
இந்திய ராணுவம் — எப்போதும் இல்லாத ஒரு உற்சாகத்தில் இருக்கிறது இப்போது. ராணுவ வீரராக இருப்பதே ஒரு பெருமை – ஏன் பெருமை? நாட்டைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது. சரி, இப்போது மட்டும் என்ன உற்சாகம்? ஒரு வேளை எல்லையில் பதட்டம் தணிந்து விட்டதா? இல்லையே, பதட்டம் அதிகரித்துதானே இருக்கிறது. எதாவது போரில் வெற்றி பெற்று விட்டோமா? இல்லையே, எதுவும் போர் வரவில்லையே. அப்புறம் என்ன உற்சாகம்?
வேற ஒண்ணுமில்லீங்க. ஆயிரம் லட்சக் கணக்கான கோடிகள் செலவு செய்து ஆயுதங்களை வாங்கிக் கொடுத்து விட்டு, கடுத்தமான பயிற்சிகளையும் கொடுத்து, தினமும் இடைவிடாத பயிற்சியையும் தொடர்ந்து கொண்டு — எதிரி தாக்கினாலும் திருப்பித் தாக்குவதற்கு முன்பு அரசின் அனுமதி வாங்க வேண்டும் – பல நேரங்களில் கிடைக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் — அதுவும் தற்காப்பு என்ற அளவில் மட்டுமே அப்படிப்பட்ட தாக்குதலும் இருக்க வேண்டும் இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்தால் எந்த ராணுவ வீரன்தான் உற்சாகமாக இருப்பான்? இதனாலேயே பாக்கிஸ்தான் மற்றும் சீன ராணுவ வீரர்கள் நம் இந்திய ராணுவ வீரர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் நிலையே தொடர்ந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கு மிகவும் முக்கியம் கௌரவம். அது இல்லாவிட்டால் வேற என்ன இருக்கிறது? ஆனால் இந்த நிலைமை இப்போது தலைகீழாக மாறி விட்டது. தாக்கினால் திருப்பித் தாக்கு – இரண்டு மடங்கு பலமாகத் தாக்கு. இதுதான் இப்போது தாரக மந்திரம். கமாண்டர் அளவிலேயே தாக்குதலைத் தீர்மானிக்கலாம். இதற்கெல்லாம் சிகரம் ஸர்ஜிகல் ஸ்ட்ரைக். பாக்கிஸ்தான் கூட ஒரு மாதிரியாக ஒத்துக் கொண்டது – ஆனால் இங்கே சில பன்னாடைகள்தான் இதனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். அடுத்தது மயான்மார் – அதாங்க பர்மா – அங்கே ஹெலிகாப்டைர்ல் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக டோக்லாமில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் சீனப் படைகளைப் பின் வாங்க வைத்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி பாக்கிஸ்தானிய வீரர்களைப் போட்டுத் தள்ளியது – இதெல்லாம் எல்லைகளில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் நமது ராணுவத்தின் வலிமையும் திறமையும் பரவியுள்ளது. வல்லரசாக வேண்டாம், நல்லரசாக வேண்டியதுதான் முக்கியம் என்று எந்த நடுநிலை நக்கியாவது வந்தால் ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்தான் அதுங்களுக்கும்.
இது இந்தியராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை. இந்தியராக இருக்கும் என்று ஏன் சொன்னேன்? காசுக்கும் எலும்புத் துண்டுக்கும் ரொட்டித் துண்டுக்கும் விலை போய்விட்டு ஆதார் கார்டில் மட்டும் இந்தியனாக இருக்கும் கேவலமான ஜந்துக்களுக்கு இவை பெருமையாக இருக்காது என்று எனக்குத் தெரியும். எல்லைகளை மட்டுமல்ல, பேரிடர் காலங்களிலும் நம்மைக் காப்பாற்றுவதற்கு நாம் எதிர்பார்த்திருப்பது இந்திய ராணுவம்தான்.
இப்படித்தான் ஆண்டாளும் பாடுகிறாள்.
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வருமுன்னே அவர்களின் பயத்தைப் போக்குபவனே. பலமிகுந்த கண்ணா. பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக தீயவர்களை அழுக்கும் வலிமை கொண்டவனே. எதிரிகளைப் பயந்து நடுங்க வைப்பவனே. மஹாலக்ஷ்மியைப் போன்ற நப்பின்னைப் பிராட்டியே! எங்கள் நோன்பிற்குத் தேவையான பொருட்களைத் தந்து, கூடவே கண்ணனையும் தந்து நீராட்டு என்று பாடுகிறாள் ஆண்டாள்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலேழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் ;
செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பா வாய்
#20மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்