
நித்யானந்தாசுவாமிக்கு எதிராக போலியாக வீடியோ வெளியிட்ட , லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து நித்யானந்தர மற்றும் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பதாக ஒரு பரபரப்பான போலி வீடியோவை தயாரித்து 2010ஆம் ஆண்டில் வெளியிட்டனர்.
இது தொடர்பாக கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டது போன்று சென்னை நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது.
2010 ம் ஆண்டு சுவாமி நித்யானந்தருடன் வீடியோவில் இருப்பதாக தொடர்புபடுத்தி சொல்லப்பட்ட நடிகை ரஞ்சிதா அவர்கள் பெங்களுரில் இருக்கும் ராம நகர கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் மற்றும் ஆரத்தி ராவ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவர் தொடர்ந்திருந்த வழக்கில் நேற்று ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது . ராமநகர கூடுதல் சிவில் நீதிபதி இன்று, லெனின் கருப்பன் மற்றும் ஆரத்தி ராவ் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் வழங்கினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லெனின் கருப்பன் மீது பாலியல் தாக்குதல், கிரிமினல் மிரட்டல், பணம் பறித்தல் போன்ற முக்கிய பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான குற்றங்களாகும்.
இதற்கு முன்னர், கர்நாடக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் முறையீடு/மனுவை நிராகரித்தது. அதேபோன்று அமர்வு நீதிமன்றமும் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் தாக்கல் செய்த விண்ணப்பங்களை (Discharge Petition) நிராகரித்து அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும்.
லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் ஆகியோர் மீது பாலியல் தாக்குதல், கிரிமினல் மிரட்டல், பணம் பறித்தல் போன்ற முக்கிய பிரிவுகளில் சென்னை நீதிமன்றத்திலும குற்றங்கள் பதியப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
#சுவாமி நித்யானந்தர் #வீடியோ #