12
Image Source: mapsofindia.com

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 29 செப்டெம்பர் 2015 அன்று தனது பசுமை நெடுஞ்சாலை கொள்கையை அறிவித்தது. இதனை அடுத்து நாட்டின் முதல் பசுமை நெடுஞ்சாலை டெல்லி தலைநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் மாசை கட்டுப்படுத்தவும் Eastern Peripheral Expressway என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தமிழ்நாடு  தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

1
Eastern Peripheral Expressway. Image Source: The Indian Express

இதை பற்றிய கட்டுரை drivespark.com என்ற இணையதளத்தில் முதன் முதலில் வெளியானது. அதை இங்கு மறுபதிவு செய்துள்ளோம்

7
Image Source: DTNext.in

மொத்தம் 274 கி.மீ. தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலயில், 250 கி.மீ. வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வரை தேசிய நெடுஞ்சாலையானது 179B என்ற பெயரிலும், அரூர் முதல் சேலம் வரை அமைக்கப்பட உள்ள புதிய நெடுஞ்சாலை 179A என்ற பெயரிலும் இயங்கும்.

இந்த தேசிய நெடுஞ்சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ. தூரத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வழ்ஹியக செல்லும் இந்த நெடுஞ்சாலை 122 கிமீ தொலைவிற்கும் அமைக்கப்பட உள்ளது. , திருவண்ணாமலையில் இருந்து  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ தூரம் சென்று மீண்டும் தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக 53 கிமீ தூரம் செல்லும் வகையில் இச்சாலை அமைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் மாநகரம் வரை 38 கி.மீ. இந்த நெடுஞ்சாலையில் அடங்கும்.

தற்போது சென்னையிலிருந்து சேலம் செல்ல உளூந்தூர்பேட்டை வழியாக 360 கி.மீ., சுமார் 6 மணிநேரத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. புதிதாக அமக்கப்படவிருக்கும் பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவு சுமார் 60 கி.மீ. குறைந்து. 3 மணிநேரத்தில் இலக்கை சென்றடைய உதவும். அதாவது, தற்போதுள்ள பயண நேரத்தைவிட இது பாதியாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை-சேலம் இடையிலான போக்குவரத்து மேம்படுவதோடு, ஆன்மிக தலமான திருவண்ணாமலை நகரமும் இந்த நெடுஞ்சாலையின் மூலம் பயம் பெறும்.

3
Image Source: NGHM India

மேலும், இது Controlled access highway என்ற நவீன கட்டமைப்பு வசதியுடன் 8 வழித்தட சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் வாகனங்கள் பாதுகாப்பாக நெடுஞ்சாலயை விட்டு வெளியேறவும் நெடுஞ்சாலக்குள் நுழையவும் எதுவாக இருக்கும்.

அதேபோல, சென்னையில் இருந்து சேலம் வரையோ அல்லது சேலம்-சென்னைக்கு நேராக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலும், பாதுகாப்பாகவும் கடந்து செல்ல முடியும். இந்த சாலை சிக்னல்கள், சாலை சந்திப்புகள் இல்லாத வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. இதனால், மிக சுலபமாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால், பயண நேரம் பாதியாக குறையும்.

இதுபோன்ற மிக நவீன சாலை கட்டமைப்பு திட்டத்தை முதல்முறையாக தமிழக அரசு செய்ய இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே இது இரண்டாவது பசுமை வழித்தட நெடுஞ்சாலையாகவும் அமைய இருக்கிறது.

இதேபோல, சென்னை – பெங்களூர் இடையில் புதிய விரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்

சென்னை – பெங்களூர் இடையிலான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலக பணி, வர்த்தக விஷயமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து கட்டமைப்பை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது

4
Image Source: thebetterindia.com

சென்னையிலிருந்து பெங்களூரை சாலை மார்க்கமாக அடைவதற்கு இப்போது மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில், சென்னையிலிருந்து வேலூர் – கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-7 தற்போது பிரதான போக்குவரத்து தடமாக இருக்கிறது. 372 கிமீ தொலைவுடைய இந்த தடத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயணிக்க வேண்டிருக்கிறது

அதேபோன்று, சித்தூர்-கோலார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்4 வழியாக செல்லும்போது 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இதில், சித்தூர் பகுதியில் இருவழித்தடமாக செல்வதால், விபத்து ஆபத்தும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. மற்றொரு வழியானது கிழக்குதொடர்ச்சி மலை வழியாக செல்வதால், அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.

5
Image Source: team-bhp.com

இந்த சூழலில், சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சாலையானது, சென்னை எல்லைப்பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒசகோட்டை வரை அமைக்கப்பட இருக்கிறது

ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பளம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வழியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 250 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை திசைக்கு 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை 90 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.

6
Image Source: The Hindu

இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஒருவழியில் 45,000 முதல் 60,000 கார்கள் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இந்த வழித்தடத்தில் சென்னை பெங்களூர் இடையில் பயண நேரம் 4 மணிநேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மங்களூர் வரை இந்த சாலையை நீடிக்கும் திட்டமும் இருக்கிறது.

இந்த வழித்தடம் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்த மையங்களை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த சாலை உறுதுணையாக அமையும்.

வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்வீராணம் மற்றும் பானவரம் பகுதிகளில் புதிய தொழிற்பேட்டை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும், இந்த வழியாக சென்னை- பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஜப்பானிய நிறுவனம் நடத்திய ஆய்வுகளும் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை ஈர்த்துள்ளன. ராணிபேட்டை- பொன்னப்பன்தாங்கல்- அரக்கோணம் இடையிலான பகுதிகளில் நில மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளன

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மறுபுறத்தில் பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள ஒசக்கோட்டை, நரசப்புரா, கோலார் வரையிலான பகுதிகளில் உள்ள வாகன நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் இந்த சாலை சிறப்பான போக்குவரத்தை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.