
பகுதி 1 இன் தொடர்ச்சி…
தெரேசாவின் கபட நாடகம்
நான் பயன்படுத்திய உரிச்சொற்கள் அனைத்தையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளேன். நான் எந்த சொல்லையும் எப்போதும் கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்துவதே இல்லை. அன்னை தெரேசாவை போன்றோருக்கு “கபட வேடதாரி” என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். அவர்களை அவ்வாறு ஏன் அழைத்தேன் என்றால் அடிப்படையில் இவர்கள் இரண்டு வழக்கை வாழ்கின்றனர் – வெளியே ஒரு வாழ்க்கையும், உள்ளே வேறு ஒரு வாழ்க்கையையும் வாழ்கின்றனர்.
தெரேசா எழுதுகிறார்:
ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்த ஒரு கிருத்துவ குடும்பம் குழந்தை தத்துக்கொடுக்க மறுக்கப்பட்டது, அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல அந்த சமயத்தில் எங்கள் இடத்தில் தத்துக்கொடுக்க குழந்தைகள் இல்லை
ஆக, ஆயிரக்கணக்கான அனாதை குழந்தைகளுக்கு உதவுதல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது, அவர் நடத்திவரும் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் அனாதை குழந்தைகள் உள்ளனர். திடீரென அவர் இல்லத்தில் அனாதை குழந்தைகள் இல்லாமல் போய்விட்டனரா? இந்தியாவில் அனாதை குழந்தைகளுக்கா பஞ்சம்? இந்தியர்கள் அனாதைகளை உருவாக்கி கொண்டே போகலாம், இன்னும் சொல்லப்போனால் உங்கள் தேவைக்கு மீறி!
அவர் நடத்திவரும் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் அனாதை குழந்தைகள் உள்ளனர். திடீரென அவர் இல்லத்தில் அனாதை குழந்தைகே இல்லாமல் போய்விட்டனரா? [ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்த கிருத்துவ குடும்பத்திற்கு]
அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்திற்கு உடனடியாக தத்தெடுக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் இல்லத்தில் அனாதைகளே இல்லையென்றால், அனைத்து அனாதை குழந்தைகளையும் தத்து கொடுத்துவிட்டனர் என்றால், பிறகு எழுநூறு கன்யாஸ்த்ரீகளை வைத்துக்கொண்டு அன்னை தெரேசா என்ன செய்கிறார்? அவர்களின் பணி தான் என்ன? எழுநூறு கன்யாஸ்த்ரீகள்! யாருக்காக பணிவிடை செய்கிறார்கள்? ஒரு அனாதை குழந்தை கூட இல்லை – ஆச்சர்யமாக உள்ளது, அதுவும் கல்கத்தாவில்! சாலைகளில் எங்குவேண்டுமளம் அனாதைகளை காணலாம். குப்பை தொட்டியில் குழந்தைகளை கண்டெடுக்கலாம்; அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்று வெளியே பார்த்திருக்கலாம், எண்ணற்ற அனாதை குழந்தைகளை கண்டெடுத்திருக்கலாம். அவர்களே தாமாக வருவார், நீங்கள் போய் அழைத்துவர தேவையில்லை.
திடீரென்று அவரில்லத்தில் அனாதைகள் இல்லாமல் போய்விட்டனர்! ஒருவேளை அந்த குடும்பம் தத்தெடுக்க உடனடியாக மறுக்கப்பட்டிருந்தால் அது வேறு விஷயம், ஆனால் அந்த குடும்பத்திற்கு மறுப்பு உடனே தெரிவிக்கப்படவில்லை. அவர்களிடத்தில், “நீங்கள் குழந்தையை தத்தெடுக்கலாம், இந்த படிவத்தை நிரப்புங்கள்” என்று கூறியுள்ளனர். அவர்களும் அதை நிரப்பினர். அவர்கள் தங்களது மதத்தை குறிப்பிடும் வரை, அந்த நொடி வரை, அனாதைகள் இருந்தனர், அவர்கள் அந்த படிவத்தை நிரப்பி, “நாங்கள் ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள்” என்று குறிப்பட்டதும் உடனடியாக அன்னை தெரேசாவிடம் தத்துக்கொடுக்க அநாதை குழந்தைகள் இல்லை.
இந்த காரணத்தை அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்திடம் கூறவில்லை. இது கபடத்தனம், மோசடித்தனம், கொச்சைத்தனமாது. அங்கு குழந்தைகள் இருந்தனர், பிறகு அவர்களிடத்தில் “எங்களிடம் அனாதை குழந்தைகள் இல்லை” என்று எப்படி கூறுவார்? அக்குழந்தைகள் எந்நேரமும் காட்சிப்பொருள்களாகவே இருக்கின்றனர்.
தெரேசா எனக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்:
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், எங்கள் இல்லத்திற்கு வந்து எங்கள் அநாதை குழந்தைகளையும் எங்கள் பணியையும் பார்வையிட வரவேற்கிறேன்
அவர்கள் தொடர்ந்து கண்காட்சியில் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்தினர் தத்தெடுக்க ஏற்கனவே ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்துவிட்டனர், அதனால் தெரேசாவால் அவர்களிடத்தில் “மன்னிக்கவும் எங்களில்லத்தில் அனாதை குழந்தைகள் இல்லை” என்ற கூற முடியவில்லை.
தெரேசா அவர்களிடத்தில் கூறியதாவது: “இந்த அனாதைக்குழந்தைகள் ரோமன் கத்தோலிக்க வழியில் வளர்க்கப்பட்டுள்ளனர் அதனால் அவரகளது உளவியல் வளர்ச்சிக்கு பாதிப்பக இருக்கும், ஏனெனில் அது அவரகள் வாழ்க்கையில் இடையூறாக இருக்கும். இப்போது அவர்களை உங்களிடத்தில் அனுப்பிவைத்தான் அவர்களது அமைதி குலைத்துவிடும் அது அவர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. அதனால் தான் குழந்தையை உங்களுக்கு தத்து கொடுக்க இயலாது, நீங்கள் ப்ராட்டஸ்டண்ட் என்பதால் அல்ல.”
“ஒருவேளை அவர்கள் படிவத்தில் “கத்தோலிக்” என்று நிரப்பியிருந்தால் உடனடியாக குழந்தையை தத்தெடுக்க முடிந்திருக்கும்.”
அது தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம். அந்த குடும்பத்தினர் முட்டாள்கள் இல்லை; கணவர் ஐரோப்பா பலக்லைக்கழம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார் – அவர் காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார், மனைவியும் அதிர்ச்சியடைந்தார். ஒரு குழந்தையை தத்தெடுக்க அவர்கள் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளனர், அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் என்பதால் தத்தெடுக்க மறுக்கப்பட்டுவிட்டனர். ஒருவேளை அவர்கள் படிவத்தில் “கத்தோலிக்” என்று நிரப்பியிருந்தால் உடனடியாக குழந்தையை தத்தெடுக்க முடிந்திருக்கும்.
தெரேசாவின் மதம் மாற்றுதல் பற்றி
ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் – இந்த குழந்தைகள் அடிப்படையில் இந்து தர்மத்தை சேர்ந்தவர்கள். அன்னை தெரேசா அக்குழந்தைகளின் உளவியல் நலனில் அவ்வளவு அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் அவர்களை இந்து தர்மத்தின் அடிப்படையில் வளர்ந்திருக்க வேண்டும். அனால் அக்குழந்தைகள் கத்தோலிக்க முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்து தர்மத்தை சார்ந்த குழந்தைகள் கத்தோலிக்க முறைப்படி வளர்க்கப்படுகின்றன, அது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்காதா? இப்போது அவர்களது உளவியல் நலன் பாதிக்கப்படுகிறதே? இது உண்மையானால், அன்னை தெரேசா எந்த நபரையும் கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற முயலக்கூடாது.
அது தான் அவர்களது முழுநேர வேலை: மதம் மாற்றுதல். சற்று தினங்களுக்கு முன் இந்திய நாடாளுமன்றத்தில் “மத சுதந்திரம்”(Freedom of Religion) என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவின் நோக்கம், எவரையும் மற்றவர்களை மத மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது. ஒருவர் தானாகவே முன்வந்து அவர் விருப்பத்தினால் மதம் மாறலாமே தவிர யாரும் யாரையும் மதம் மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது. அன்னை தெரேசா தான் இதை எதிர்த்த முதல் நபர். அவர் தனது வாழக்கையில் எதையுமே எதிர்த்ததில்லை, இது தான் முதல் முறை, கடைசியாக கூட இருக்கலாம். அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினர், இருவருக்கும் இடையே சூடான சர்ச்சை வெடித்தது. தெரேசாவும் அவரை சார்ந்தவர்களும் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் (அரசியல்வாதிகள் எந்நேரமும் வாக்குகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பர், கிருத்துவ சமுதாய மக்களின் வாக்குகளை இழக்க முடியாது) எனவே அந்த மசோதா கைவிடப்பட்டது, எந்த விவாதமும் இல்லாமல் அப்படியே சத்தமின்றி கைவிடப்பட்டது.
மக்களை மதம் மாற்றுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளார் தெரேசா. மக்களை மதம் மாற்றப்படாவிட்டால், உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் யாராக/என்னவாக இருந்திருப்பார்கள்? கிருத்துவ மதம் இரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் இருக்கிறது, ஆனால் உலகத்தில் அதிக மக்கள் எண்ணிக்கையை கொண்ட மதமாக இருக்கிறது. எங்கிருந்து இந்த மக்கள் வந்தனர்? எல்லோரும் மதம் மாற்றப்பட்டதால் வந்தவர்கள். ஆனால் அவர்களது மதம் மாற்றும் முறைகள் வேறுபட்டதாக இருக்கும்.
முற்காலங்களில் கிருத்துவர்களும் முஹமதியர்களும் போர்தொடுத்து மக்களை வாள்முனையில் தங்கள் மதத்திற்கு மாற்றினார்.
முஹம்மதியர்கள் இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளனர், ஏனெனில் அவர்கள் இன்னும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நவீன காலங்களுக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள், அது எல்லாவற்றிலும் மற்றவர்களை விட தன்னை நவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது. வாள்முனையில் உங்களை வற்புறுத்தி மதம் மற்றும் பழைய யுக்தியை கைவிட்டுவிட்டனர், அது வழக்கொழிந்து விட்டது. இப்போது அவர்கள் உங்களுக்கு சேவையாற்றுகின்றனர் – உங்களுக்கு உணவு, சேவை, கல்வி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களை கொடுக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். ராணுவ சக்தியாக இருப்பதிலிருந்து தற்போது பொருளாதார சக்தியாக மாறிவிட்டனர், ஆனால் மதமாற்றம் தொடர்கிறது.
நிறைய ஆதாரங்கள் உள்ளன, கிருத்துவர்கள் இதுவரை ஒரு பணக்கார இந்துவை கூட மதம் மாற்ற முடியவில்லை. ஒரு பணக்கார இந்துவை எப்படி மதமாற்றுவது? அவனுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. உங்களால் ஏழைகளையும், யாசிப்பவர்களையும் தான் மாற்றமுடியும் ஏனென்றால் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பது எளிது, எளிதாக அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம்.
அன்னை தெரேசா உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், ஒரு நபரை மதம் மாற்றினால் அவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான் என்று நம்பினால், தெரேசா மதம் மாற்றுதலுக்கு எதிராக இருக்கவேண்டும், ஒருவேளை அந்த நபர் தானாக முன்வந்து தனது மாற்றிக்கொண்டாலே தவிற.
என்னைப்பொறுத்தவரை, அன்னை தெரசாவுக்கு அவரை போன்றோரும் கபட வேடதாரிகள்: சொல்வது ஒன்று, அழகிய முகப்புக்கு பின்னால் செய்வது முற்றிலும் வேறொன்று. இது தான் அரசியலின் மொத்த விளையாடும் – எண்களின் அரசியல்.
…தொடரும்
நன்றி: huffingtonpost.in