
கோபமும் மன்னிப்பும்
நான் அன்னை தெரேசாவை மன்னிக்கப்போவதில்லை. ஏனென்றால் நான் அவர் மீது கோபமாகவே இல்லை. நான் என் அவரை மன்னிக்க வேண்டும்? அவர் என் மீது கோபமாக இருந்திருக்கவேண்டும்.
“என் பெயருக்கு முன்னால் நீங்கள் பயன்படுத்திய உரிச்சொற்களுக்காக உங்களை மிகுந்த அன்போடு மன்னிக்கிறேன்.” என்று அவர் சொல்கிறார். முதலில், அன்பு ஒருவரை மன்னிக்கத்தேவையில்லை, ஏனெனில் அன்பு கோபமடைவதில்லை. ஒருவரை மன்னிக்க, நீங்கள் முதலில் அவர் மீது கோபம் கொண்டிருக்கவேண்டும், அது ஒரு முன்நிபந்தனை. நான் அன்னை தெரேசாவை மன்னிக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் அவர் மீது கோபமாகவே இல்லை. நான் என் அவரை மன்னிக்க வேண்டும்? அவர் என் மீது கோபமாக இருந்திருக்கவேண்டும். இதனால் தான் இந்த விஷயங்களை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.
புத்தர் யாருக்கும் மன்னிப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அதற்கு காரணம் அவர் எப்போதும் கோபப்படவே மாட்டார். முதலில் கோபப்படாமல் ஒருவரை எவ்வாறு மன்னிப்பது? தெரேசா கோபமாக இருந்திருக்க வேண்டும். இதைத்தான் நான் அறியாமை என்று அழைக்கிறேன்: தான் என்ன எழுதுகிறோம் என்றே அவருக்கு தெரியவில்லை — அவர் எனக்கு எழுதிய கடிதத்தை நான் என்ன செய்யப்போகிறேன் என்றும் அவருக்கு தெரியவில்லை!
அவர் சொல்கிறார், “மிகுந்த அன்புடன் நான் உங்களை மன்னிக்கிறேன்“– எதோ சிறிது அன்பு, மிகுந்த அன்பு போன்ற விஷயங்கள் இருப்பது போல. அன்பு எப்போதும் வெறும் அன்பு தான். அது பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்க முடியாது. அன்பை எடைபோட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு கிலோ அன்பு, இரண்டு கிலோ அன்பு? எவ்வளவு கிலோ அன்பு இருந்தால் அது “மிகுந்த” அன்பு? இல்லை டன் கணக்கில் இருக்கவேண்டுமா?
அன்பு ஒரு அளவில்லை அது ஒரு தரம். அப்படி நான் என்ன குற்றம் செய்துவிட்டேன் என்னை அவர் மன்னிக்கிறார்? வெறும் கத்தோலிக்க மடத்தனம் இது – மன்னித்துக்கொண்டே இருப்பார்கள்! நான் எந்த பாவமும் செய்தேன் என்று சொல்லவில்லை, பிறகு என்னை என் அவர் மன்னிக்க வேண்டும்?
அவர் அந்த கடிதத்தில் கூறுகிறார். “தத்துக்கொடுப்பதன் மூலம் நான் கருக்கலைப்பு பாவத்திற்கு எதிராக போராடுகிறேன்.” கருக்கலைப்பு ஒரு பாவம் இல்லை — மாக்கள் தொகை மிக அதிகம் உள்ள இந்த உலகத்தில், கருக்கலைப்பு ஒரு நல்லொழுக்கம்.
நான் தெரேசாவிற்கு பயன்படுத்திய சொற்கள் எதையும் திரும்பபெறப்போவதில்லை, இன்னும் சிலவற்றை சேர்க்க விரும்புகிறேன்: அவர் ஒரு முட்டாள், தரமற்றவர், அறிவிலி! யாரவது மன்னிக்கப்பட வேண்டுமென்றால் அது தெரேஸாதான் நான் இல்லை. அவர் அந்த கடிதத்தில் கூறுகிறார். “தத்துக்கொடுப்பதன் மூலம் நான் கருக்கலைப்பு பாவத்திற்கு எதிராக போராடுகிறேன்.” கருக்கலைப்பு ஒரு பாவம் இல்லை — மக்கள் தொகை மிக அதிகம் உள்ள இந்த உலகத்தில், கருக்கலைப்பு ஒரு நல்லொழுக்கம். கருக்கலைப்பு ஒரு பாவம் என்றால், போலாந்தை சேர்ந்த அந்த போப் (போப் ஜான் பால் II) மற்றும் அன்னை தெரேசா மற்றும் அவர்கள் கூட்டாளிகள் அதற்கு காரணம், ஏனென்றால் அவர்கள் கருத்தடை மருந்துகளுக்கு எதிரானவர்கள், கருத்தடை/பிறப்பு கட்டுப்பாடு முறைகளுக்கு எதிரானவர்கள், மாத்திரைகள் பயன்படுத்துவதற்கும் எதிரானவர்கள். இவர்கள் தான் கருக்கலைப்பிற்கு காரணமாவார்கள், இவர்கள் தன அதற்கு பொறுப்பு. என்னை பொறுத்தவரை இவர்கள் மிக மோசமான குற்றவாளிகள்.
