
நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான். நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார். சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம்.
“காபி சாப்பிடறீங்களா?” என்றேன்.
“இல்லே, நான் இப்போல்லாம் வெளியே எதுவும் சாப்பிடறதில்லை” தள்ளி நின்றபடியே பேசினார்.
நான் சிரித்து விட்டேன்.
நண்பருக்குக் கோவம் வந்து விட்டது. வழக்கம் போல பேச்சை மாற்றினார்.
“என்னா? இன்னும் எட்டு நிமிஷம்தான் இருக்கு ஒன்பது மணிக்கு. விளக்கை அணைச்சிட்டு விளக்கை ஏத்தப் போறீங்களா?”
எனக்கு ஆச்சரியம். “அடடே என்னாச்சு உங்களுக்கு? நீங்களும் மாறிட்டீங்களா?”
“அடச்சே அதெல்லாம் இல்லே. இந்த மாதிரி முட்டாள்தனைத்தை உங்களை மாதிரி சங்கி மங்கிகள்தான் செய்யும். எங்க வீட்டிலே விளக்கை அணைக்கவும் போறதில்லை. விளக்கை ஏத்தவும் போறதில்லை. உங்களை மாதிரி முட்டாள்கள் வீட்டிலே போட்டோ எடுத்து இந்த முட்டாள்தனத்தை ஃபேஸ்புக்கிலே போடலாம்னுதான் வந்தேன்” என்றவாறே மொபைலை வெளியே எடுத்தார் நண்பர்.
நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
நண்பரே தொடர்ந்தார் “என்னோட தம்பி புள்ளை, அவன் இப்போ நாக்பூரிலே இருக்கான். பத்திரமா இருக்கானாம். மொபைலிலே கூப்பிட்டான். என்னோட டேட்டாபேக் தீந்து போச்சு. கொஞ்சம் என் மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட முடியுமான்னு கேட்டான். எங்கிட்ட இந்த டிஜிட்டல் பேமண்ட் ஆப்பெல்லாம் கிடையாது. காசு கொடுத்துடறேன். கொஞ்சம் பண்ணி குடுத்துடறீங்களா? வெளியே கடையே இல்லை”
“இதிலென்னங்க இருக்கு. பண்ணிடறேன். காசெல்லாம் அப்புறம் வாங்கிக்கறேன்”
“தம்பி மட்டும் இப்போ இருந்திருந்தா அவன் நிலைமை இப்படியா ஆயிருக்கும்? எங்கேயோ கொஞ்ச சம்பளத்துக்கு வேலை செஞ்சி கஷ்டப்பட்டுக்கிட்டு” குரலில் வேதனை தொனித்தது.
“ஆனாலும் உங்க தம்பி ரொம்ப அவசரப்பட்டுட்டார்”
“அதெப்படீங்க? தலைவர் மேலே கொலைப் பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்கினா? பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் பொங்கி எழுந்துட்டான். எவ்ளோ பெரிய வீரனா இருந்தா தீக்குளிச்சிருப்பான்? யாருக்கு அந்த வீரம் வரும்?”
நண்பரை அப்படியே உற்றுப் பார்த்தேன். “ நண்பரே, உங்க தம்பி தீக்குளிச்சான். அவர் குடும்பம் தலைவனை இழந்தது. புள்ளை நடுத்தெருவிலே நின்னான். ஆனா பாருங்க யாருக்காக கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கினாங்களோ அவரும் இவரும் மறுபடியும் ஒண்ணா சேந்துட்டாங்களே”
நண்பர் பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.
“உங்க தம்பி தீக்குளிச்சதால அவரோட தலைவரை மறுபடியும் கட்சியிலே சேத்துக்கலே. ஆனா தீக்குளிச்சவங்களோட எண்ணத்துக்கு எதிரா மறுபடியும் அவரோடயே சேந்துட்டாங்க. தீக்குளிச்சதால என்ன நடக்கும்னு உங்க தம்பி அன்னைக்கு யோசிச்சிருந்தா இன்னைக்கு உங்க தம்பி பிள்ளை இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருக்குமா? “
நண்பர் தலை கவிழ்ந்தார்.
“ஒற்றுமையைக் காட்ட செலவில்லாம மின்விளக்கை அணைச்சு தீபங்களை ஏத்தினா வைரஸ் போயிடுமான்னு கேக்கத் தெரிஞ்ச நீங்க, தீக்குளிக்கறதாலே என்ன பிரயோஜனம்னு இப்போ வரைக்கும் உணர்ந்ததா தெரியலே”
நானே தொடர்ந்தேன். “இனிமேலாவது அடுத்தவங்களைக் கேள்வி கேக்கறதுக்கு முந்தி நீங்களே உங்களைக் கேள்வி கேட்டுக்குங்க. அதுதான் பகுத்தறிவு.”
ரீசார்ஜ் சக்ஸஸ் என மெஸேஜ் வந்ததைக் காண்பித்தேன். நண்பர் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டினார்.
ஸ்ரீஅருண்குமார்