
கமல்ஹாசன் எனும் காதறுந்த ஊசி…
தான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும், (இந்து) கடவுள் மறுப்பு கொள்கை மூலமாக அவரது அனைத்து திரைப்படங்களிலும் இந்து கடவுளை கேலி செய்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அறியாதவரா நீங்கள்? தவறில்லை.
உங்களுக்காக தானே அப்படிபட்ட படங்களை கொண்டு அவரின் முகத்திரையை முழுவதுமாக கிழித்தெறிந்துள்ளார் பாண்டே அவர்கள்.
இருப்பினும், இது திரைக்காக அவர் மேற்கொண்ட முயற்சி தான், அவர் இந்து விரோதி இல்லை என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் சில பல நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு தான் இந்த பதிவு.
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து” என்ற ஒற்றை வரியின் மூலமாக தான் ஒரு அக்மார்க் இந்து விரோதி என்பதை நிரூபணம் செய்துள்ளார் உலக நாயகன்.
அதுவும் தன் கட்சி வேட்பாளருக்காக வோட்டு சேகரிக்கும் பொழுது, இந்து மதம் அல்லாத வேற்று மத மக்கள் அதிகம் சூழ்ந்திருக்கும் வேளையில் இப்படி பட்ட ஒரு பேச்சின் மூலமாக அவர் தேர்தல் விதி முறையையும் மீறியுள்ளார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு திறன் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த பதிவு கமல்ஹாசன் வீசிய தீய விஷத்தை பற்றி ஆராய்ச்சி செய்யவோ, அல்லது அவர் சொன்னது போன்று கோட்ஸே தீவிரவாதியா என்று விவாதிக்கவோ இல்லை.
இது போன்று இவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் தீயை கக்க யார் காரணம்? இவர்களை பின்னிருந்து இயக்கும் தீய சக்திகளா? இல்லை.
இவர்களது இந்து மத வெறுப்பா? அது மட்டுமே தான் காரணமா? இல்லை.
இந்துக்களாகிய நாம் தான் இதற்கு முழு முதற்காரணம்.
ஆம், இந்து மதத்தை பற்றி யார் என்ன பேசினாலும் கேட்டது போய், இன்று யார் ஏசினாலும் கூட நின்று கேட்டுவிட்டு துடைத்து போட்டு விட்டு போவதே காரணம்.
நாம் யார் மதத்தையும் மனதினையும் பாதிக்காவண்ணம் நடக்க வேண்டும் என்று சிறுபிள்ளை முதலே ஊட்டி வளர்க்கப்பட்டுளோம். உண்மை.
மற்ற மதத்தினை போன்று, நம் கடவுளை வணங்காத மற்ற மனிதர்களை வெறுக்கும் எண்ணங்கள் சிறிதும் நம் மனதில் புதைக்கப்பட்டதில்லை. இதன் பொருட்டே நாம் இன்றும் நம்மை போன்றே பிற மதங்களை பின்தொடரும் அனைவரையும் ஒன்றாக பார்க்கும் எண்ணம் கொண்டு வளர்ந்து வந்துள்ளோம்.
தொன்றுதொட்டே இந்துமதம் ஒன்றே கடவுள் இல்லை என்ற ஆத்திகத்தையும் ஆதரித்து வந்துள்ளது. அவர்களையும் சக மனிதர்களாகவே பாவித்துள்ளது இந்து மதம்.
இந்து மதம் ஒன்றே இன்றைய சமூக விதிமுறைக்கேற்ப தன்னை மெருகேற்றி கொண்டுள்ளது.
கோயில் இல்லா ஊரில் வாழ கூடாது என்று நம் கிராமபுரத்தில் ஓர் அருமையான பழமொழி உண்டு. கோவில் என்று ஒன்று இருந்தால் அதன் அருகாமையில் நீர் பஞ்சம் தீர்க்க ஓர் தெப்பக்குளம் இருக்கும்.
கல்லுக்கு எதற்கு வீடு என்று கேலி பேசிய நயவஞ்சகரை நம்பி கோவிலையும் வீழ்த்திவிட்டோம். அதன் மூலம் பலருக்கு புரிந்து வந்த நற்காரியத்தையும் நிறுத்திவிட்டோம். அதனால் கோவிலே இல்லை குளம் எதற்கு என்று அதையும் வீட்டுமனை ஆக்கி குடிபுகுந்து விட்டோம்.
சரி அப்படியும் இந்த கும்பல் நிம்மதி அடைந்ததா என்றால், இல்லை.
