போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனிற்கே.

ஆம்.

நம் தாய் திருநாடாம் இந்தியாவில் இருந்த அனைத்து கட்சிகளும் தூற்றிய தூற்றலை சிறிதும் பொருட்ப்படுத்தாது கடமையே கண்ணாக இருந்து நினைத்ததை சாதித்தவர் தான் நம் பாரதத்தின் பிரதமர்.

கிருஷ்ணர் எவ்வாறு அன்று அஸ்த்தினாபுரத்தின் பக்கம் நின்று தர்மத்தை வெல்ல செய்தாரோ, அவ்வாறே மோடியும் இன்று இந்தியாவின் பக்கம் நின்று தர்மத்தை நிலை நாட்டியுள்ளார்.

இது சாதாரண வெற்றியல்ல. இது வரலாற்று சிறப்புமிக்க மகத்தான வெற்றி. தம்பியுடையான் படைக்கஞ்சான், என்பது எவ்வளவு உண்மை.

இவர்களின் இந்த இமாலய வெற்றிக்கு பின், இந்தியாவை எதிர்ப்பவர்களை கண்டறிவது மேலும் எளிதாகிவிட்டது.

இவரை தூற்றிய வாய்கள் இன்று வெறுப்பின் உச்சமாக இவருக்கு வாக்களித்த மக்களை நோக்கி திரும்பியுள்ளது. அவர்களையும் கீழ்த்தரமாக தூற்ற துவங்கியுள்ளனர். அது மட்டுமா, இந்திய நாடே அழியவேண்டும் என்று உளறி கொண்டிருக்கிறது இன்னும் சில விஷ கிருமிகள்.

நிதர்சனத்தை உணர மறுக்கும் எனதருமை எதிரிகளே, நம்நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மோடி என்ற மாமனிதரை ஒருமனதாக பல கோடி மக்கள் தங்களை வழிநடத்த பிரதமராக தேர்ந்தெடுத்து விட்டனர்.

எனவே, உங்கள் வெறுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு இந்த நாட்டின் மேன்மைக்கு தங்கள் கடமையை செய்ய துவங்குங்கள். ஆட்சியில் அமர மக்கள் ஆணையிடவில்லை என்று மனவருத்தம் வேண்டாம். ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல் பட ஆயுத்தமாகுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் நன்மைக்கு பாடுபடுங்கள். உங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு உழைக்க தயாராகுங்கள்.

மோடி என்னும் ஒரு நபரை இழிந்து பேசுவதை விடுத்து அவரை எதற்காக ஒருமுறைக்கு இருமுறை தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று ஆராய துவங்குங்கள்.

அவர் எவ்வாறு மக்கள் விரும்பும் பெருந்தலைவராக உருவெடுத்தார் என்று கண்டறியுங்கள்.

ஒரு கடைநிலை தொண்டராக இருந்த ஒருவர் எவ்வாறு இன்று இந்த பாரதத்தின் பிரதமாராக வளர்த்துள்ளார் என்பதை பற்றி அறிய முற்படுங்கள்.

சென்ற முறை அவர் வென்றபோது அது அதன் முந்தைய கட்சியின் அரசு மீது மக்களுக்கு இருந்த வெறுப்பும் நம்பிக்கையின்மையும் காரணம் என்று நீங்கள் வேண்டுமானால் கூறலாம்.

முக்கியமாக, அன்று நடந்த தொடர்ச்சியான ஊழல்களும் அரசின் அலட்சியங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. மிக முக்கியமாக, அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்த நாட்டின் வளத்தில் முதல் உரிமை ஓர் குறிப்பிட்ட மதத்தினருக்கே (இஸ்லாமியர்களுக்கே) சேரும் என்று கூறியதே அந்த கட்சியின் இறுதி சடங்கிற்கு அஸ்திவாரம் என்றாகியது என்றால் மிகையாகாது.

ஆனால் இன்றோ, இவர் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி முடித்து, மீண்டும் மக்கள் முன் தன் சாதனைகளை மட்டுமே நம்பி களமிறங்கினார். இவரின் நிர்வாக திறமையினாலும் இவர் செய்த செயல்களில் மக்களுக்கும் இந்த தேசத்திற்கும் நன்மை இருந்தமையாலும் மீண்டும் அவரையே மக்கள் தேர்ந்தெத்துள்ளார்கள்.

