தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது.
<bதொழில் தொடங்க கடன் உதவி
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது அரசின் திட்டம், அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பொதுவுடைமை வங்கிகள், தனியார் வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.
அரசு ஆணை
இத்திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோர்க்கு அரசு பத்து லட்சம் வரை கடன் கொடுத்து உதவுகிறது. இந்த திட்டத்தின் ஒரு சிறப்பம்சம் இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. எந்தவித சூயரட்டியும் இன்றி 10லட்சம் வரை கடனாக பெறலாம். 100 பேர் வங்கிகளில்சிறு தொழில் செய்ய கடன் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களில் நான்கு பேர்க்கு மட்டும்தான் வங்கிக் கடன் கிடைத்து வந்தது. அதை மாற்றவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியின் கிளையும் ஓராண்டில் 25 பேர்களுக்குக் கண்டிப்பாக முத்ரா திட்டம் மூலம் கடன் உதவி கொடுக்க வேண்டும் என்பது அரசு ஆணை.


கடன் பெற தகுதியானர்கள்
இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்வோருக்குக் கடன் பெறும் வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. டாடா குட்டியானை வேன் பெறுவோர்கள், பட்டு தொழில், சிறு உணவகம், பால் பண்ணை, மாடு வளர்ப்பு, மீன் பண்ணை, கோழி வளர்ப்பு, துணி வியாபாரம், அழகு நிலையம், பேக்கரி, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வோர்கள் அனைவரும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
ஆனால் அதே சமயம் சொந்த செலவுக்கு, திருமணம் செய்ய, வீட்டு செலவுக்கு, தனி நபர் கடன், கல்விக் கடன், வாகன கடன் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.
கடன் எளிதாக கிடைக்க
முத்ரா திட்டத்தில் கடன் பெற, செய்யப் போகும் தொழில் குறித்து சரியான திட்டங்கள் வரையறுத்து வைத்து அதனை தெளிவாக விளக்கி நம் மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனு வங்கிகளிலும் கிடைக்கும் அல்லது மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். தொழில்செய்யும் இடங்கள் குறித்து முழுவதுமாக அறிவிக்க வேண்டும் தொழில் செய்ய தேவையான உபகரணங்கள் குறித்து தெளிவாக தெரிவித்தல் அதாவது சரியான வணிக திட்டம் கொடுக்கப்பட்டால் கடன் கிடைப்பது எளிதாகிறது. முத்ரா திட்டம் பெற 18 வயது ஆகியிருக்க வேண்டும். வருட வட்டி விகிதம் 12% சதவிகிதம். மாதத்திற்கு 1% வீதம் வட்டி செலுத்த வேண்டிவரும். தொழில் செய்ய விருப்பமுள்ளோகள் அந்தந்த பகுதிகளிலேயே உள்ள வங்கிகளில் உள்ள முத்ரா அதிகாரிகள் மூலம் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விவரங்கள் நிரப்பப்பட வேண்டும்.
1.அடையாள சான்று (வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்)
2.இருப்பிட சான்று (சமீபத்திய தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது)
3.சமீபத்திய புகைப்படம்
4.இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது
5.விற்பவர் விவரங்கள்
6.தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்
7.சாதி சான்று
மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கபட்டுள்ளது.
முத்ரா அட்டை
முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த அட்டை மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் மறுக்கப்பட்டால் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளையும் அணுகலாம். மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்திலும் சென்று அவர்கள் உதவியை நாடலாம்.
பிரதமர் மோடியின் மிக சிறந்த திட்டம்

நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுய தொழில் செய்து அனைத்து மக்களுக்கும் வளமாக வாழும் நிலையினை கொடுக்கவும் பிரதமர் மோடி இந்த நல திட்டத்தை 2016ல் அறிமுகப்படுத்தினார். இதுவரை 11கோடி மக்கள் இத்திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள் என்றால் அதன் தாக்கத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும். இத்தனை பேர் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இத்திட்டம் உதவியிருக்கிறது என்றும் பெருமை கொள்ளலாம். இந்தியா மோடியின் தலைமையில் பீடு நடை போடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வெறும் பேச்சல்ல செயலால் அதிகரித்திருக்கும் நம் வளர்ச்சியையும் வளத்தையும் ஆதாரத்துடன் காட்ட முடிவதே அவரின் அறிவார்ந்த அனுபவத் தலைமைக்கு ஒரு சான்று.
~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.