
ஒரு நாடு வெறும் கண்துடைப்புக்காக ஒரு census எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா? உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை census – அதாவது தங்கள் நாட்டுப் பிரஜைகளை கணக்கெடுப்பது உண்டு. இதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பிறப்பு இறப்பு விகிதம், மத, இன, மொழி வேறுபாடுகள் போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி 19 ஆண்டுகளாக census எடுக்காதது மட்டுமின்றி வெறும் கண்துடைப்புக்காக 2017ஆம் ஆண்டு மிகுந்த சிரமங்களுக்கிடையே அதை நடத்தி முடித்தனர். நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான் அப்பேறு பெற்ற நாடு.
பாக்.கின் மக்கள் தொகை தோராயமாக 200 million என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகையில் ஆறாம் இடத்தில் உள்ளது பாக். இந்த தோராய மக்கள் தொகையில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் எவ்வளவு உள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. அதற்கும் தோராய கணக்குகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. இந்த சிறுபான்மையினரில் மிக முக்கியமான அஹ்மதியர்களும் அடக்கம். நபி முஹம்மதுவுக்கு பின் வேறொரு இறைத் தூதர் வருவார் என்ற இவர்களது நம்பிக்கையாலேயே இவர்கள் சட்டப்படி முஸ்லீம் அல்லாதோர் என அறிவிக்கப்பட்டனர். இவர்கள் மசூதி மற்றும் தொழுகையிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்களை முஸ்லீம் என்று கூறிக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் பொய் தகவல் கூறியதாக சட்டப்படி தண்டிக்கப்படுவர். இதனாலேயே அஹ்மதியர்கள் பலர் census குழுவினரை சந்திக்க பயந்தனர். ஆனால் census குழுவினரோ பல அஹ்மதியரை பெயரை மட்டும் கேட்டு அவர்களை முஸ்லிம்கள் என்றே குறிப்பிட்டு உள்ளனர். இதன் மூலம் அஹ்மதியர்கள் பலர் மனக்கலக்கத்தில் உள்ளனர். இதே போன்று இந்துக்களை பதிவு செய்யும்போது அவர்களுடைய சாதியையும் குறிப்பிடச் சொல்லுகின்றனர். ஆனால் அவர்களோ தங்களை இந்துக்கள் என்று குறிப்பிட்டாலே போதும் என்று விரும்புகின்றனர்.
அதைப்போன்றே பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவு வசிக்கக் கூடிய சீக்கியர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை இந்த census. இந்த censusல் உள்ள மற்றொரு சிக்கல் ஆப்கானிஸ்தான் அகதிகள். 1980களில் அதிகளவில் ஆப்கான் அகதிகள் பாக். கில் குவிந்தனர். தற்போது அவர்களின் பிள்ளைகளும் பாக். குடிமக்களாகிவிட்டனர். ஆனால் சில முக்கிய அரசியல் கட்சிகள் இவர்களை ஆப்கானிகளாகவே பாவிப்பதோடு அவர்களை அவர்களின் நாட்டுக்கே திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கோஷமிடுகின்றனர். இப்படிப்பட்ட ஆப்கான் மக்கள் குழுவை census குழுவினர் எப்படி கணக்கெடுத்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஹிந்துக்கள் எங்கே?
1947ல் பாகிஸ்தானில் ஹிந்துக்கள் ஜனத்தொகை 15%. ஆனால் 1998ல் ஹிந்துக்கள் வெறும் 1.6% தான். அந்த ஐம்பது வருடத்தில் 90% ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்தது.
இவற்றிக்கெல்லாம் காரணம் சட்டரீதியாலும், சமூக ரீதியாலும் ஹிந்துக்கள் வஞ்சிக்கப்படுவதும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும் தான் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த censusஐ மேலும் சிக்கலாக்குவது என்னென்ன?
பாக். விடுதலை பெற்றபின் அதிக மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணமே அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போக்கை எதிர்த்து சிறு மாகாணங்களான பலோசிஸ்தான், கைபர் பக்துங்க்வா, சிந்த் ஆகியவை குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மக்கள் தொகையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் பட்சத்தில் இந்த சிறு மாகாணங்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிடும். இது பாக். அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக முடியும். மக்கள்தொகை மாறுதலுக்கேற்ப சிறுபான்மையினருக்கு கூடுதல் அதிகாரங்கள், புதிய நகர/மாகாண கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரத்திற்கேற்ப மாகாண அதிகாரங்களை நெறிப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
இது மட்டுமின்றி 80 மொழிகள் பேசப்படுகின்ற நாட்டில் வெறும் 9 மொழிகள் மட்டுமே இந்த censusல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமே பாக். அரசின் நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இந்த census குழுவினருக்கு 20,000 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கொடுத்தும் பல வன்முறைச் சம்பவங்கள் அவர்களை குறி வைத்து நடந்தேறின. பாக். அரசின் இந்த கண்துடைப்பு நாடகம் 2017 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. தனது நாட்டில் censusஐ கூட சரியாக செயல்படுத்த முடியாத பாகிஸ்தான் அரசு அவ்வப்போது இந்தியாவுக்கு புத்திமதி சொல்வதும் எப்போதும் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டு இருப்பதும் வேடிக்கை நிகழ்வுகள்.
References:
1. https://tribune.com.pk/story/1637922/1-lack-representation-language-information-census-incomplete-flawed/
2. https://en.wikipedia.org/wiki/2017_Census_of_Pakistan
3. http://m.dw.com/en/population-census-exposes-pakistans-harsh-realities/a-37964565
4. http://pakistan.asia-news.com/en_GB/articles/cnmi_pf/features/2017/05/31/feature-02
5. https://www.geo.tv/latest/143765
6. https://www.trtworld.com/asia/pakistan-is-holding-its-first-census-in-19-years-amid-tight-security-317427
7. https://www.populationmatters.org/pakistans-flawed-population-census/