
பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்த விஷயங்களின் தொகுப்பு (இரண்டாம் பாகம்.)
முதல் பாகம் இங்கே -> நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1)
ரயில்வே துறையில் மாநில சுயாட்சிக்கு பாதிப்பு
பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டதால் அந்தக் கட்சியின் மாநிலத்திற்கு அனைத்து ரயில்வே திட்டங்களும் சென்றடைத்தது
கட்சிக்காரனுக்கு காண்ட்ராக்ட் ஜாதிக்காரனுக்கு ஜாப்போஸ்ட்டிங் என்ற குதூகல வாழ்வு முடிவுக்கு வந்தது.
கழுவி ஊற்றப்பட்ட குழுக்கள்
அனைத்து விவகாரங்களுக்கும் ஆறு நாட்களுக்கொரு அமைச்சர் குழு அமைத்து ஆற அமர ஆராய்ந்து அலசி ஆலோசித்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்கிற முடிவை எடுத்து ஒப்புரவோடு இருந்த கூட்டுறவு ஆட்சிமுறையை மதவெறி கும்பல் நடத்தும் அரசு நிறுத்திவிட்டது
மாவோக்களிள் மக்கள் புரட்சியில் மண்
நம் நக்ஸல் நாயகர்கள் காடுகளில் கடுப்பானால் கலெக்டரை கடத்துவது ஏமாந்தால் எம்எல்ஏவை தூக்குவது என்று பலவித்தைகள் காட்டி உல்லாசமாகத் திரிந்தனர் நான்காண்டுகளில் நக்ஸல்கள் வாழ்வும் நாசமானது.
என்ஜிஓக்களுக்கு ஏஞ்ஜியோ
பொருளாதார மேதை மன்மோகனார் ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் கட்டிங் கமிஷன் கலெக்ஷன் என்று பிசியாக இருந்ததால், ஆட்சி நடத்தும் பொறுப்பு முழுநேரப் போராளிகளிடமும், கசங்கிய சேலை, பெரிய பொட்டு, ஜோல்னாப்பையுடன் திரிபவர்கள் உண்டு களிப்பதற்காக நடத்தும் தொண்டு நிறுவனங்களிடமும், இன்னோரன்ன பிற கேப்மாறிகளிடம் கொடுக்கப்பட்டது.
#SaddistModi
#NewsWeDidntSeeInModiGovt