“தம்பீ நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டையும் கலந்துடுவோம். அப்புறமா ஊதி ஊதிப் பிரிச்சு அவலைப் பகிர்ந்து சாப்பிடுவோம்”னு ஒருத்தன் சொன்னானாம், அதக்கேட்டு இவனும் அவலோடப் போனானாம்.  இந்த நிலமையில்தான் தமிழர்களை வைத்திருக்க விரும்புகிறது திமுக. சுமார் 10 லட்சம் காஷ்மீரிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.  ஆச்சரியமா இருக்கா? சென்னையிலே கூட காஷ்மீரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். நம்ப முடியவில்லையா? 06.08.2019 தினத்தந்தி செய்தி கூறுகிறது. ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் கடை வைத்திருக்கிறார்.  நீங்களும் நானும் ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் பொருள் வாங்குவதற்கே முடியாமல் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுவோம், ஆனால் அங்கே கடை நடத்திக் கொண்டு, சென்னையிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள் இவர்கள்.  தவறொன்றுமில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அப்டீங்கறதால மட்டுமல்ல, எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்தப் பகுதியிலேயும் குடியேறலாம், தொழில் செய்யலாம் என்பதாலும். கொஞ்சம் இருங்க – எந்தப் பகுதியேலும்னா சொன்னேன்?  மன்னிச்சிக்குங்க. துண்டுச்சீட்டுல தப்பா எழுதிக் குடுத்துட்டாங்க. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர எந்தப் பகுதியிலேயும்.  

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly90aW1lc29maW5kaWEuaW5kaWF0aW1lcy5jb20vY2l0eS9jaGVubmFpL3doeS1uby1jb25jZXJuLWZvci1vdXItc2FmZXR5LWFzay1rYXNobWlyaXMtaW4tdG4vYXJ0aWNsZXNob3cvNzA1NDQ0NjYuY21zIiwiaW1hZ2VfaWQiOi0xLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3N0YXRpYy50b2lpbWcuY29tL3RodW1iL21zaWQtNzA1NDg5MDMsd2lkdGgtMTA3MCxoZWlnaHQtNTgwLGltZ3NpemUtMzI3MDc0LHJlc2l6ZW1vZGUtNixvdmVybGF5LXRvaV9zdyxwdC0zMix5X3BhZC00MC9waG90by5qcGciLCJ0aXRsZSI6IldoeSBubyBjb25jZXJuIGZvciBvdXIgc2FmZXR5LCBhc2sgS2FzaG1pcmlzIGluIFRhbWlsIE5hZHUgfCBDaGVubmFpIE5ld3MgLSBUaW1lcyBvZiBJbmRpYSIsInN1bW1hcnkiOiJEaXZpc2lvbiBvZiBKYW1tdSBhbmQgS2FzaG1pciBhbmQgcmV2b2tpbmcgaXRzIHNwZWNpYWwgc3RhdHVzIGhhcyBsZWZ0IEthc2htaXJpcyBhY3Jvc3MgVGFtaWwgTmFkdSBpbiBzaG9jayBhbmQgYW5nZXIuIiwidGVtcGxhdGUiOiJ1c2VfZGVmYXVsdF9mcm9tX3NldHRpbmdzIn0=”]

 

அவிங்க மட்டும் இங்கே வந்து வியாபாரம் பண்ணுவாங்களாம், நம்ம பணத்தைக் கொண்டு லாபம் சம்பாதிப்பாங்களாம், ஆனா நாம அங்கே போய் பிழைக்கலாம்னா கதவை இழுத்து சாத்துவாங்களாம்.  இதுக்குப் பேர்தான் சிறப்பு சலுகை. எங்களையென்னா கேனப்பயலுங்கன்னு நினைச்சீங்களா? இதுக்குத்தான் தளபது ஸ்டாலின் கொடி பிடிக்கிறாரு.  

