உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு.  ஆனா இப்போ உன் தலைவனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு படி போய் உன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரைக் காட்டு, உன்னை வேலைக்கு எடுக்கலாமா இல்லையா என்பதை யோசிக்கலாம் என்று கம்பெனிகள் சொல்லும் அளவுக்கு ஆகி விட்டது நிலைமை.  இனிமேல் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்தால் சமூக ஊடகக் கணக்கு விவரங்களைக் காட்ட வேண்டுமாம். ஏங்க ஒவ்வொருத்தரும் ஏகப்பட்ட ஃபேக் ஐடி வெச்சிருக்க நாளிலே இதை எப்படி அவங்க கண்டுபிடிப்பாங்க? ரொம்ப சாதுவா ஒரு ஐடியை வெச்சிக்கிட்டு அதை மட்டும் விசா விண்ணப்பத்தோட குடுத்தா அமெரிக்கா என்ன செய்யும்? 

 

 “தனக்கென பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான்”  எம் ஜி ஆர் பாடிய பாடல். என்ன கண்றாவி இது. தலைவன் பின்னால் கண்மூடித்தனமாக செல்லும் ரசிகர் பட்டாளம்தான் தேவை, தலைவன் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் – இதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.  வெளங்கிடும். அப்போ காந்தியின் பின்னாடி சென்றவர்களெல்லாருமே அதிபுத்திசாலிகளா என்றால் இல்லை, படிக்காத பாமர மக்கள்தான் காந்தியின் பின்னாடி வெகுவாக அணிவகுத்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட மக்களை ஏமாற்றாத தலைவராகத் திகழ்ந்தவர் காந்தி. தனது சொந்த லாபத்திற்காகத் தொண்டர்களைத் தீக்குளிக்க வைத்தவர் அல்ல காந்தி. 

 

தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்படுகிறது.  இதிலே குடியுரிமை சட்டத்தைப் பற்றி இவர்கள் படித்தறிந்தார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.  சட்டம் என்ன என்றும் தெரியாது. இதனால் என்ன ஆகும் என்பதும் தெரியாது. ஆனாலும் நாங்கள் கலவரம் செய்வோம் என்று ஒரு கும்பல்.  இந்த கும்பலின் நோக்கம் என்ன? இந்தியாவின் புகழைக் கெடுக்க வேண்டும், நாட்டில் அமைதியைக் குலைத்து, கலவரங்களை உண்டுபண்ணி, மக்களிடையே பிளவை உருவாக்கி இந்தியாவின் முன்னேற்றத்தைக் கெடுக்க வேண்டும்.

 

இதையெல்லாம் இந்தியர்கள் செய்வார்களா? என்று சந்தேகம் எழலாம்.  இந்தியாவைத் துண்டாடுவோம் என்று ஒரு கும்பல் கூவியதும், அதற்கு ஏராளமான ஊடகங்கள் உட்பட அறிவுஜீவிகள், கட்சிகள் என்று ஒரு கூட்டமே ஆதரித்ததும் மறக்க முடியுமா? இவர்களெல்லாம் இந்தியர்கள்தானே!

 

நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. எது உண்மை எது பொய்?  இதில் எது பாவம் எது புண்ணியம் என்பதை எப்படிக் கண்டறிவது? நாட்டின் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் எந்த ஒரு காரியமும் புண்ணியமானதே.  நாட்டைப் பிளவுபடுத்தும் எந்த ஒரு காரியமும் பாவமானதே. இதில் எது நாட்டின் முன்னேற்றம் எது நாட்டைப் பிளவுபடுத்தும் செயல் என்று குழப்பமா? குழப்பமே வேண்டாம், பாக்கிஸ்தான் எதையெல்லாம் எதிர்க்கிறதோ அதெல்லாம் நாட்டுக்கு முன்னேற்றம். பாக்கிஸ்தான் எதையெல்லாம் ஆதரிக்கிறதோ அதெல்லாம் நாட்டுக்கு ஆபத்து.  இங்கே இருப்பவர் சிலர் கூட பாக்கிஸ்தானின் கருத்தோடு ஒத்துப் போகிறார்களே என்று கேட்கிறீர்களா? அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதுக்கெல்லாம் அந்த கிருஷ்ண பரமாத்மாதான் பதில் சொல்ல வேண்டும்.

 

ஆண்டாள் பாடுகிறாள் —  நாங்கள் மாடுகளை மேய்த்துக் கொண்டு காடுகளுக்குச் சென்று எல்லோரும் சேர்ந்து உண்டு மாலையில் பசுக்களைத் திருப்பி ஓட்டி வருவ்வோம்.  பாவம் புண்ணியம் என்பது எங்களுக்குத் தெரியாத பிள்ளைகள் நாங்கள். எங்கள் முன்னோர்கள் எதாவது செய்திருக்கிறார்களா என்றால் அது வும் கிடையாது. எங்களது குலத்தில் நீ வந்து பிறக்கப் போகிறாய் என்பது தவிர வேறு எதுவும் எங்களூக்குக் கிடையாது.  உன்னைத் தவிர எங்களுக்கு வேறு எதுவுமே கிடையாது என்று ஆண்டாள் கண்ணனிடம் சரணடைகிறாள்.

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்

சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே

இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!

#28மார்கழி2019-20  #ஸ்ரீஅருண்குமார்

 

 

2 Replies to “மார்கழித் திங்கள் – 28”

  1. அருமை ; காந்தி ;CAS ஆண்டாள்- அனைத்தையும் கோர்த்தது அருமை.

    1. அருமை ; காந்தி ;CAA ஆண்டாள்- அனைத்தையும் கோர்த்தது அருமை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.