
அலகாபாத் இனி பிரயாகை..
அலகாபாத் இனி பிரயாகை என பழைய பெயரிலே மாற்றி அழைக்க முதல்வர் திரு.யோகி தலைமையிலான உ.பி.அரசினுடைய முடிவை இங்கிருக்கிற திராவிடவியாதிகள் விமர்சிக்கின்றனர்.
1) ஒழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மூலப் பெயர்களை மீண்டும் கொண்டு வந்து மக்களிடையே பெருமித உணர்வை ஊட்டுவது என்பது இங்கு மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் தொடர்ந்து நடந்துவருவதுதான்.
2) அல்லது தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தாங்கள் அபிமானம் வைத்துள்ளவர்களின் அல்லது தங்களுக்காக போராடியவர்களின் பெயர்களை இருக்கிற பெயர்களை எடுத்துவிட்டு புதுப்பெயரைச் சூட்டுவதும் தொடர்ந்து நடந்துவருவதுதான்.
3) தாய்-தந்தையர் வைத்த பெயர் என் மரபுக்கு எதிராக இருக்கிறது அல்லது எனக்குப் பிடிக்கவில்லை என்று தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்வதும் தொடர்ந்து நடந்துவருவதுதான்.
இவை எல்லாவற்றையும் திராவிட கட்சிகள் செய்திருக்கின்றன.
1) 1967க்கு முன் மெட்ராஸ் ஸ்டேட் என்றுதான் தமிழ்நாட்டிற்குப் பெயர். 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
மெட்ராஸ் என இருந்ததை சென்னை என்று 1996ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பாண்டிச்சேரி புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதுமட்டுமல்ல பல சாலைகளின், தெருக்களின் பெயர்களைக்கூட மாற்றியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று….
2) மௌவுண்ட் ரோடு அண்ணா சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
3) தட்சிணாமூர்த்தி பெயர் கருணாநிதியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இப்படி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அதனால் திராவிட வியாதிகள் இதில் தலையிடாமல் இருப்பதே நல்லது.
-மா வெங்கடேசன்