
“வெளக்கேத்திட்டாங்கபா”
“கல்யாணம்னா வெளக்கேத்தத்தான் செய்வாங்க”
“குத்து வெளக்கேத்திட்டாங்கப்பா’
“ஆமாண்டா, குத்து விளக்குதான் ஏத்துவாங்க’
பம்மல் வே சம்மந்தம் படத்தில் வையாபுரியின் நகைச்சுவைக் காட்சி. அது ஏன் குத்து விளக்கு? குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருக்கும். (கேரளாவில் ஒரு முகம் கூட இல்லாமல் பட்டையாக இருக்கும்) இந்த ஐந்து முகங்களும் எதைக் குறிக்கின்றன? பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் இவையே இந்த பஞ்ச பூதங்கள். இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று அறிவியல் சில நூறு வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தது. ஆனால் கணக்கிட முடியாத காலத்தே நமது வேதங்களும் உபநிஷதங்களும் பிரபஞ்சம் தோன்றியதைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளன.
ஆச்சரியமா இருக்கலாம் – ஆனால் முதல் முதலில் தோன்றிய ஆகாசம், ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் – இப்படித்தான் பாகவதம் சொல்கிறது. என்ன கொழப்பம் இது…. வாயுவிலிருந்து நெருப்புன்னா கூடப் புரிஞ்சிக்கலாம், ஆனா நெருப்பிலேந்து நீரா? நீர்லேந்து நிலமா? எதோ புராணம் தப்புத் தப்பா சொல்றதுன்னு புரிஞ்சிண்டு அறிவியலைப் புரட்டினேன். என்ன கொடுமை சரவணன், அறிவியலும் இதே மாதிரித்தான் சொல்றது. ராமர் எந்த எஞ்சினீயரிங் காலேஜிலே படிச்சார்னு கேட்டார் ஒருத்தர். இப்போ நான் கேக்கறேன் – இந்த மேற்கத்திய விஞ்ஞானிகள் எந்த வேத பாடசாலையிலே படிச்சா?
அது சரி, ஒரு பரந்த அறிவு இருந்தா அறிவியல் என்ன சொல்றது ஆன்மீகம் என்ன சொல்றதுன்னு அலசிப் பார்த்து புரிஞ்சிண்டிருக்கலாம். இருக்கறே பஹூத்அறிவு மட்டும்தான். அப்புறம் எப்படி?
இந்த பிரபஞ்சம் மட்டுமில்லீங்க, நமது உடலும் இந்த பஞ்ச பூதத்தினால் ஆனதுதான். என்ன நீங்க நினைக்கறா மாதிரி மண்ணு நெருப்புன்னு தனித்தனியா எடுத்டுக் காட்ட முடியாது, அதனோட மூலக்கூறுகளா நம்ம உடம்புல இருக்கு.
சித்தர் பாடுகிறார்
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
சித்தர் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்தார் என்று எந்த வடிகட்டின முட்டாளாவது கேட்பானுங்க. சிரிச்சிட்டுப் போயிடுங்க.
இந்த ஆழ்ந்த அறிவெல்லாம் எங்கே போனது? உலகத்துக்கே அறிவு தீபம் ஏற்றிய பாரதம் இன்று ஏன் இந்த் நிலையில் இருக்கிறது? தர்க சாஸ்த்திரம் என்பதுதான் எல்லாக் கல்விக்கும் அடிப்படை. அது இல்லாமல் எந்த சப்ஜெக்டைப் படித்தாலும் அதனால் பெரிய பயன் விளையாது. இதுவரைக்கும் பெற்றதெல்லாம் ஏதோ விதிவிலக்குகள்தான். கேள்விகள் கேட்கும்போதுதான் விளக்கம் கிடைக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் பகுத்து ஆராயும்போதுதான் பகுத்தறிவு உண்டாகிறது. ஆனால் தமிழனுக்குக் கிடைத்த சாபம் பகுத்தறிவு என்பது இறைவனை மறுப்பது — இருங்க – ஹிந்துக்களின் இறைவனை மறுப்பது என்பதோடு நின்று விட்டது. இறைவனையே கேள்வி கேட்ட ஜடங்கள், சோற்றாலடித்த பிண்டங்கள், முழு மூடர்கள் தங்களது தலைவனை மட்டும் கேள்வி கேட்கக் கூடாது என்பதை பயபக்தியுடன் பின்பற்றுகின்றன. ஆனால் இன்றைக்கும் சில புத்த மடங்களில் புத்த பிக்குகள் தினமும் தர்க சாஸ்திரத்தைப் பயில்வதோடு அன்று கற்ற பாடங்களைத் தர்கம் செய்து பழகுகின்றனர். இவையெல்லாம் நாலந்தாவில் எங்களது முன்னோர்கள் கற்றவை, இன்றும் அவற்றை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூறுகின்றனர்.
இந்த மாதிரி ஒரு குத்துவிளைக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு அறையில் கண்ணனோட உறங்கும் நப்பின்னையை அழைத்துப் பாடுகிறாள் ஆண்டாள்.
குத்து விளக்கு எரிய அழகிய வேலைபாடுடைய கட்டிலில் மென்மையான பஞ்சு மெத்தையின் மேல் வாசமிகு மலர்களைச் சூடிக்கொண்டிருக்கும் நப்பின்னையை அணைத்தபட்டி உறங்கும் கண்ணா? நீ பேச மாட்டாயா? மை தீட்டிய கண்களையுடை நப்பின்னையே? பொழுது விடிந்தாலும் நீ கண்ணனை விட மாட்டேனெங்கிறாயே. கருணையுடய உனக்கு இது ஏற்றதாக இல்லை என்று பாடுகிறாள் ஆண்டாள்.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
#19மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்