
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மதராசாவின் 52 வயது மௌலானா ஒருவர், 10 வயது மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) அன்று குற்றம் சாட்டப்பட்ட மௌலானா அப்துல் ரவூப் (52), 10 வயது சிறுமியை இஸ்லாமியப் பள்ளியின் ஒரு மூலையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
கஜிரனா காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து FIR பதிவு செய்த பின்னர் அப்துல் ரவூப் கைது செய்யப்பட்டார்.
POCSO சட்டத்தின் கீழ் ஐ.பி.சி 354 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 27 முதல் இந்தூர் மாவட்டத்தில், பத்து வயதுக்கு குறைவான பெண்கள் சம்பந்தப்பட்ட நான்கு தனித்தனி பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.