பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்தது ஏராளம்.

 

நசிந்து போன வெடிவைக்கும் கைத்தொழில்

2014 வரையில் வருடத்துக்கு மூன்று நான்கு முறை இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் வெடி வெடித்து கொண்டாடி வந்தனர் எளிய பிரிவினைவாத தீவிரவாத நக்ஸல் பிள்ளைகள் , அந்த கைத்தொழிலை முற்றிலும் நசுக்கி நசிந்து போகச் செய்தார் சாடிஸ்ட் மோடி.

 

 

காணாமல் போன பண வீக்கம்

2014க்கு முன்னர் விரைவீக்கம் பற்றி அறியாதவர்கள் கூட பண வீக்கம் என்ற சொல்லை அறிந்திருந்தனர். யப்பா சாமி இன்னைக்கு வெள்ளிக்கிழமையில்லை என்று அன்றைய மத்திய நிதியமைச்சர் சிவகங்கைச் சீமான் சிதம்பரம் கதறிய நாட்கள் பல, விலையேற்றத்தை கட்டுப்படுத்த எங்களிடம் எந்த மந்திரக்கோலும் இல்லை என்று புலம்பினார் மன்மோகன் சிங். சாடிஸ்ட் மோடியின் ஆட்சியில் மக்கள் பண வீக்கம் என்ற வார்த்தையை மக்கள் மறந்தே போயினர்.

 

 

 

விலையேற்றம் விலையேற்றம்ன்னு புலம்பாதீங்கய்யா கொஞ்சம் பொறுமையா இருங்க என்றார் மன்மோகன் , எங்கே போனது அந்த இனிய நாட்கள்.

 

மீனவர் சங்கத்தினரின் டெல்லி பயணத்துக்கு தடை

புண்ணியவான் மன்மோகன் ஆட்சியில் மாதா மாதம் குறைந்தது நான்கைந்து தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிக்கும் அல்லது சுட்டுக் கொல்லும். இந்த பாசிச பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் நியாயம் கேட்டு மாதந்தோறும் சென்னை டில்லி என பயணம் செய்து வந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் இப்போது கடலுக்கு சென்று தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

        

 

அமைதியின் மறு உருவங்களான இலங்கை ராணுவத்தினர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை அணி தோற்றால் நம்மை தூக்கிப் போட்டு மிதிப்பார்களே அன்று தமிழக மீனவர்கள் அஞ்சி நடுங்கிய நாட்கள் எங்கே.

       

 

தொலைந்து போன கூட்டணி தர்மம்

முந்தைய ஆட்சி எழுநூத்தி எண்பத்தியாரு கட்சிகளின் கூட்டணி ஆட்சியாக நடந்ததால் முக்கிய முடிவுகள் ஒரு சில மணித்துளிகளில் தீர்மானிக்கப்பட்டது , இன்று ஒற்றைக்கட்சி ஆட்சியினால் கூட்டணி தர்மம் ஒழிந்து வறுமையினால் பலரும் பரதேசிகளாய் கூட்டணிக்கு அலையும் நிலைக்கு ஆளான அவலமும் இங்கு நடந்தேறியது.

    

 

படிப்பறிவு இல்லாதோரின் பகலவன் தீம்க தலைவர் மு க ஸ்டாலின் சொன்னதைப் போல இந்த பாசிச நாசிச பாஜக ஆட்சியில் (கலைஞரின்) மக்கள் சந்தித்த இன்னல்களும் இழிவுகளும் ஏராளம் ஏராளம்.

மேலும் படிக்கவும்.. நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 2)

#SaddistModi

#NewsWeDidntSeeInModiGovt

@MosquitoMani

9 Replies to “நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1)”

  1. மோடியின் அடிமை அரசு (அதிமுக) என்று விமர்சனம் செய்யும் தீம்கா தலைவரின் உபிஸ் தொண்டர்கள் அனுதினமும் #ஓசி வாழ்க்கை நடத்துகிறார்களே அதை ஏன் கேடுத்துக்கொள்கிறார்கள். 😏😁

  2. All bandicoots joined to safe guard their loots from Bengal to Kanyakumari ,Kashmir to Kerala and further explore ways to plunder to keep their fortunes from plummeting .

  3. அற்புதமான அலசல் தலைப்பையும் படத்தையும் பார்த்து வெகுண்டேன்.
    படித்து முடித்த பின்னர் நீங்க வச்சி செஞ்சது விளங்கியது..நன்னி

    1. 😂😂😂 தலைப்பு இப்படி வெச்சதே மக்களை படிக்கத் தூண்டத்தான் . இன்னும் நிறைய வருது , படித்து மற்றவர்களுக்கு பகிரவும். ஆதரவுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.