கொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும்.
நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று பரவுகிறது.
இதன் பொருட்டே நம் பாரத பிரதமர் அவர்கள் மார்ச் 22, நாளை, நம் அனைவரையும் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் செய்து இந்த கிருமியை வெல்ல அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனே சில சிகாமணிகள் வீட்டில் இருந்தால் எப்படி இது சத்தியம் என்றும், நம்மை நாமே காத்து கொள்ளவேண்டும், அரசாங்கம் ஒன்றும் செய்யாது என்றும் பிதற்ற துவங்கிவிட்டனர். இவர்கள் இவ்வாறு பிதற்றாமல் இருந்தால் தான் வியப்பே.
இவர்கள் போன்ற விஷ கிருமிகளுக்கு பதில் அளிப்பதற்கு முன் இந்த நிஜ கிருமியின் அட்டகாசத்தை பற்றி பாப்போம்.
துவங்கிய சில தினங்களில் சீனாவையே அல்லோலகல படுத்தி விட்டு, நேரே இத்தாலியில் வந்து தான் இறக்குமதி ஆனது. இத்தாலியில் சீனர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களுடனான வர்த்தகமும் மிக அதிகம். எனவே பல சீனர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
பிப்ரவரி முதல் இரண்டு வாரங்களில், 20ம் தேதி வரை கூட, இங்கு எந்த பெரிய பாதிப்பும் இல்லை. முதல் இறப்பு அறிந்த அன்றே 18 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது அறியப்பட்டது. இறந்தவர் முதல் அந்த 18 பேர்களில் எவரும் சீனா சென்றவரில்லை. பின் எப்படி?
இறந்த ஒருவர் மட்டும், சில வாரங்களுக்கு முன் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து உணவு அருந்தியுள்ளார். அவ்வளவு தான். மற்ற 18 பேரும் எப்படி பாதிப்பு அடைந்தார்கள் தெரியுமா? இறந்தவர் சென்ற அதே மருத்துவமனைக்கு இவர்களும் சென்றது தான் ஒரே காரணம்.
அதாவது இந்த கிருமி, நம்மில், நம்முடன் சுற்றி கொண்டிருக்கும் ஒருவர் மூலமாக தான் நம்மை வந்தடையும் என்று புரிகிறதா?
இப்பொழுது புரிகிறதா? எதற்காக நம்மை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தினார்கள் என்று?
அன்று வெறும் ஒன்று, இரண்டு என்றிருந்த இறந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 4000 தாண்டி விட்டது. அனைத்து நாடுகளும் வெளியிட்ட அறிக்கையில், உலகிலேயே, கொரோனாவினால் அதிகம் இறந்தவர் இத்தாலியில் தான் என்றால் நம்புவீர்களா? ஆம்.
இந்த உலகில் முன்னேறிய நாடுகளின் வரிசைகளில் இருக்கும் இத்தாலி, ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய economic பவர், எப்படி இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று சிறிது உற்று நோக்கினால் நமது பிரதமர் கூறிய அனைத்தும் எவ்வளவு உண்மை என்று உணரமுடியும்.
துவக்கத்தில் பெரும் பாலோர் சீன மக்களை ஒருவித பயத்துடன் காண துவங்கினார்கள். ஒருவேளை இவர்களும் இந்த கிருமிக்கு பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ என்ற அச்சமே காரணம். இது தவறில்லை. ஒரு முன்னெச்சரிக்கை. தற்காப்பு. சீனா சென்று வந்தவர்களை அனைவரின் பாதுகாப்பிற்காகவும் தனிமைப்படுத்த துவங்கினர்.
அப்பொழுது தான் இது சீனர்களுக்கு எதிரான இனவாதம் போன்ற தோற்றம் பெற்றது.
அதனால், பிளாரென்ஸ் (Florence) நகரத்து மேயர் இதை உடைத்தெறியும் நோக்கில் கட்டிப்புடி வைத்தியம் துவங்கி வைத்தார்.
அதே போன்று சில சீனர்களும் கண்ணை கட்டி கொண்டு எனக்கு கிருமி இல்லை, பயமின்றி கட்டி பிடித்து உலகிற்கு சீனர்களை பற்றிய அவதூறுகளை எறியுங்கள் என்று நவீன போராட்டம் செய்தனர்.
என்னடா இது நம்ப ஊரு liberal போராட்டம் போன்று இருக்கிறது என்று முழிக்கிறீர்களா? ஆம், அதே தான். அந்த போலி secular ஆட்டம் தான் வேறு வேடமணிந்து இன்று இத்தாலியை ஆட்டிப்படுத்தி கொண்டிருக்கிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 627 இறப்பு. வெறும் 30 நாட்களில் நான்காயிரத்திற்கும் மேலானவர்களை விழுங்கியுள்ளது இந்த கிருமி.
இறந்தவர்களின் பெரும்பான்மையான மக்கள் 60 வயதை தாண்டியவர்கள். எனவே, நமது பெற்றோர்களையும் முதியவர்களையும் பாதுகாக்க வேண்டி நாம் அனைவரும் கண்டிப்பாக இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இத்தாலியில் கடந்த மார்ச் 10 முதல் கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் இன்று இதன் தாக்கம் குறைத்த பாடில்லை. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஏன் வேலைசெய்யும் நிறுவனங்கள் கூட மூடப்பட்டு விட்டது. பலரும் வீட்டிலிருந்த படியே வேலை செயது வருகிறார்கள்.
பலசரக்கு அங்காடிகளும், மருந்தகமும் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது இங்கு. அப்படி திறந்த கடைகளிலும் மக்கள் தங்களுக்குள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டே நகர வேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு கடைகளின் முன்பும் நீண்ட வரிசையில் மக்கள் காத்து இருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சரி, இது இத்தாலியில் மட்டுமா என்றால் அது தான் இல்லை. இன்று ஜெர்மனி பிரான்ஸ்
போன்ற பல முன்னேறிய நாடுகளும் இதே பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஐரோப்ப நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடி விட்டார்கள். அசாதாரண நிலை பிரகடன படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமா, உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் அந்த வல்லரசுரான அமெரிக்காவின் நிலையம் இதுவே. பெரும்பாலான வணிகம் முடங்கி உள்ளது. துடைத்து தூக்கி எறியும் ஒரு டாய்லெட் பேப்பருக்காக அடிதடி நடந்து கொண்டிருக்கிறது. மார்க்கெட் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொன்றிருக்கிறது.
சற்றே சிந்தியுங்கள். இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் இது போன்ற ஒரு தவறு நிகழ்ந்தால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும். எனவே தான் நமது அரசாங்கம் இது #JanataCurfew போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி உள்ளார்கள்.
உங்கள் ஆரோகியத்திற்காகவும், உங்கள் உற்றார் உறவினர் என்று அனைவரின் பாதுகாப்பிற்காகவும் தயை கூர்ந்து நாளை தங்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து ஆதரவு அளியுங்கள்.
நீங்கள் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்,