கடந்த ஜனவரி 19, 2019 அன்று பல இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கடன் சுமை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது என்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். “இந்தியா டுடே” இதழ் இந்திய கடன் சுமை 50% அதிகரித்துள்ளதாகவும் “எக்கணாமிக்ஸ் டைம்ஸ்” மோடி அரசில் எப்படி கடன் 50% அதிகரித்தது என இந்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டனர். அதை தாங்கிப்பிடித்து எதிர்கட்சியினர் அரசுக்கு ஏதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

 

இது முற்றிலும் பொய் என்று சொல்லவரவில்லை. அரசின் கடன் அதிகரித்துள்ளது சாதாரணமே. இன்னும் சொல்லப்போனால் பல வல்லரசுகளுடன் ஒப்பிடும்போது நாம் மிக வலிமையாக உள்ளோம். அதில் ஒளிந்துள்ள உண்மையே இவர்கள் யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

அதை இங்கே பார்ப்போம்:

 

எந்தவொரு அரசும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்குவது இயல்பே. அரசின் கடன் சுமையானது பலகாலமாக பல்வேறுஅரசு இவ்வாறு வாங்கிய கடன்களின் ஒட்டுமொத்த தொகைதான். இதனால் கடன் சுமை ஆண்டாண்டாக உயர்ந்து கொண்டு  தான் போகிறது. இதில் முக்கியமாக பார்தால் அரசு நிர்வாகம் இந்த கடனால் ஸ்தம்பிக்ககூடாது. இதை தெரிவதற்க்கு நல்ல வழி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்த கடன் விகித அளவை  பொறுத்தது. ஏனென்றால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் போது அரசுக்கு வருமானமும் அதிகரிக்கும். இதனால் கடன் தொகையை திரும்ப செலுத்தும் திறனும் அதிகரிக்கும். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்த விகிதம் 44-47% உள்ளது. இன்னும் ஒருபடி மேலே போனால் மோடியின் ஆட்சியில் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்ததால் இந்த சதவீதம் குறைந்துள்ளது.

மேலே கொடுத்துள்ள படத்தை பார்த்தால் 2013இல் 46.98% இருந்த விகிதம் 2017ல் 45.11%ஆக குறைந்துள்ளதை காணமுடிகிறது. அதுபோல 2010 முதல் மத்திய-மாநில அரசுகளின் கடனானது 67-72% இருந்துள்ளது. இது 2024 வரை குறைவதற்கான அறிகுறிகளும் தென்படுகிறது.

சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: மத்திய அரசின் மொத்த பொறுப்புச்சுமை நடுத்தரகாலயளவில் குறுகுவதாக அறிவித்துள்ளது. அரசு நிதிபற்றாக்குறையை சமாளிக்க பொதுச்சந்தையின் மாற்றங்களுட்பட்ட கடன்களை வாங்குகிறது. வழக்கமான குறியீடுகளான கடன்/ஜிடிபி சகவிகிதம், வருவாய்க்கேற்ற வட்டி செலுத்தும் திறன், மற்றும் குறுகிய காலகடன்கள் நல்ல நிலமையில் அரசின் நிதிச்சுமையை சமாளிக்கும் விதத்தில் இருப்பதாக உள்ளது.

 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசின் கடன் சதவிதம் இந்த அரசை விட பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது.

எல்லா எதிர்கட்சியினரும் மோடி அரசில் கடன்சுமை 50% உயர்ந்தது என்று குற்றம்சாட்டும்போது, கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் இது 68% இருந்ததை அவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். 2009-14 இது 89% உயர்ந்ததையும் அவர்கள் வெளியே சொல்லவில்லை. மொத்தமாக பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணியின் 10 வருட ஆட்சியில் மத்தியஅரசின் மொத்த கடன் மும்மடங்கு உயர்ந்துள்ளது. அதை யாரும் வெளியே சொல்லிக்கொள்வதில்லை.

மத்திய அரசின் கடன்

கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வாங்கிய கடனானது 443% இருந்து 0.04% இந்த மோடி அரசில் குறைந்துள்ளது. இது மத்திய அரசின் மேலே குறிப்பிட்டுள்ள நிதி அறிக்கையை சரியாக பிரதிபலிக்கிறது.

ஆக எதிர்கட்சிகள் தாங்கிபிடிக்கும் 50% கடன்சுமை கூற்று வெறும் போலியே! அதில் உண்மையில்லை. இது தேர்தல் நேரமாகையால் இது போல பல பொய்ச்செய்திகள் மேலும் வருமென்று நம்புவோம்.

 

Source : https://www.opindia.com

Translated by : Shyam

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.