பசியிலும் பிணியிலும் வாடிக்கொண்டிருக்கும் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த உலகத்தில், கருத்தடை மாத்திரைக்கு எதிராக இருப்பது மன்னிக்கமுடியாத பாவம். கருத்தடை மாத்திரைகள் நவீன அறிவியல் மனித நலனுக்கு ஆற்றியுள்ள மிக முக்கியமான பங்களிப்பாகும் – அவைகளால் இந்த உலகத்தை சொர்கமாக்க இயலும். அனால் நிச்சயமாக அந்த சொர்க்கத்தில் அனாதைகள் இருக்கமாட்டார்கள், அதன் பின்னர் அன்னை தெரேசாவின் நிலைமையும் அவரது Missionaries of Charity இல்லத்தின் நிலைமையும் என்னவாகும்? அப்படிப்பட்ட சொர்க்க பூமியில் போப் சொல்வதை யார் கேட்பார்கள்? மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், இவர்களை பற்றி யார் கவலை படுவார்கள்? சாவிற்கு பிறகு அனுபவிக்க கூடிய சொர்க்கத்தை பற்றி யார் யோசிப்பார்கள்? இப்போது இங்கு சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கைக்கு பிறகு வரக்கூடிய சொர்க்கத்தை கண்டுபிடிக்கவோ, அதை பற்றி கனவுகாணவோ தேவையில்லை.
நான் வறுமையை அழிக்க விரும்புகிறேன். ஏழை மக்களுக்கு சேவை செய்ய நான் விரும்பவில்லை – போதும்! பத்தாயிரம் ஆண்டுகளாக முட்டாள்கள் ஏழை மக்களுக்கு சேவை செய்கிறார்கள், அது எதையும் மாற்றிவிடவில்லை. ஆனால் இப்போது முற்றிலும் வறுமையை அழிக்க போதுமான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.
முடிவுரை
எனவே, யாரவது மன்னிக்கப்படவேண்டுமாயின் அது இவர்கள் தான். போப், அன்னை தெரசா, etc., etc., இவர்கள் தான் மன்னிக்கப்பட வேண்டும். இவர்கள் குற்றவாளிகள் – அனால் நீங்கள் புத்திசாலியாக இருந்தால் மட்டுமே அவர்கள் செய்யும் குற்றங்களை புரிந்துகொள்ள முடியும்.
தெரேசாவின் “உன்னை விட புனிதம் மிக்க” ஆணவ அணுகுமுறையை கவனியுங்கள். “உன்னை மன்னிக்கிறேன்” , “உங்களுக்காக பரிதாபப்படுகிறேன்“, “அந்த கடவுளின் ஆசிகள் உங்களுடன் இருக்கட்டும், உங்கள் உள்ளத்தில் அவருடைய அன்பினால் நிரப்பட்டும்.” என்று கூறுகிறார். இதெல்லாம் வெறும் குப்பை! (BULLSHIT).
கடவுள் ஒரு மனிதன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, எனவே என்னையோ மற்றவரையோ ஆசீர்வதிக்க கூடிய மனிதக்கடவுள் என்று யாரும் இல்லை. கடவுள் ஒரு உணர்தல் மட்டுமே. கடவுள், சந்தித்து எதிர்கொள்ளும் ஒரு நபர் அல்ல. கடவுள் என்பது உங்களுடைய பரிசுத்தமான உணர்தல். நான் நாத்தீகனல்ல, நினைவில் கொள்ளுங்கள், அதே சமயம் ஆத்தீகனுமல்ல. எனக்கு கடவுள் ஒரு மனிதனல்ல, அனால் உணர்வு, அந்த உணர்வை தியானத்தின் உச்சத்தை எட்டும்போது உங்களால் உணரமுடியும். திடீரென தெய்வத்தன்மை எங்கும் பொங்கிவழிவதை உங்களால் உணரமுடியும். தெய்வம் இல்லை, ஆனால் தெய்வத்தன்மை இருக்கிறது.
“… உங்கள் இதயத்தை அவருடைய அன்பினால் நிரப்புங்கள்.”
என் இதயம் என் அன்பினால் நிறைந்துள்ளது! வேறு எவருடைய அன்பிற்கும் இடம் இல்லை. என் இதயதத்தை மற்றவரின் அன்பினால் ஏன் நிரப்ப வேண்டும்? கடன் வாங்கிய அன்பு அன்பு அல்ல. இதயத்திற்க்கு தனித்துவம் வாய்ந்த ஒரு நறுமணம் இருக்கிறது.
அனால் இவர்களது முட்டாள்தனமான சிந்தனைகள் ஆன்மீகம் என்று கருதப்படுகிறது. தெரேசா எப்படி மதத்தை பார்க்கிறாரோ அதே விதம் நானும் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் அவர் கடிதத்தை எழுதியுள்ளார் – ஆனால் நான் காண்பதெல்லாம் தரமற்ற, முட்டாள்தனமான நபர் – இதை சாதாரண மக்களிடையே எங்கும் காணலாம்.
நான் அவரை “அன்னை” தெரசா என்று அழைத்து கொண்டிருக்கிறேன், அவரை அவ்வாறு அழைப்பதை நான் நிறுத்தவேண்டும் என் நினைக்கிறேன் — அது ஒரு பெரியமனிதனுக்கான பண்புள்ளவனுக்கான அறிகுறி அல்ல, அதனால் நான் தக்க பதிலளிக்க வேண்டும். அவர் என்னை “அன்புள்ள திரு. ஓஷோ” என்று அழைக்கிறார், எனவே இப்போதிலிருந்து நான் அவரை “அன்புள்ள செல்வி. தெரசா” என்று அழைக்கப்போகிறேன் — பெரியமனிதனாக, பண்புள்ளவனாக காட்டிக்கொள்ள!
நன்றி: huffingtonpost.in
ஓசோவின் பார்வை நிராகரிக்க முடியாத காரணங்களை உள்ளடக்கியது. ஒரு விழிப்புணர்வை உங்கள் பக்கம் தொடர்ந்து தருகின்றது. வாழ்க! இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்.