pmbjp medicine jan aushadhi

உணவு, உடை, உறையுள் மட்டுமே நாம் வாழ அத்தியாவசியமாக இருந்தது. இன்று மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்க தான் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய அளவில் மக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு சென்றார்.

“The poor must have access to affordable medicines; the poor must not lose their lives because of lack of medicines. That’s why Jan Aushadhi Kendras have been planned across the country”

— என்பதே பிரதமர் மோடியின் குறிக்கோள்.

ஜன் ஔஷதி மருந்தகங்கள் மத்திய அரசால் 2008ல் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 2015ல் இந்த திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நவம்பர் 2016ல் இத்திட்டத்திற்கு மீண்டும் ஒரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் இப்பொழுதைய பெயர் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) ஆகும். இது வெறும் பெயர் மாற்றம் மட்டும் இல்லை. 2014 வரை வெறும் 80 மருந்தகங்களே இருந்த நிலையில், மோடி பிரதமரானதும் கிட்டதட்ட 3000 கடைகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுயும் பெருமளவில் மோடி அரசால் உயர்த்தப்பட்டது.

ஏழைகள் மருந்து வாங்க முடியாத நிலை இனி இருக்கக்கூடாது என்பதற்கு நாடு முழுவதும் ஜன் ஔஷதி மருந்தகங்கள் தொடங்கப் பட்டது. இந்தியா முழுவதும் தற்போது மாநில வாரியாக உள்ள ஔஷதி மருந்தகங்களின் எண்ணிக்கை:

S.No. State/UT PMBJKs till date
1 Andhra Pradesh 115
2 Assam 46
3 Arunachal Pradesh 24
4 Bihar 67
5 Chandigarh 5
6 Chhattisgarh 188
7 Dadar & Nagar Haveli 7
8 Delhi 37
9 Gujarat 234
10 Haryana 57
11 Himachal Pradesh 25
12 J & K 28
13 Jharkhand 45
14 Karnataka 193
15 Kerala 305
16 Madhya Pradesh 75
17 Maharashtra 188
18 Manipur 36
19 Mizoram 6
20 Nagaland 11
21 Odisha 60
22 Punjab 62
23 Rajasthan 86
24 Tamil Nadu 202
25 Telangana 65
26 Tripura 21
27 UP 422
28 Uttarakhand 86
29 West Bengal 31

ஜெனிரிக் மருந்து என்றால் என்ன?

ஜெனிரிக் மருந்துகள் என்பது , பிராண்ட் மருத்துவகை போன்றதே. உதாரணமாக திருப்பூரில் உற்பத்தி ஆகும் பனியன்கள் ருபாய் 200 க்கு வாங்க முடியும், அதே பனியன் பிராண்டட் ஆகா ஸ்டிக்கர் ஒட்டி வரும் பொது ருபாய் 2000 ஆகும். ரெண்டுக்கும் விதியசம் ஓட்டபடும் ஸ்டிக்கர் மட்டுமே.

ஜன் ஆயுஷ் கடைகளில் இந்த குறைந்த விலை ஜெனிரிக் மருந்து வகைகள் கிடைக்கும்.

திட்டத்தின் நோக்கம் என்ன?

ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த உள்நாட்டிலேயே தயாரிப்பான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உள் நாட்டில் மருந்து உற்பத்தி அதிகரிக்கும் , மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். இன்று வரை 2742 மருந்தகங்கள் இந்திய முழுவதும் ஆரம்பிக்க பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் 202 கடைகள் உள்ளது.

மருந்து வாங்குதல்

தமிழ் நாட்டில் உள்ள மொத்த ஜன் ஔஷதி மருந்தகங்களின் (PMBJK) பட்டியல் மற்றும் முழு விவரங்கள் BPPI இணையதளத்தில் உள்ளது. முன்னர் குறிப்பிட்டது போல் தமிழ் நாட்டில் உள்ள 202 கடைகளிலும் நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் சென்று உங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ளாம்.

jan aushadhi stores list

கீழ் கண்ட இணைய முகவரியில் உங்களுக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் எது என்ற தெரிந்துகொள்ளலாம்.

மருந்தாக முகவரி

ஜன் ஔஷதி மருந்து கடைகள் ஆரம்பித்தல்.

ஒரு சராசரி மனிதனாக நீங்களே ஒரு ஜன் ஔஷதி மருந்து கடை ஆரம்பிக்க முடியும். உங்கள் சுய தொழிலாக இதை செய்து நீங்களும் சிறு வருமானம் ஈட்ட முடியும். அப்படி ஆரம்பிக்க என்ன தேவை?

  1. உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு கடை , அல்லது லீஸ் முறையில் ஒப்பந்தம் செய்ய பட்ட ஒரு கடை .
  2. கடையின் அளவு குறைந்தது 120  சதுர அடிகள் இருக்க வேண்டும்.
  3. கணினி அறிவுடன் கூடிய மருந்தாளுனர் ஒருவர் வேலையில் சேர்த்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கபட வேண்டும்.
  4. ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

  1. முதலில் இந்த கடையை நீங்கள் ஆரம்பிக்க மத்திய அரசு 2.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கும்.
  2. விற்கும் மருந்துகளுக்கு MRP இல் இருந்து (வரி இல்லாமல்)  20% உங்களுக்கு வழங்கபடும்.

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற கீழ் கண்ட இணைய முகவரிக்கு செல்லுங்கள்.

http://janaushadhi.gov.in/data/Individuals_December_2016.pdf

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலும் விபரங்களுக்கு BPPI இணையதளத்தை பார்க்கவும்

முடிவுரை

சித்தர்களும் ஆழ்வார்களும்  நமக்கு வாழ்வியல் முறையில் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என விளக்கும் பல குறிப்பிகளை விட்டு சென்றார்கள். அதை பின்பற்றி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல வருடங்கள் வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் தோன்றிய முற்போக்கு சிந்தனை வாதிகள், நமது வாழ்க்கையை கேளி செய்து, நம்மை மேற்க்கத்திய நாகரிக அடிமைகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். அதன் பலனாக இன்று நாம் நம் தாத்தனும் பாட்டனும் கண்டிராத கேள்விப்படாத பல வியாதிகளை பார்க்கிறோம்.

நம் வாழ்க்கை முறைகள், சாப்பாடு முறைகளை, ஐதீகங்களை அழித்து, குற்றால அறிவியில் குளித்த தமிழன் இன்று நயகராவில் குளிக்கிறான் என முற்போக்கு சிந்தனை வாதிகள் பெருமையாக பேசலாம். அதை கேட்க நமக்கும் சந்தோஷமாக இருக்கும். அனால் நயகராவில் குளிக்கும் தமிழனின் அடுத்த தலைமுறை வயகரா இல்லாமல் கட்டில் அறை செல்ல முடியாத நிலை வரும் என்பதே நிதர்சனமான உண்மை.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

3 Replies to “ஜன் ஔஷதி திட்டம் (PMBJP): பிரதமர் மோடியின் குறைந்த விலை மருந்தகங்கள்”

  1. அருமையான மற்றுமொரு பதிவு. மேலும் எழுதுக, பொது மக்களுக்கு இதனை கொண்டு சேர்த்தலே சிறப்பு. மோடியின் சாதனையில் மற்றுமோர் மயில் கல், நன்றி.

  2. Address can’t hear,where it is,in Cuddalore dt,tamil nadu.no addvertisement,so that,it is invisible.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.