
வல்லரசு ஆக வேண்டாம், நல்லரசு ஆனால் போதும் என்று ஒரு கும்பல் வாங்கின காசுக்குக் கூவிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம்? காந்தியின் அஹிம்சைன்னு நெனச்சீங்கன்னா பவர் ஸ்டார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு கூட நம்புவீங்க.
அதை விடுங்க. வாங்கின காசுக்கு விசுவாசமாகக் குரைக்கும் கும்பல் அது. நாளைக்கே இந்திய ராணுவத்தைக் கலைத்து விடலாமா? அப்போது சந்தோஷமா? அப்புறம் என்ன ஆகும்?
ஒரு பக்கம் பாக்கிஸ்தானும் இன்னொரு பக்கம் சீனாவும் இந்தியாவைத் துண்டு துண்டாகப் பங்கு போட்டுக் கொள்ளும். இதைத்தானே இந்த நாய்கள் எதிர்பார்க்கிறது?
முதலில் வல்லரசு. ஆரம்பத்தில் வல்லரசு நாடுகள் என்றால் அவை ஸ்பெயினும் போர்ச்சுகலும். இரண்டும் அண்டை நாடுகள். வல்லரசு நாடு என்றாலே பிற நாடுகளைப் போரிட்டு வெல்வது என்பதுதான் அந்தக் கால இலக்கணமா இருந்தது – அந்தக் காலத்தில் மட்டுமே. இப்போது அதன் அர்த்தம் வேறு. இந்த இரண்டு நாடுகள் ஏராளமான போர்களில் ஈடுபட்டு நாடுகளைப் பிடித்தும் ஒரு காலகட்டத்தில் அவை கழுத்தில் கட்டிய பாறைகளாகக் கனக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது செல்வாக்கை இழந்த பின்னர் பிரிட்டனும் பிரான்ஸும் வல்லரசு நாடுகளாயின. இவை இரண்டும் அண்டை நாடுகளானாலும் இவைகளைக் கடல் பிரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் வல்லரசு நாடுகளாயின. இவைகள் இரு கண்டங்களைச் சேர்ந்தவை.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மிகவும் தாமதமாகத்தான் நுழைந்தது. நீண்ட காலமாக நடந்த போரில் எல்லாவற்றையும் இழந்து சோர்ந்திருந்த காலத்தில் பிரிட்டன் மற்றும் நேச நாடுகளுக்குத் தலைமையேற்றுப் போரில் நுழைந்தது. போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்காவின் செல்வாக்கு ஏறுமுகத்தில். போரால் ஏகப்பட்ட செலவுகளை சந்தித்த பிரிட்டன் முதல் நேச நாடுகளும் தோல்விக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி, முற்றிலும் நாசமான ஜப்பான் வரை அமெரிக்காவையே அண்டி நின்றன. தங்களைத் தோல்வி அடையச் செய்த நாடு என்ற எண்ணம் இல்லாமல் ஜெர்மனியும் ஜப்பானும் கூட அமெரிக்காவின் துணை கொண்டு மீண்டும் வீறு கொண்டு எழுந்தன.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆரம்பித்து ஒரு நீண்ட காலத்துக்கு அமெரிக்காவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆனால் தேவையில்லாமல் சின்னஞ்சிறு நாடுகளின் மீதெல்லாம் ராணுவ ஆக்ரமிப்பைத் தொடங்கி இன்று தனது செல்வாக்கை முற்றிலும் இழந்து நிற்கிறது அமெரிக்கா.
இது போன்ற ஒரு நிகழ்ச்சியை ஆண்டாள் பாடுகிறாள் – போரிலே தோற்ற மன்னர்கள் தங்களை வென்ற மன்னனின் பள்ளியறை வாசலில் கூடி நிற்பதைப் போல நாங்கள் உன் பள்ளியறை வாசலில் நிற்கிறோம். செந்தாமரை வாய் திறந்து எங்களுடன் பேச மாட்டாயா? ஒரு கண்ணில் சூரியனும் ஒரு கண்ணில் சந்திரனும் உடைய நீ எங்களைப் பார்த்தாலே எங்களது பாவங்கள் எல்லாம் பறந்து போய்விடுமே என்று பாடுகிறாள் ஆண்டாள்.
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
#22மார்கழி201718 #ஸ்ரீஅருண்குமார்