தன்னை போன்றே இந்த நாட்டை விரும்பும் ஒரு தலைவர் வந்துவிட்டார் என்று கொண்டாடிய காரணத்தினாலேயே, அவரை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார்கள் இந்தியர்கள்.

இனியவர்களே, இது வெற்றியை கொண்டாடும் தருணம். நீங்கள் உழைத்த உழைப்பிற்கு ஆண்டவன் அளித்த பரிசு. அடுத்த இலக்கை அடையும் முன் சற்றே இளைப்பாறுங்கள்.

பிரியமுள்ள எதிரிகளே, உங்களுக்கு நினைவிருக்கிறதா?

நீங்கள் தானே கர்மா காத்துக்கொண்டிருக்கிறது என்று சூளுரைத்தீர்கள்?

இறுதியில் என்னவாயிற்று?


தர்மம் வென்றது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மையாகி போனது.


உண்மையிலேயே நீங்கள் கர்மாவை நம்பும் மனிதரானால், இந்நேரம் இது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டுமே? கர்மவினை என்பது அரசியல் விளையாட்டல்ல. நீங்கள் செய்த வினை, நன்றோ தீதோ அது உங்களிடமே திரும்பும் என்பது எவ்வளவு உண்மையாகி போனது?

இது மட்டுமா?


எத்தனை விந்தை மனிதர்கள் மோடி எனும் நபர் மீண்டும் வெற்றி பெற கூடாதென்று பிராத்தனை செய்தனர்?


எத்தனை பிராத்தனை? எழுப்புதல் பிராத்தனை, கூட்டு பிராத்தனை, இன்னும் எத்தனை வகையான பிராத்தனை? அதனால் அடைந்தது என்ன? மண்ணை கவ்வியது தானே மிச்சம்?


இப்பொழுது என்ன சொல்ல போகிறீர்கள்? உங்கள் கடவுளையும் தூற்ற போகிறீர்களா? உங்கள் எண்ணம் போன்று உங்கள் கடவுளும் செயல்பட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களை போன்ற பைத்தியக்காரர்கள் யாருமே இல்லை.


எந்த ஒரு கடவுளும் நமக்கு எது நன்மை பயக்குமோ அதையே அருளுவர். ஆகவே, மோடி என்ற மனிதர் இந்த நாட்டின் பிரதமர் ஆவதே நம் அனைவருக்கும் நன்மை என்ற காரணத்தினாலேயே நீங்கள் வணங்கும், தொழுவும், எழுப்பும் கடவுளும் அதையே அளித்துள்ளார். இதையாவது புரிந்து கொள்ள மதி உண்டெனில் மகிழ்ச்சி.


ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


இந்நாட்டு மக்கள், நீங்கள் ஊழல் செய்தால் கூட பொறுத்து கொள்வார்கள். ஆனால், மரியாதையின்றி வயதில் மூத்தவரை இழிந்து பேசினால் பொறுத்து கொள்ளவே மாட்டார்கள். பேசப்படுபவர் எதிரியாக இருந்தாலும் சரி. அது அவர் மேல் வெறுப்பை விட பரிதாபத்தையே பெற செய்யும். அது இந்த மண்ணின் சிறப்பு.


இந்த மண்ணின் பாரம்பரியம் அறியாமல் நீங்கள் என்ன செய்ய நினைத்தாலும் தோல்வியையே தழுவ வேண்டும் என்பதே உண்மை.


சிந்தித்து செயல்படுங்கள்.


மக்களையும் இந்த நாட்டினையும் காதல் செய்த காரணத்தால் ஒருவரை மக்கள் எங்கு கொண்டு வைத்துள்ளார்கள் என்று கண்டபிறகாவது, காதல் செய்யுங்கள்.


ஆதலால் காதல் செய்வீர்.


உங்கள் நாட்டையும், உங்களுக்கு வாக்களித்த மக்களையும் காதல் செய்வீர்.


உங்கள்,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.