 

சரி, அத்தோட விட்டாங்களா? இந்த சமூகநீதிக்காவலர்னு சொல்லிக்கிறவங்களெல்லாம் இப்போ போடற வேஷம் இருக்கே? தாங்க முடியலடா சாமி. பட்டியலினத்தவருக்கு உரிய இட ஒதுக்கீடு பலன்கள் முழுமையாக இல்லாத ஒரு இடம் இந்தியாவுல இருக்குன்னா அது ஜம்மு&காஷ்மீர்தாங்க.  அதுக்குக் காரணம் 370. அப்புறம் ஏன் இவிங்க 370ஐ ஆதரிக்கறாங்க?  

ஐ ஐ டியில் மூத்த விரிவுரையாளர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றதும் ஒரே கோஷம் இவிங்க. ஆனா ஜம்மு&காஷ்மீர்ல நடக்கற அநியாயத்துக்கு எதிரா வாயே திறக்க மாட்டாங்க.  ஏன்?

370ஐ நீக்கியது முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் ஒரு கருத்து ரொம்பப் பரவலா பேசப்பட்டு வருது.  காஷ்மீர் மக்களைக் கேட்காமலே பிரிச்சிட்டாங்கன்னு ஒரு கும்பல். தெரியாமத்தான் கேக்கறேன் — தமிழ்நாட்டிலே புதுசு புதுசா எத்தனை மாவட்டங்களைப் பிரிச்சு உருவாக்கினாங்க?  யாரைக் கேட்டாங்க? இதுவரைக்கும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைப் புறநகர் பகுதிகளை திடீர்னு சென்னை மாவட்டத்துக்கு மாத்திட்டாங்க. எங்களைக் கேட்டாங்களா? ஆனா 1954லேர்ந்தே எங்களைத் தனியா அத்து விட்டுடுங்கன்னு லடாக்குல இருக்கவங்க கதறிட்டு இருந்தாங்க.  மக்கள் கோரிக்கைதானே? அப்புறம் ஏன் பிரிச்சதை எதிர்த்துக் குரல் கொடுக்கறீங்க?

மத ரீதியான பிரிவினை என்று ஒரு கும்பல்.  எதுய்யா மதரீதியான பிரிவினை? ஒண்ணா இருந்த லடாக்கை பவுத்தர்கள் மெஜாரிட்டி என்பதால் பவுத்தர்கள் பகுதியை லே என்றும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும்படியாக கார்கில் என்றும் அன்று காஷ்மீர் சட்டசபை பிரித்து விளையாடியதே. அதுதான் மதரீதியான பிரிவினை.

 

இப்பவும் ஜம்மு&காஷ்மீர் என்பதும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இருக்கும் ஒரு யூனியன் பிரதேசமாகவே உள்ளது.  இதுல எந்தப் பிரிவினையும் இல்லையா? சும்மா சும்மா முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைன்னு புரளியைக் கெளப்பி ரெண்டு பேத்துக்கும் நடுவுல சண்டை மூட்டி வேடிக்கை பாக்கறதுதானே இவிங்க வேலை?

 

அப்படித்தான் சிறப்பு சலுகை குடுத்தாங்களே அத வச்சி என்ன செஞ்சாங்க?  ராணுவ வீரர்கள் மேலே கல்லெறிஞ்சாங்க. தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும்போது பொதுஜனங்கற பேர்ல முட்டுக்கட்டை போட்டாங்க.  இதுக்காவ நான் காஷ்மீர் மக்கள் எல்லாத்தயும் குறை சொல்லல. ஏன்னா தீவிரவாதமே ரெண்டு மூணு மாவட்டங்கள்லே சில ஊர்கள்லே மட்டும்தான், அதுலயும் சில வீடுகள்லே மட்டும்தான்.  ஆனா பொழைக்க வழியில்லே. மத்திய அரசு கொடுக்கற அத்தனை நிதியும் என்ன ஆவுதுன்னே தெரியல. அரசியல் கட்சீங்கற பேர்ல ரெண்டு குடும்ப நிறுவனங்களே கொள்ளையடிச்சு சேத்து வெச்சிக்கறாங்க.  எங்க பாத்தாலும் ஊழல். இதனால வாழ வழியில்லாம சில இளைஞர்கள் குடும்பத்தைக் காப்பாத்தணமேன்னு பணத்துக்காக தீவிரவாதத்துக்குத் துணை போறாங்க. போதாக்குறைக்கு மத அடிப்படையில் வேறு இவங்களை மூளைச்சலவை செய்யறாங்க. ஒருவேளை அதனாலதான் இங்கேயிருக்க இரண்டு குடும்ப நிறுவனங்களும் 370ஐ ஆதரிக்குதா?

