
இந்த சீனா இருக்கு பாருங்க, டோக்லாம்லே ஊடுருவல் செய்து பல நாட்கள் நமது ராணுவமும் சீன ராணுவமும் எதிரெதிரே பதட்டத்துடன் இருந்த நிலை மறக்க முடியுமா? சீனாவுடன் நட்புறவு பேண வேண்டியது அவசியம், சீனாவுடன் தகறாரு வேண்டாம் என இங்கே இருக்கும் சில சீன அடிமைகளும் அடிவருடிகளும் எலும்புத் துண்டுகளுக்கு விலை போனவர்களும் கூவியதும் நினைவிருக்கும். ஆனா போன வருஷம் சீன அதிபர் இந்தியாவுக்கு வந்தார், நம்ம மகாபலிபுரத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். போதி சத்துவர் முதல் நமது சிற்பக்கலைகள் வரை தெரிந்து கொண்டு போனார்.
மஹிந்த ராஜபக்சே – இவர் இலங்கையின் அதிபராக இருந்த போது சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிர்ப்பாகவும் நடந்து கொண்டார். இதனால் இந்திய உளவுத்துறை தலையிட்டு அரசியல் பேரங்கள் நடத்தி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸே தோற்று மைத்ரிபால சிறீசேன அதிபராக உதவியதாக சில செய்திகள் உலவுகின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் மஹிந்தாவின் தம்பி கோத்தபய ராஜபக்ஸே வெற்றி பெற்று அதிபரானார். என்ன நடக்குமோ என்று கவலையாக இருந்த நேரத்தில் பிரதமர் மோடி அவர்கள் கோத்தபயவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து அவரை இந்தியாவுக்கும் வரவேற்றார். கோத்தபயவும் இந்தியா வந்தார், இப்போது தனது தீவிர சீன ஆதரவு நிலையை அடியோடு மாற்றிக் கொண்டார்.
நம்முடன் சேராமல் எதிர்த்து இருப்பவர்களை வெல்வது என்பது போர் மூலம்தான் என்றில்லை, கருணை, நட்பு, அன்பு என்று பலவிதங்களில் வெல்லலாம். உடனே பாக்கிஸ்தான் என்று ஆரம்பிக்கலாம், இந்த உதாரணங்களெல்லாம் மனிதர்களுக்குத்தான். இப்படித்தான் கோவிந்தனும் தன்னைக் கூடாரை தனது கருணையினாலும் அருளாலும் வெல்கிறான். இதைத்தான் கூடாரை வெல்லி என்று கூறுகிறார்கள், ஆனால் அது காலண்டரில் கூடாரவல்லி என்று ஆகிவிட்டது.
இதைத்தான் ஆண்டாள் பாடுகிறாள்
உன்னைச் சேராதவர்களைக் கூட வெல்லும் சீர்மிகு கோவிந்தனே! உன்னைப் பற்றி பாடி உன் அருள் பெறுவதற்காக நாங்கள் வந்தோம். அருள் மட்டும் போதுமா? பொருளையும் தருவாயாக. அதுதானே இந்த உலகத்திற்குத் தேவை! அது இருந்தால் தானே எல்லோருமே புகழ்கின்றனர்? ஏராளமான நகைகளையும் புத்தாடைகளையும் எங்களுக்குத் தருவாயாக. அதையெல்லாம் அணிந்து விரதத்தை முடிக்கும் விதமாக அப்படியே கையில் நெய் வழிய பால்சோறு சாப்பிடுவோம்.
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
#27மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்