ஒரு குடம் பால் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் அந்த பால் பசியிலிருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்றி இருக்குமே என்று வஞ்சகமாக ஏச துணிந்தனர்.
யார் என்று திரும்பி பார்த்தால், உணவு பொருட்களை கொண்டு மேனா மினுக்கி கொள்ள சற்றும் தயங்காத குள்ளநரி கூட்டங்கள் தான்.
கண்ணுக்கு வெள்ளரிக்காய் குளிர்ச்சி, மேனி அழகிற்கு கத்தாழை முதல், ஆப்பிள் தொடங்கி அண்ணாச்சி பழம் முதல் ஆரஞ்சு வரை என்று அனைத்து வகை பழங்களுடன் சேர்த்து தயாரித்த சோப்பு கொண்டே கை கழுவும் கூட்டம். இப்படி பல்லாயிரம் குழந்தைகள் பசியாற வேண்டிய பொருட்களை கொன்று தன் மேனி அழகிற்கு மெருகேற்றி கொள்ள துடிக்கும் கூட்டங்கள் தான் இதை பற்றி சிறிது யோசிக்குமா?
ஆனால் இவர்கள் குறை கூறுவதோ பக்தன் ஒருவன் தன் இறைவனுக்கு செய்யும் காரியங்களை தான். உண்மையில் இவர்கள் கரிசனம் அந்த பசியுள்ள குழந்தைக்காக அல்ல. தான் வெறுக்கும் ஒரு கடவுளுக்கு கிடைக்கும் அந்த மரியாதையை கண்டு தான்.
பல கோவில்களை கட்டி திண்ணை முதல் கருவறை வரை அன்னதானம் செய்து வந்த இந்து தர்மத்தை அழிக்க துடிக்கும் இவர்களுக்கு எப்படி தெரியும், தர்மத்திற்கு பெயர் போன மதம் இந்த இந்து மதம் ஒன்றே என்று.
ஒருபுறம் சில கிருத்துவ மதவாதிகளின் சூழ்ச்சி, ஏழை எளிய மக்களை மூளை சலவை செய்து மதங்கள் மாற்றி கொண்டிருக்கின்றது. இவை மறைந்திருந்து பின்புறமாக தாக்கினால், மறுபுறம் சில இஸ்லாமிய மதவாதிகளோ உலகம் முழுவதும் நேரடி தாக்குதல் தொடுத்துள்ளார்கள்.
கயவர்கள் எங்கும் உண்டு, நல்லோர்களும் எல்லாவிடங்களிலும் உண்டு. இங்கு நாம் சுட்டி காட்ட விரும்புவது பசுந்தோல் போர்த்திய புலி, இல்லை இல்லை, குள்ளநரிகளை மட்டுமே.
இவர்களின் தாக்குதலின் தாக்கத்தை சமாளிப்பதற்குள் கமல் போன்ற இக்கூட்டத்தின் எடுபிடிகளோ நமது சமத்துவத்தை சீர்குலைக்க முயல்கின்றனர்.
இனியும் நாம் கை கட்டி வாய் பொத்தி இருந்தால் நாளை நமக்கு அழிவு காலம் நிச்சயமே. நம் முன்னோர்கள் அரும்பாடு பட்டு கட்டி காத்த இந்த இந்து மதத்தினை நாம் நமது அடுத்த சந்ததியினர்களுக்கு கொண்டு சேர்ப்போமா அல்லது கொன்று சேர்ப்போமா என்பது நமது கையில் தான் இன்று உள்ளது.
அதற்காக வாள் கொண்டு போர் புரிய கூறவில்லை. அது சரியும் அல்ல.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். நம் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரியப்படுத்துவதே ஆகும். வாய் மூடி கேட்டு கொண்டிருந்த காலங்கள் போதும். வாய் திறந்து கேள்விகள் கேட்கும் காலம் துவங்கட்டும். இனியும் இந்துக்கள் கண்டும் காணாது போன்று செல்வார்கள் என்ற நிலைமைகள் மாறட்டும்.
இது இந்துக்களின் தனி பொறுப்புகள் அல்ல. அனைத்து மத நல்லோருக்கத்தினை சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் செயல்படுவதால், அனைத்து மத நல்லுள்ளங்களும் ஆவண செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த குரல்கள் எழும்பினாலே போதும், நாம் எதிர்ப்போம் என்ற எண்ணம் தோன்றினாலே போதும், கமல் போன்ற காதறுந்த ஊசிகள் காணாமல் போய் விடும்.
செய்வீர்களா? செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்,
உங்கள் மகேஷ்