கடந்த அரை நூற்றாண்டாக சரியான கால இடைவேளைகளில் தனது அண்டை மாநிலங்களோடு குடுமிப்பிடி குழாயடி சண்டை என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது தமிழ்நாடு. தெருவில் குழாயடி சண்டை எதற்கு?? தண்ணீருக்கே
குறிப்பாக கடந்த ஒரு மாமாங்கமாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்குமிடையே காவிரி நீருக்கான சண்டை வலுத்து ஊரே கைகொட்டி சிரிக்கிறது
தமிழகம் பல நூற்றாண்டுகளாக செழித்திருந்ததை நாம் அறிவோம். விவசாயம் மற்றும் தொழில் மூலம் இத்தனை செழுமை நீரில்லாமால் சாத்தியமில்லை. தேவைக்கு அதிகமான நீர் தமிழகத்தில் இருந்தது(கல்லைனையிலிருந்து பிரிந்து போகும் கொள்ளிடம் ஆற்றின் அகலத்தை அறிந்தவர்களுக்கு தெரியும் ~சுமார் 2கி.மீ அகலம்).
அப்போது மட்டும் தமிழ்நாட்டின் நீர் எங்கிருந்து கிடைத்தது.
இப்போது தமிழ்நாட்டை ராஜஸ்தானுக்கு அருகில் தூக்கி வைத்து விட்டார்களா? அதே இடத்தில் தானே இருக்கிறது?
மழை அளவும் ஏறக்குறைய அதே அளவு தான். தமிழகத்தின் ஆறுகளில் சில இடங்களில் அனை கட்டியதை தவிர என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது?
இன்றைய கள சூழ்நிலையை சிறிது ஆராய்வோம்
மேற்பரப்பு நீர்
இயற்கை: சுனை, சிற்றோடை, ஓடை, சிற்றாறு, காட்டாறு, ஆறு, பொய்கை, ஏரி
பெரிய நீர்ச்சேகரங்கள்: செயற்கையான/இயற்கையான ஏரிகள், குளம்
செயற்கையாக அமைத்த சிறிய நீர்ச்சேகரங்கள்: ஊருணி, குண்டு, குட்டை, பண்ணை, கோவில் குளம்
இவைகளை உள்ளடக்கியதே மேற்பரப்பு நீர்
ஊரக நீர் சேகரம்
இந்தியாவின் வரலாற்றில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறிய குட்டை, குளம்(கோவில் உள்ள ஊர்களில் கோவில் குளம்) , பண்ணை, என்று எதாவது ஒரு நீர்நிலை இருக்கும். குடிப்பதற்கு ஊருணி, குளிப்பதற்கு குண்டு, கோவில் காரியங்களுக்கு கோவில் குளம் என பல வகைகளில் நீரை சேமித்தனர் முன்னோர். தமிழ்நாட்டில் மொத்தம் 12620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது, ஒரு கிராம பஞ்சாயத்துக்கு 5-6 ஊர்கள் என கணக்கில் கொண்டால் கூட சுமார் 1 லட்சம் குளம் குட்டைகள் இருக்க வேண்டும்.
இந்நீர்நிலைகள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும், நிலத்தடி நீரை தக்க வைத்துக் கொள்ளவும் உதவியிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இவை குப்பை கொட்டும் குழிகளாகவும் கிடங்குகளாகவும் கொசு உற்பத்திக் கழகங்களாகவும் மாறியிருக்கின்றன. இதுபோக கிராம/நகர/ மாநில நிர்வாகத்தின் உதவியுடன் முறையில்லாத ஆக்கிரமிப்புகளும் கட்டுமானங்களும் நீர்நிலைகளை வெகுவாக குறைத்திருக்கிறது.
தமிழ்நாடு – ஆறுகளின் ஊரு
ஆறுகளின் ஊரு என்று தமிழ்நாட்டை அழைத்தல் மிகையாகாது. காவிரி ஒன்று மட்டுமே ஆறு இல்லை, சுமார் 102 ஆறுகள் இருப்பதாக கணக்கு.
அடேய்யப்பா!! என்று வாயை பிளக்காதீர்; இது உண்மைதான்.
சட்டத்தின் மூலம் நியாயமான முறையில் தண்ணீரை காவிரிலிருந்து கேட்கும் அதே நேரம் நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு அடுத்த தலைமுறைக்காக நமக்காக விட்டுச்சென்ற நமது நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அடுத்த தலைமுறைக்காக அந்த நீர்நிலைகளை நாம் நல்ல முறையில் பராமரித்து விட்டுச்செல்ல வேண்டும்.
42000- 35000 = 7000
என்ன புரியவில்லையா? 1967ம் வருட தமிழ்நாடு அரசாங்க பொதுப்பணித்துரை கணக்கீட்டின்படி தமிழ்நாடு முழுதும் 42000 நீர்நிலைகள் இருந்திருக்கிறது. எண்ணிக்கையின் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கும்பொழுது அவைகளின் சிலந்தி வலை அமைப்பு இன்னும் பிரம்மிக்க வைக்கும். சுமார் 1500 ஆண்டுகளாக புதிய நீர்நிலைகளை உருவாக்கியும், உருவாக்கியதை பராமரித்தும் ஒரு இதுவரை நடந்திராத ஒரு கட்டுமானப் பொறியியல் ஆச்சரியத்தை இங்கு தான் காண முடியும்.