போஸ்கோ சட்டம் தெரியுமா? குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான கடுமையான சட்டம். சமீபத்துல அதிகபட்ச தண்டனையா மரணதண்டனைன்னு சட்டத்தை மாத்தியிருக்காங்க.  இதை எதிர்த்து கவிதாயினி குரல் கொடுத்திருக்காங்க. ஞாபகம் இருக்கா? கொஞ்ச காலம் முன்னாடி ஒரு சின்னஞ்சிறுமியை ஒரு மிருகம் பலாத்காரம் செய்து கொன்றது. ஜாமீன்ல விட்டாங்க.  வெளியே வந்த மிருகம் அம்மாவையும் கொன்றது. இது மாதிரி விஷஜந்துக்களுக்கெல்லாம் மரணதண்டனை கொடுக்க வேண்டுங்கற சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் தெரியவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம். இந்த சட்டம் காஷ்மீரிலே செல்லாது. காரணம்? 370தான்.

 

தகவல் அறியும் உரிமை சட்டம், 2015 – இதை வெச்சுத்தான் பல ஊழல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதுவும் காஷ்மீரிலே செல்லாது. காரணம்? 370தான்.

 

கல்வி உரிமை சட்டம் – அதாங்க தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுங்கற சட்டம் – இதுவும் காஷ்மீரில் செல்லாது. காரணம்? 370தான்.

 

இது மாதிரி பல சட்டங்கள்.  ஆனா இது எல்லாத்துக்கும் மேலே ஒரு முட்டாள்தனமான நடைமுறையைச் சொல்லவா?

 

இந்தியாவில் தேடப்பட்டு வரும் கொலைகாரத் தீவிரவாதிகளான ஹஃபீஸ் சயதும் மவுலான அஸாரும் இந்தியக் குடியுரிமை கேட்டா குடுப்போமா?  சத்தியமா மாட்டோம். ஆனா நீங்க என்ன குடுக்கறது? அவிங்க காஷ்மீரத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் தானாக இந்தியக் குடியுறிமை பெறுவார்கள் என்று காஷ்மீர் அரசியல் சாசனம் கூறுகிறது. ஆச்சரியமா இருக்கில்ல?

 

இதுக்குத்தான் பல்லக்குத் தூக்குகிறது திமுக.

காஷ்மீரில் அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின்  நிலைமையைக் கேட்டால் இங்கே இருப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று தோணும்.  வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணம், உள்ளூரிலும் அரசுப் பணத்தில் தேட்டை,  பதவியிலிருந்து போனாலும் கோடிக்கணக்கில் செலவு செய்த வீடும் அதிகாரிகள் பட்டாளமும் காலம் பூராவும் ஓசியில்,  போதாக்குறைக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு – ஆனால் இவர்கள் பிள்ளைகள் படிப்பதெல்லாம் வெளிநாடுகளில்.

இதெல்லாத்துக்கும் ஒரே காரணம் 370தான்.

இவ்வளவு இருந்தும் ஏன் இதனை திமுகவும் காங்கிரஸும் மட்டும் எதிர்க்குது?  தப்பு தப்பு. பாக்கிஸ்தானும் எதிர்க்குது. ஆக திமுக காங்கிரஸ் மற்றும் பாக்கிஸ்தான் இந்த மூணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இதை நான் சொல்லித் தெரியணுமா?  இவ்வளவு படிச்சும் புரியலைன்னா நான் சொல்லவே வேணாம். சரிதான?

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.