
சென்னை: “இப்படியா சிறைக்குள் பிரியாணி செய்து சாப்பிடுவது? அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது”
என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது.
பிரியாணி வீடியோ
இந்நிலையில் நேற்று சிறைக்குள் கைதிகள் பிரியாணி செய்யும் வீடியோ வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் நேற்று முதல் H.ராஜாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்
எச்.ராஜா கேட்டதில் தப்பே இல்லை… இதைத்தானே அன்று அவர் பேசினார். இப்போது தெரிந்துவிட்டதாக சிறை வண்டவாளம், அவர் ஒன்றும் இல்லாததை கூறவில்லையே” என்று சரமாரியாக பதிவிட்டு வருகிறார்கள்.