மேலும் அறிய : தமிழகம் ஒரு வைபவம்
எளிமையாக விளக்கம்: பல கிளைகளுள்ள ஒரு மரம் சாய்த்து வைக்கப்பட்டது போல தான் இந்த வலையமைப்பு இருக்கும். குட்டை நிறைந்து குளம், குளம் நிறைந்து ஏறி, ஏரி வழிந்து சிற்றாறு, சிற்றாறுகள் ஆறுகளில் கலக்கும்.
1967ல் இருந்து 2017 வரை ஐம்பது ஆண்டுகளில் சுமார் 35000 நீர்நிலைகள் தமிழகத்தின் நினைவிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருக்கிறது(சிலவை வரைபடங்களில் இருந்து கூட). தண்ணீர் பிரச்சனை வராமலா போகும்?
நம்முடைய சுயலாபங்களுக்கும் சுயநலத்திற்காகவும் நீர்நிலைகளை காணாமல் போக செய்தது நம்முடைய தலைமுறை வாழும்பொதே அதற்கான பலனையும் அனுபவித்து வருகிறோம். அழிவை எல்லா வகையிலும் கண்ணில் கண்ட தலைமுறை என்ற பெருமையும் நம்மையே சேரும்.
அதுசரி இவற்றிற்கெல்லாம் காரணம் யார்? சரியாக 1967 என்று குறிப்பிட காரணம்?
உங்கள் எண்ணம் மிகச்சரியானதே. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னால் தான் இக்கொடுமைகள் நகழ்ந்திருக்கிறது.
இக்காலத்தில்,
> நம் முன்னோர் விட்டுச் சென்ற மரபுகளை மறந்தோம்
> மரபு சார்ந்த கட்டுமானம், நீரியல் முறைகள் அழியக் கண்டோம்
> மரபு சார்ந்த நிலைத்த தற்சார்பு முறைகளை அழித்தொழித்தோம்
சமூக நீதி வழங்கிய அமைப்புகள் அனைவரும் வாழ தேவையான நீரை வழங்க தவறியது. (நீரின்றி அமையாது உலகு)
முட்டாளாக்கும் கழகங்களுக்கு அப்பாற்பட்டு மக்களாகிய நாம் நம் பழம்பெரும் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அதிகமான மழைப்பொழிவை பெறும் மாநிலம்?
தமிழ்நாடு, கர்நாடகம்(கொங்கணம் தவிர்த்து), ஆந்திரா ஆகிய மூன்று மாநில வருடாந்திர மழை அளவை பார்க்கும்பொழுது தமிழகம் தான் அதிக மழையளவை பெறுகிறது. கர்நாடகத்தில் கொங்கணத்தை தவிர்க்க காரணம் அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெரும்பாலும் கிழக்கு தொடர்ச்சிமலையின் கிழக்காக சென்று அரபிக்கடலில் கலப்பவை, தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
தமிழ்நாட்டின் மழைப்பருவம்
தமிழ்நாடு மூன்று வகைகளில் மழை பெறுகிறது
1) தென்மேற்கு பருவமழை
2) வடகிழக்கு பருவமழை
3) வருடந்தோறும் மூன்றிலிருந்து ஐந்து புயல்களால்
மூன்று வகையான மழை பொழிவுகள் இருந்தாலும் மிக குறைந்த நேரத்தில் மழை பொழிந்து விடுகிறது(வருடத்தின் 8760 மணி நேரத்தின் 100 மணி நேரங்கள் மட்டுமே மழை பொழிவு).
அதாவது 99% காலம் தமிழ்நாடு வரட்சியால் தவிக்கிறது.
இந்த நேரத்தில் கூட மழை பொழியாத சில பகுதிகள் உண்டு!
1) ஆற்காடு பகுதி – வடகிழக்கு பருவம் (காரணம்: மலை மறைவு பகுதி, கிழக்கு தொடற்சி மலையால்)
2 ) திருப்பூர், ஈரோடு, கோவை(பொள்ளாச்சி தவிர) மாவட்டங்கள் (காரணம்: மலை மறைவு பகுதி, கிழக்கு/மேற்குத் தொடற்சி மலைகளால்
3) புதுக்கோட்டை மாவட்டம் (கடலிலிருந்து மற்றும் மலைகளிலிருந்து தொலைவான பகுதி)
உங்களுக்கு ஒன்று தெரியுமா?? மேட்டூர் அனையை திறந்தால் இடையில் வெண்டிபாளையம் கதவனையை தவிர கல்லனை வரும் வரை ஒரு அனை கூட கிடையாது (~200 கி.மீ)
சரி இது பிரச்சனை. பின் தீர்வு??
தீர்வுகள்
1) ஆற்றுமணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும்
2) நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்
3) குளம், குட்டை, ஏரி, அனைகளின் குடிமராமத்து பணிகளை சீறாக காலம் தவராமல் செய்தல்
4) நீர்நிலைகளின் ஓட்டங்களை தடுக்கும் காரணிகளை அகற்றுதல்(உதா: நீர்நிலைக்கு நடுவே சாலை இருந்தால் பாலம் அமைத்தல்)
5) குப்பை பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புதல்
6) வாக்கால்களில் உள்ள மதகுகளை போல தடுப்பனை கட்டுதல்
7) பயனற்று கிடக்கும் தரிசு நிலங்களில் பண்ணைக் குட்டை அமைத்தல்
8) வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு அமைப்பு
நன்றி : பாரத் ஞான்