந்தத் தேன் நிலவு காலமும் முடிவுக்கு வந்தது. இந்த சமயத்தில் இந்தியாவில் பெரிய சீர்திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. வளர்ச்சியும் சரியத் தொடங்கியது. இதை தூக்கி நிறுத்த காங்கிரஸ் அரசு இரண்டு முக்கிய வேலைகளை மேற்கொண்டது. முதலாவதாக நிதி ஒழுக்கம் காற்றில் பறக்கவிடப்பட்டது. இரண்டாவதாக அரசு வங்கிகளை விதிகளை தளர்த்தி அதிகக் கடன் கொடுக்கத் தூண்டியது. இதனால் நாளை பிரச்சினை வரும் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வளவு தகிடுதத்தம் செய்தும் 2014ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட்டு விலகும்போது அதன் முந்தைய மூன்று வருட வளர்ச்சி மத்திமத்துக்கும் கீழாகவே இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆ ட்சியின் macro ஸ்திரத்தன்மை
நடப்புக் கணக்கு பாக்கி
ஐமுகூ(UPA) அரசு வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள்/கொள்கைகள் பொருளாதரத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தியது.
1. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் பாசிடிவ் ஆக இருந்த நடப்புக் கணக்கு பாக்கி ஐமுகூயின் முதல் ஆட்சி காலத்தில் எதிர்மறையாக மாறி இரண்டாவது ஆட்சி காலத்தில் இன்னும் கீழிறங்கியது.
- 1999 – 2004 :
+0.5%
- 2004 – 2009 :
-1.2%
- 2009 – 2014 :
-3.3%
- 2014 to now :
-1.2%
வாஜ்பேயி அரசு விட்டு விலகும்போது இருந்த பாசிடிவ் நிதி நிலைமை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விலகும் போது அதள பாதாளத்தில் இருந்தது.
பண வீக்கம்
சராசரி நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கத்துடன்:
2. ரெட்டை இலக்கத்திற்கு உயர்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.
சராசரி நுகர்வோர் விலை குறியீட்டு எண்
பணவீக்கத்துடன் (உலக வங்கி சொல்லிய பார்முலாவில்)
- 1999 – 2004 :
4.1%
- 2004 – 2009 :
5.8%
- 2009 – 2014 :
10.4%
- 2014 to now :
4.7%
வங்கிக் கடன்
வங்கிக் கடன் தொகையின் வளர்ச்சி விகிதம்.
Source – RBI
இந்த எண்ணிக்கைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களின் வளர்ச்சியை காட்டுகின்றன. வங்கிகளின் முக்கியப் பணி வளர்ச்சியை ஊக்குவிப்பது/பெருக்குவது. விவசாயத்துக்கும், புதிய தொழில் தொடங்கவும் பண உதவி செய்து பொருளாதார சுழற்சியை சரியாக வைத்திருப்பதும் அதன் வேலை. ஆரோக்கியமான வங்கிகளே நல்ல பொருளாதார நிலைமைக்கு எடுத்துக்காட்டு.
ஆனால் UPA முதல் ஆட்சியிலும், இரண்டாம் ஆட்சியிலும் வங்கிகள் அதீதமான கடனளிப்பு செய்திருப்பதைக் காண முடியும். அதுவும் சரியான இணை ஈடு இல்லாமல், பொறுப்பற்ற தன்மையில் வங்கியியல் மதிப்பீடு இல்லாமல் செயல்பட்டிருக்கின்றன. தேவைக்கதிகமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் இப்பொழுது செயல்படாமல் வாளா இருக்கின்றன. அதனால் வங்கிகள் பெரும் சுமையை தாங்க ஆரம்பித்தன.
செயல்படா தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்களாக மாறின. செயல்படாத சொத்துக்களை மறு சீரமைப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டன. இதையும் செய்து கடன்களை செயல்பட்டும் சொத்துக்களாக மாற்றி காண்பித்தன வங்கிகள். கணக்குகளை மாற்றி காண்பித்து வங்கிகள் கடும் கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருந்தாலும் தண்ணீரில் நன்றாக மிதப்பது போல தோற்றத்தை 2012-13 காலகட்டத்தில் ஏற்படுத்தியது UPA அரசு.
ஆனால் 2014க்குப் பின் தான் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தது. வங்கிகளால் மென்மேலும் கடன் கொடுக்க முடியாத நிலையை அடைந்தனர். வங்கிகள் ஆரோக்கியம் ICUவில் அனுமதிக்கப்படும் நிலையில் அதாவது திவால் ஆகும் நிலையில் இருப்பதை அறிந்து உயிரை மீட்க தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க ஆரம்பித்தது.
நிதி பற்றாக்குறை
1999-2000 காலகட்டத்தில் இருந்து நிதி பற்றாக்குறை இவ்வாறு:
அரசாங்கம் தகுதிக்கு மீறி செலவு செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வருங்கால சந்ததியினர் தலையில் கடன் சுமையை ஏற்றி வைக்கும் நிலைமை ஆகும். பின்னாளில் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் செலவழிக்கப்படாமல் கடன் தொகையும் வட்டியையும் செலுத்த தான் சரியாக இருக்கும். 2008 தொடங்கி உலக பொருளாதார வளர்ச்சி காலம் முடியும் போது UPA நிதி ஒழுக்கத்தைத் துறந்து வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டின் நிதி நிலைமையை சீர்குலைத்தது.
முதல் ஐந்தாண்டு ஆட்சியில் UPA-1 உலகளாவிய பொருளாதார வளர்ச்சியாலும் NDA விட்டு சென்ற நல்ல பணிகளின் பலனாலும் UPA அரசும் 8%+ வளர்ச்சியை அனுபவித்தது. மற்ற நாடுகளின் வளர்ச்சியுடன் நாமும் தொடர்புடன் இருந்ததால் நாமும் அவர்களுடன் சேர்ந்து வளர்ச்சியை அனுபவித்தோம். ஆனால் அடிப்படையில் UPA அரசு எந்த தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்தாதால் அந்த வளர்ச்சி இறுதியில் ஒரு கானல் நீரே என்று தெரிய வந்தது.
இதன் முக்கிய பாதிப்பு ஒரு நாட்டின் முதுகெலும்பாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய வங்கிகள் தங்களது பொறுப்பற்ற கடன் கொடுத்தலால் ஏற்பட்ட சீர்குலைப்பு!
1999-2017கால அளவில் நடந்த வரவு செலவு கணக்கையும் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் அறிய 1999 முதல் இன்று வரையான வங்கிகளின் புள்ளிவிவரக் கணக்கும், அதன் ஆய்வும் மிகத் தேவை.
வளரும் சந்தைகளின் செயல்திறன்
இதே காலகட்டத்தில் வளரும் சந்தைகளை ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் முக்கியமாகிறது. நம் நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை அறிவ இவ்வாய்வி தேவை.
2004-08 சராசரி வளர்ச்சி
- இந்தியா : 8%
- சைனா : 11.6%
- வளரும் சந்தைகள் : 7.5%
(இந்தியா சைனா உட்பட)
2009-2013 சராசரி வளர்ச்சி
- இந்தியா : 7.4%
- சைனா : 9%
- வளரும் சந்தைகள் : 5.4%
2004-2014 சராசரி வளர்ச்சி
- இந்தியா : 7.7%
- சைனா : 10.3%
- வளரும் சந்தைகள்: 6.4%
2014-2017 சராசரி வளர்ச்சி
- இந்தியா : 7.4%
- சைனா : 6.9%
- வளரும் சந்தைகள் : 4.5%
~பல்லவி