
இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன?
முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா?
கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள்
கம்யூனிஸ்ட்கள் போராளிகள் என்ற போலி வேஷத்தில் அலையும் தேசவிரோதிகள். எந்த கம்யூனிஸ்ட்க்கும் இந்த நாடும், இந்திய ஜனநாயகம் மீது மதிப்பும், மரியாதையும் இருந்ததில்லை. அந்த போலி போராளிகளின் ஒரே குறிக்கோள் சீன பாணிதான்; கம்யூனிச சித்தாந்தந்தை எதிர்பவர்களை நிர்மூலம் ஆக்குவது.
முன்னாள் கேரளா மின்சாரத்துறை அமைச்சர் மணியின் மேடை பேச்சு இதோ…
“நாங்கள் பல அரசியல் எதிரிகளை கொலை செய்தோம்” என்கிறார் கம்யூனிச கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்.
மேற்கு வங்க 32 வருட கம்யூனிச ஆட்சி இதைவிட மோசம்.
இந்த கம்யூனிச, மாவோ தேசவிரோதிகள் எல்லாவித மத அடிப்படைவாதி, தீவிரவாத, பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து நாட்டின் ஸ்திரத்தன்மயை குலையச்செய்வதே இவர்களின் வேலை.
தேசவிரோதிகள் இந்த கம்யூனிஸ்டுகள்
1962 சீனாவுடன் நடந்த போரில் காயம்பட்ட இந்திய இராணுவ வீரர்களுக்கு இரத்தம் குடுக்க வேண்டாம் என கொக்கரித்தனர் இந்திய கம்யூனிஸ்டுகள். கட்சி மட்டும் தான் பிளவு பட்டது! சீன நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையும் மதிப்பும் பிளவுபடவில்லை, குறையவும் இல்லை! இன்று வரை இந்தியர்களுக்கு எதிராகவே எல்லா முடிவும் எடுத்துவருகிறார்கள்.
சமீபத்திய சீன தாக்குதல்
எந்த அரசியல் கூட்டணியில் இருந்தாலும் பாரபட்சமின்றி தேசவிரோதிகளுக்கு ஆதரவாக முதலில் களமிறங்கும் மானமில்லாதவர்கள் இவர்கள். சமீபத்திய சீன தாக்குதல் விவகாரத்தில்கூட உங்கள் கம்யூனிஸ்ட் ஆதரவு நண்பர்களின் முகநூல் பதிவுகளை பாருங்கள். இறந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தவோ, சீனாவை கண்டித்து எழுதவோ அவர்களுக்கு மனதில்லை. மாறாக சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசையும் இந்திய ராணுவத்தையும் குறைகூறவும் முன்னில் இருக்கிறார்கள்.
போராளிகளின் புது டுபாக்கூர் PR நாயகன் பினராயி விஜயன் கூட தன் முகநூல் பதிவில் ராணுவவீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி பதிவிடவில்லை. சினிமாகார்களின் மறைவுக்கு பதிவெழுத நேரமிருக்கிறது. எவ்வளவு அசிங்கமான தேசவெறுப்பு மனநிலயில் இருக்கிறது கம்யூனிஸ்ட்களின் அழுகிய மனம்!
JNU, பிற கல்லூரி பல்கலைக்கழக போராட்டங்களில் இவர்களின் ஆதரவு அடிப்படைவாத பிரிவினை பேசும் இசுலாமிய அமைப்புகளுக்கே. பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் கூட கம்யூனிஸ்ட்கள் சீன தாக்குதல் பற்றி சீனாவுக்கு எதிராக கண்டனம் வெளியிடவில்லை.
D Raja: we need to resist US efforts to drag us into their alliance
Sitaram Yechuri stressed on principles of Panchsheel
Pinaki Mishra BJP: we stand with the government fully and unconditionally
— Sanket संकेत (@sanket) June 19, 2020
அமெரிக்காவுடன் நெருங்காதேன்னு அரசுக்கு வலியுறுத்தியது தான் அவர்களின் அரசியல். சீனா விரும்புவதும் இந்தியா அமெரிக்கா அரசுடன் நெருக்கமாகமல் இருப்பதே.
தமிழ்நாட்டில் செத்துப்போனதாக கருதிய இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த திமுகவை குறை சொல்வதா அல்லது நகை கடன் தள்ளுபடிக்கும், 72,000/- ரூபாய்க்கும் ஆசைப்பட்டு இவர்களை ஜெயிக்க வைத்து பாராளுமன்றம் அனுப்பிய தமிழ்நாட்டு மக்களை குறை சொல்வதா?
~ @serukku