
#MeToo என்ற ஹாஷ் டேக் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் குடும்ப உறவினர் நண்பர்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவிகளைப் பற்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் வெளிப்படையாக தெரிவித்து அந்த ஈனச் செயலில் ஈடுப்பட மிருகங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக ஆங்கில மற்றும் ஹிந்தி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் பணிபுரியும் சில பெண் பத்திரிகையாளர்கள் #MeToo ஹாஷ் டேக் மூலம் பல ஊடகத்துறை மிருகங்களின் லீலைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அம்பலப்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பிரஷாந்த்
தமிழ் திரைப்பட விமர்ச்சகர் பிரஷாந்த் மீது ஒரு பெண் தன்னிடம் அவர் தவறான முறையில் பேசியதாக பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு தெரிவித்ததாக சின்மயி ( @Chinmayi )நேற்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டு புயலை கிளப்பினார். ஆனால் பிரஷாந்த் தான் யாரிடமும் அது போல பேசவில்லை என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் , மேலும் தான் தவறு செய்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறையிட்டு வழக்கு பதிவு செய்யட்டும் என சவால் விடுத்துள்ளார்.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் இன்றும் பல பெண்களும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது வேதனை தருகிறது.
எந்த புற்றில் எந்த பாம்போ…..
இந்நிலையில் தமிழ் ஊடகத்துறையில் இது போன்ற பல ஆண் மிருகங்கள் ஒளிந்திருப்பதாகவும் அவர்களின் முகத்திரை விரைவில் கிழியும் என சிலர் ட்வீட் செய்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரியாரிசமும் பெண்ணியமும் பேசுவோர் நிறைந்த தமிழ் ஊடகத்துறையில் இது போன்ற கயவரின் உண்மை முகம் வெளிப்படும் நாளை தமிழ் வலைதள வாசகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .