
பல தசாப்தங்களாக கல்கத்தாவின் அன்னை தெரேசாவையும் அவரது பணிக்கு பின்னால் மறைந்திருக்கும் சித்தாந்தத்தையும் குறிப்பாக அவரது மதம் மாற்றும் நோக்கம் மற்றும் சமூக அங்கீகாரத்துடன் குழந்தைகளுக்கு போதனை செய்வது (மத கல்வி மற்றும் மதம் மாற்றுதல் மூலம்) போன்ற செயல்களை ஓஷோ கடுமையாக விமர்சித்து வந்தார். இவ்வனைத்தும் “ஏழைகளுக்கான சேவை” என்ற போர்வையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. “ஏழைகளுக்கான சேவை” என்ற கூறு, கிருத்தவ மத ஸ்தாபனத்தை நிறுவுவதற்கும் அதனை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கும் கிருத்துவ மதத்தின் தனித்துவம் வாய்ந்த மதம் மாற்றும் அரசியல் யுக்தி. ஓஷோவின் உரைகள் ஒன்றில் ஒரு பகுதியாக, தான் அன்னை தெரேசா நோபல் பரிசு பெற்றதை பற்றி விமர்சித்ததை அடுத்து தனக்கு தெரேசா கடிதம் எழுதியதற்கு பதில் அளிக்கிறார்.
அரசியல்வாதிகளும் மத போதகர்களும் எல்லா காலங்களிலும் ஆழ்ந்த சதித்திட்டம் தீட்டுவதில் கூட்டுகளவாணிகள். அவர்கள் மனிதனை இரண்டாக வகுத்துவிட்டனர்: அரசியல்வாதி மனிதனுக்கு வெளியே ஆளுகிறான், மத போதகன் மனிதனுக்குள்ளே ஆளுகிறான். அரசியல்வாதி வெளிப்புறம்; மத போதகன் உள்புறம். மனிதத்துக்கு எதிராக ஆழ்ந்த சதித்திட்டத்தில் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம் – நான் அவர்களின் நோக்கங்களை சந்தேகிக்கவில்லை, அவர்கள் தன்னை அறியாமலே கூட இதை செய்துகொண்டிருக்கலாம்.
“ஏழை மக்கள், அனாதைகள், விதவைகள், முதியவர்கள் ஆகியோருக்கு நல்ல எண்ணத்துடன் அவர் சேவையாற்றிவருகிறார், ஆனால் நரகத்திற்கு செல்லும் வழி நல்ல நோக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது!”
சற்று தினங்களுக்கு முன் அன்னை தெரேசாவிடம் இருந்து எனக்கு கடிதம் ஒன்று வந்தது. அவரது நேர்மையை பற்றி விமர்சிக்கும் நோக்கம் எனக்கு இல்லை – அவர் கடிதத்தில் என்ன எழுதியிருந்தாரோ அது கபடமில்லாது இருந்தது, அனால் தன்னுணர்வற்று இருந்தது. தான் என்ன எழுதுகிறோம் என்று அறியாமல் எழுதியிருந்தார். அது எந்திரம் போல, மனித எந்திரம் எழுதியது போல இருந்தது. அவர் சொல்கிறார்:
“சற்றுமுன் உங்கள் உரை அடங்கிய துண்டுசெய்தி ஒன்று என்னிடம் வந்தது. நீங்கள் பேசியதை கண்டு, உங்களால் அவ்வாறு பேசக்கூடும் என்பதை கண்டு உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். குறிப்பரை: நோபல் பரிசு. நீங்கள் என் பெயருக்கு முன் பயன்படுத்திய உரிச்சொற்களுக்காக உங்களை மிகுந்த அன்போடு மன்னித்துவிட்டேன்.”
அவர் எனக்காக பரிதாபப்படுகிறார் — நான் கடிதத்தை நன்கு அனுபவித்து ரசித்தேன்! நான் அவருக்கு பயன்படுத்திய உரிச்சொற்களை எள்ளளவும் அவர் புரிந்துகொள்ளவில்லை. அனால் அவருக்கு அச்சொற்களின் அர்த்தம் என்ன என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவர் தனக்காகவே பரிதாபப்பட்டிருப்பார். நான் பயன்படுத்திய உரிச்சொற்கள் – “ஏமாற்றுக்காரர்”, “பித்தலாட்டக்காரர்” மற்றும் “கபட வேடதாரி”.
தெரேசாவின் ஏமாற்றுத்தனம் பற்றி
ஏமாற்றுக்காரர் மற்றவர்களை ஏமாற்றும் நபர் மட்டுமல்ல. மிகவும் அடிப்படை அர்த்தத்தில் ஏமாற்றுக்காரன் தன்னையே ஏமாற்றுகிறான். ஏமாற்றம் அங்கு தான் தொடங்குகிறது. நீங்கள் மற்றவர்களை ஏமாற்ற விரும்பினால், முதலில் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் உங்களை ஏமாற்றி விட்டால், வேறொருவர் உண்மையை உணர்த்தி உங்கள் நிலையில் இருந்து அதிரவைக்கும்வரை உங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணராது இருப்பீர்கள். ஏமாற்றம் இருபுறமும் மிக ஆழமாக சென்று விட்டது என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள், இது இரட்டை முனைகள் கொண்ட வாள்.
இந்த இரட்டை முனைகள் நிறைந்த அர்த்தத்தில் அவர் ஒரு ஏமாற்றுக்காரர். முதலில் அவர் தன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார், ஏனெனில் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் நிச்சயமாக ஒரு சேவை சார்ந்த வாழ்க்கையை, இரக்கமும் அன்பும் நிறைந்த ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும் – ஆனால் சேவை மட்டும் சார்ந்த வாழ்க்கையால் தியான நிலை நிறைந்த ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. அன்னை தெரேசாவுக்கு தியானம் பற்றி எதுவும் தெரியாது – இது அவருடைய அடிப்படை ஏமாற்றுத்தனம் ஆகும். ஏழை மக்கள், அனாதைகள், விதவைகள், முதியவர்கள் ஆகியோருக்கு பணிவிடை செய்கிறார், அவர் நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு சேவை செய்து வருகிறார், ஆனால் நரகத்திற்கு செல்லும் வழி நல்ல எண்ணங்கள் நிறைந்ததாக இருக்கிறது! அவருடைய எண்ணங்கள் தவறு என்று நான் கூறவில்லை, ஆனால் முடிவு உங்கள் நோக்கங்களை சார்ந்து இல்லை.
அழகிய பூக்களை கொடுக்கும் என்ற நோக்கத்துடன் நீங்கள் மரத்தின் விதைகளை விதைக்கலாம் ஆனால் அது முட்கள் மட்டுமே வளரக்கூடிய மரமாக மாறிவிடும் ஏனெனில் நீங்கள் விதைத்த விதை மலர்களை தரக்கூடிய மரத்தின் விதைகள் இல்லை. நீங்கள் நல்ல எண்ணத்துடன் தான் செய்தீர்கள், கடினமாக உழைத்தீர்கள், ஆனால் முடிவு? நீங்கள் விதைத்த விதை சார்ந்து உள்ளது, உங்கள் எண்ணங்களின் அடிப்படையில் இல்லை.
“ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் ஏழை மக்களுக்கு உணவளிக்கிறார். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? அந்த பணத்தை யார் நன்கொடையாக தருகிறார்கள்?”
அவர் ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார் அனால் பல நூற்றாண்டுகளாக ஏழைகளுக்கு சேவை செய்யப்பட்டு தான் வருகிறது, வறுமை உலகில் இருந்து இதுவரை மறைந்த பாடில்லை. ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் வறுமை/ஏழ்மை உலகில் இருந்து மறந்துவிடப்போவதில்லை இன்னும் சொல்லப்போனால் இந்த மொத்த சமூகமும் இருப்பதே ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் தான். தங்களை முற்றிலும் நிராகரித்துவிட்டனர் என்ற உணர்வு எழாமல் இருக்க ஏழைகளுக்கு ஏதோ ஒரு வழியில் சேவையாற்ற வேண்டும். இல்லையெனில் பழிவாங்கும் உணர்வு அவர்களிடத்தில் பலமாக உருவெடுக்கும், காட்டுமிராண்டிகளாக மாறுவர், கொலைகாரர்களாகக் கூட மாற நேரிடும். இந்த சமுதாயம் அவர்களுக்காக, அவர்கள் பிள்ளைகளுக்கு, முதியோர்களுக்கு, விதவைகளுக்கு நிறைய உதவி செய்துள்ளது என்று அவர்களை ஆறுதல்படுத்துவது நல்லது – இது ஒரு “நல்ல” சமுதாயம்.
எனவே, ஏழைகளை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி சம்பாதித்த அதே மக்கள் இவரது (தெரேசா) மத போதக பணிக்காக நன்கொடை அளிக்கின்றனர். அன்னை தெரேசாவின் மிஷனரி பணி தொண்டு/கருணை/ஈகை சார்ந்த பணி -“Missionaries of Charity” என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் ஏழை மக்களுக்கு உணவளிக்கிறார். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? அந்த பணத்தை யார் நன்கொடையாக தருகிறார்கள்?
1974 ஆம் ஆண்டு போப்பாண்டவர் தெரேசாவுக்கு கேடில்லேக் (Cadillac) கார் பரிசாக வழங்கினார். அதை உடனே அவர் விற்றுவிட்டார். அன்னை தெரேசாவின் கார் என்பதால் அதிக விலை குடுத்து வாங்கப்பட்டது, அந்த பணம் ஏழைகளுக்கு சென்றது. எல்லோரும் பாராட்டினார், அனால் என் கேள்வி, அந்த கேடில்லேக் கார் முதலில் எங்கிருந்து வந்தது? போப்பாண்டவர் அதை உருவாக்கவில்லை, அவர் மாயாஜாலம் எதுவும் செய்யவில்லை! கேடில்லேக் காரை தானமாக தருமளவுக்கு பணம் இருப்பர் ஒருவரிடம் இருந்து தான் அது வந்திருக்க வேண்டும். மேலும் போப்பாண்டவர் உலகில் வேறு எவரையும் விட அதிகமாக பணம் வைத்திருக்கிறார். அந்த பணம் எங்கிருந்து வருகிறது?
அந்த பணத்தில் இருந்து சிறிதளவு, மொத்த பணத்தில் 1% கூட இருக்காது, மட்டும் Missionaries of Charity மூலம் ஏழைகளுக்கு செல்கிறது. இந்த நிறுவனங்கள் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்கின்றன; பணக்காரர்களுக்கு சேவை செய்கின்றனர் ஏழைகளுக்கு அல்ல.
மேலோட்டமாக பார்க்கும்போது அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர் – ஆனால் அடிப்படையில் மறைமுகமாக அவர்கள் பணக்காரர்களுக்கு சேவை செய்கிறார்கள். இவர்கள் ஏழைகளின் உள்ளத்தில் “இது ஒரு நல்ல சமுதாயம், இது மோசமான சமுதாயம் அல்ல, நாம் அதற்கு எதிராக போராட கூடாது…” என்ற உணர்வை பதித்துவிடுகின்றனர்.
இந்த மிஷனரிக்கள் ஏழைகளுக்கு நம்பிக்கை அளிப்பார்கள். மிஷனரிகள் அங்கு இல்லை என்றால், அந்த ஏழை மக்கள் மிகவும் நம்பிக்கையற்றவராக மாறிவிடுவர், அந்த நம்பிக்கையினமையால் கலகம் உருவாகி புரட்சி வெடிக்கக்கூடும்.
இப்போது, நான் அவரை விமர்சித்துள்ளேன், அவருக்கு நோபல் பரிசு கொடுத்திருக்க கூடாது என்று கூறினேன், அவரை நான் புண்படுத்தி விட்டேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார் (“குறிப்பரை: நோபல் பரிசு.”):
மேலோட்டமாக பார்க்கும்போது அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர் – ஆனால் அடிப்படையில் மறைமுகமாக அவர்கள் பணக்காரர்களுக்கு சேவை செய்கிறார்கள்.
இந்த நோபல் என்ற மனிதன் உலகிலேயே மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவன். முதல் உலகப்போரில் இவனது ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. உலகிலேயே மிக பெரிய ஆயுத தயாரிப்பாளனாக இருந்தவன். முதல் உலக போரின் வாயிலாக பெருமளவு பணத்தை சம்பாதித்தான். கோடிக்கணக்கில் மக்கள் இறந்தனர் – மரணத்தை உற்பத்தி செய்பவனாய் விளங்கினான். நோபல் பரிசுகள் அவன் சம்பாதித்த பணத்தின் வாயிலாக கிடைத்துக்கொண்டிருக்கும் வட்டியை மட்டும் கொண்டே வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு பணத்தை சம்பாதித்து வைத்துள்ளான். ஒவொரு ஆண்டும் டஜன் கணக்கில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. எவ்வளவு பணத்தை இவன் விட்டு சென்றுள்ளான்? எங்கிருந்து இந்த பணம் வந்தது? நோபல் பரிசுகளுக்கு வழங்கப்படும் பணத்தை போல ரத்தக்கறை படிந்த பணத்தை உலகில் வேறெங்கும் காணமுடியாது
இப்போது இந்த நோபல் பரிசு பணம் Missionaries of Charityக்கு சென்றுள்ளது. இந்த பணம் போரின் வாயிலாக, ரத்தத்தின் வாயிலாக வந்தது; கொலை, மரணம் வாயிலாக வந்த பணம். இப்போது அப்பணம் சில நூறு அனாதைகள், ஏழாயிரம் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறது. – கோடிக்கணக்கில் கொன்று ஏழாயிரம் பேரை உண்ணவைக்கிறது; சில அனாதைகளை வளர்த்து பல கோடி அனாதைகளை உருவாகுகிறது! இது ஒரு விசித்திரமான உலகம். என்ன வகையான கணக்கு இது? முதலில் கோடிக்கணக்கான அனாதைகளை உருவாக்கி பிறகு சில நூறு அனாதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மிஷனிருக்கு அனுப்பி வைப்பது!
அன்னை தெரேசாவால் நோபல் பரிசை மறுக்க முடியவில்லை.. பாராட்டப்படவேண்டிய ஆசை, உலகில் மரியாதைக்குரிய ஒரு ஆசை. நோபல் பாரிசு உங்களுக்கு உலகில் மிகப்பெரிய அளவில் மரியாதையை ஈட்டித்தரும். அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.
ஜான்-பால் சர்ட்ரே (Jean-Paul Sartre ) அன்னை தெரேசாவை விட சிறந்த ஆன்மீகவாதியாக காணப்படுகிறார் ஏனென்றால் அவர் அந்த பரிசை பெற மறுத்துவிட்டார், அந்த பணத்தை பெற மறுத்துவிட்டார், அதன் மூலம் தனக்கு கிட்டக்கூடிய மரியாதையை மறுத்துவிட்டார். அதற்கான காரணம்?அவை அனைத்தும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தின் மூலம் வருகிறது. – ஒன்று. இரண்டாவதாக, அவர் கூறியதாவது, ” நான் எந்தவித மரியாதையையும் பித்து பிடித்த இந்த சமூகத்தில் இருந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன். பித்து பிடித்த இந்த சமுதாயத்தில் இருந்து மரியாதையை ஏற்றுக்கொண்டால் பித்து பிடித்த மனிதத்தன்மையை மதித்து ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.”
இந்த மனிதன் தெரேசாவாவை விட ஆன்மீகம் மிகுந்தவராகவும் மிகவும் உண்மையானவராகவும் தெரிகிறார்.
இந்த நோபல் பரிசு பணம் Missionaries of Charityக்கு சென்றுள்ளது. இந்த பணம் போரின் வாயிலாக, ரத்தத்தின் வாயிலாக வந்தது; கொலை, மரணம் வாயிலாக வந்த பணம்
அதனால் தான் அன்னை தெரேசாவை போன்றவர்களை “ஏமாற்றுக்காரர்கள்” என்று அழைத்தேன். அவர்கள் தெரிந்தே ஏமாற்றுக்காரர்களாக இருப்பதில்லை, நிச்சயமாக வேண்டுமென்றே இல்லை, அனால் அது ஒரு பொருட்டே இல்லை. அதன் விளைவு, இறுதி முடிவு தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அவர்களது குறிக்கோள் இந்த சமூகத்தில் ஒரு மசகு எண்ணெய் (lubricant) போல செயல்படுவதே ஏனெனில் இந்த சமுதாய சக்கரம், மற்றவர்களை பயன்படுத்தி சுரண்டுவதற்கு எதுவாக இருக்கும் சக்கரங்கள் மற்றும் அடக்குமுறை சக்கரங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் சீராக சுழலலாம். தெரேசா போன்ற மக்கள் லூப்ரிகண்டுகள்! அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதோடு தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
தெரேசாவின் பித்தலாட்டத்தனம் பற்றி
அன்னை தெரேசாவை போன்றவர்களை “பித்தலாட்டக்காரர்கள்” என்றழைத்தேன். ஏனெனில் ஒரு உண்மையான ஆன்மீகவாதி, இயேசுவை போன்ற ஒரு மனிதர் – இயேசுவிற்கு நோபல் பரிசு அளிப்பதை பற்றி உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? சாத்தியமேயில்லை! சாக்ரடீஸிற்கு நோபல் தருவது பற்றி உங்களால் எண்ணிப்பார்க்க இயலுமா? அல்லது மன்சூர்-அல் ஹல்லேஜிற்கு நோபல் பரிசு? இயேசு நோபல் பரிசு வாங்க இயலாதபோது, சாக்ரடீஸ் பெற இயலாதபோது – இவர்கள் உண்மையிலேயே சிறந்த ஆன்மீகவாதிகள், யார் இந்த அன்னை தெரேசா?
உண்மையான ஆன்மீகவாதி ஒரு கிளர்ச்சியாளன், சமூகம் அவனை கண்டிக்கும். இயேசு ஒரு குற்றவாளியை போல கண்டிக்கப்பட்டார், அன்னை தெரேசா துறவியை போல மதிக்கப்படுகிறார். இது சிந்திக்க வேண்டிய விஷயம்: அன்னை தெரேசா சரி என்றால், இயேசு ஒரு குற்றவாளி, ஒருவேளை இயேசு சரி என்றால் அன்னை தெரேசா ஒரு பித்தலாட்டக்காரரே தவிற வேறு ஒன்றும் இல்லை. பித்தலாட்டக்காரர்கள் எப்பொழுதும் இந்த சமூகத்தால் புகழப்படுவர் ஏனெனில் அவர்கள் உதவியாக இருப்பர் – இந்த சமூகத்திற்கு உதவியாக, சமூகத்தில் நிலைமை மாறாமல் இருக்க உதவியாக இருப்பர்.
நன்றி: huffingtonpost.in