கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை. நடக்காத ஊழலை சொல்லி சின்னாபின்னமான காங்கிரஸ் கூட்டம்.

 

சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சிங்கம் ஒரு கழைகூத்தாடியை ஒரே அடியில் வீழ்த்தியது தான் செய்தி.
இன்று மற்றொரு பெண் சிறுத்தை ஒரு கரடி(விடும்)  கூட்டத்தை ஒற்றை உறுமலில் அடக்கியது சிறப்பு. மகிழ்ச்சி.

நேற்று வரை வாடா வாடா தில்லுருந்தா சண்டைக்கு வாடா என்ற ஒரு சிறு வெள்ளை கரடி, இன்று சிறுத்தையின் உறுமலில் பயந்து ஈயாடாத முகத்தில் கண்ணடித்து விளையாடியது.

தெரியாமல் செய்தால் தவறு, தெரிந்தே செய்தால் அது மன்னிக்கமுடியாத குற்றம் என்று என்றோ என்வீட்டு சுவற்றில் எழுதியதுக் கரடியை கண்டதும் மனக்கண்ணில் வந்தது. ஒரு முறை சொன்னால் அது பொய், பலமுறை சொன்னால் அதுவே உண்மையாகும் என்று ஒரு கீறல் விழுந்த ரெக்கார்டை தேய்த்து தேய்த்து போட்டு பார்த்தது வெள்ளை கரடி. இல்லாத ஒரு பொய்யை சொல்லி ஆலமர பஞ்சாயத்தையும் கூட்டியது. வழக்கு நடத்த சில பழந்தின்று கொட்டை போட்ட வெற்றிலை பெட்டி கரடிகள் இருக்கும் தைரியம்.

அந்தோ பரிதாபம், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க தான் இந்த பஞ்சாயத்தே என்று உணர்ந்த நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொன்னார். நாட்டை விட வேறு ஒன்றும் பெரிதில்லை என்று கரடியின் பேராசைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இதில் வருத்தபடவேண்டிய விஷயம் நாட்டின் தளபதிகளில் ஒருவரை பஞ்சாயத்துக்கு வரவைத்து கேள்வி கேட்டது. இருந்தாலும் அண்டைநாட்டுக்கு ஒற்று கொடுக்க நினைத்த கரடியின் மூக்கு உடைந்தது தான் மிச்சம்.

ஆனாலும் அடங்கவில்லை கரடியின் கத்தல். இம்முறை பஞ்சாயத்தே முறையில்லை என்று ஊளையிட்டது. அரசவையில் இதை பற்றி பேசி மீண்டும் வெறும் வாயில் அவல் தின்ன முற்பட்டது.

அந்தோ பரிதாபம். நேற்று வாய்க்குள் கொசு பறந்து முட்டையிட்டும் கரடியின் வாய் மூடவில்லை. அவ்வளோ பெரிய அடியை குடுத்தார் நிதிஅமைச்சர். கணக்கு பண்ண தெரிந்த அளவுக்கு கணக்கு வழக்கு தெறியுமா என்ற ஒற்றை கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் வீட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டது பொய்கரடி. பின்னரும் அடங்கவில்லை. பாதுகாப்பு அமைச்சர் ஒளிந்து கொண்டார், எங்கே வந்து பதில் சொல்ல சொல்லுங்கள், என் கேள்விக்கு என்ன பதில்? என்று சின்னதனமாக கூவியது.

இவன் எல்லாம் ஒரு ஆளு, கேள்வி கேக்க என்ன தகுதி இருக்கு என்று இதுவரை சும்மா இருந்த பாதுகாப்பு அமைச்சரான பெண் சிறுத்தை இன்று வீறுகொண்டு எழுந்து அடுக்குமொழியில் உறுமியது.

போதும் இந்த கரடியின் முன்னுரை, வேண்டும் சிறுத்தையின் பின்னுரை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  
ஒரு முறை தான் நான் பார்த்தேன், கேட்டேன். எனக்கே காதில் ரத்தம் வரும் அளவுக்கு இருந்த உறுமல், கரடியின் காதை செவிடாக்கி இருந்தாலும் ஆச்சரியமில்லை.
இதோ இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் @nsitharaman என்னும் பெண் சிறுத்தையின் ஒரு சிறு உறுமலின் தொகுப்பு.

காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் அண்டை நாடுகளின் விமானப்படையின் வளர்ச்சியும், இந்திய விமானப்படையின் வீழ்ச்சியும்.

இந்தியாக்கு உடனடியாக ஏன் போர் விமானம் தேவைப்பட்டது? இதையெல்லாம் யோசிக்க  நாட்டின் பாதுகாப்புக்காக முன்ஜாக்கிரதையுடன் முடிவெடுக்கும் தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தான் இந்த முடிவெடுத்தது.


சீனா இந்த காலகட்டத்தில் சுமார் 400 போர் விமானங்கள் அதிகரித்தது. இதில் 4G வகையில் (2Gயே தெரிஞ்ச நமக்கு இதுக்கு விளக்கம் வேணுமா என்ன) பைட்டர் வகை விமானங்கள் J10,J11,J16 மற்றும் SU27, 30 ஆகியன அடங்கும். இவையல்லாமல், 5G வகை போர்விமானங்கள் சேர்க்கப்பட்டன. அதே வேளையில் பாகிஸ்தான் தன்னிடமிறுந்த  F16 எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு போர் விமானங்களை சேர்த்தது. மற்றும் சீனாவில் இருந்தும் சில விமானங்களை வாங்கி குவித்தது.

நாம என்ன பண்ணினோம்? 2002ல் 42 ஸ்க்வாட்ரன்கள் (18 விமானங்கள் ஒரு ஸ்க்வாட்ரன்) இருந்த நம் விமானப்படை எண்ணிக்கை பின்னர் 36ஆகவும், 2014ல் 33 ஆகவும் குறைந்தது தான் நாம் செய்த சாதனை. (ஒரு வேளை பாகிஸ்தான் இல்லே சீனா போர் வந்தா மொத்தமா சரண்டர் ஆயிடலாம்ன்னு நினைச்சிருப்பங்களோ, கொள்ளுதாத்தா புத்தி கொஞ்சமாவது பேரனுக்கு வரமாலா போகும்?)

ஏன் இடைப்பட்ட காலத்தில் விமானம் வாங்கவில்லை. நீங்க எப்போதும் சொன்ன ஒரே வார்த்தை, நாங்க டீல் போட்டிருக்கோம், பணம் குடுத்திருக்கொம்ன்னு தான் சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா அந்த டீலும், பணமும் எங்கெண்ணே இது வரைக்கும் தெரியல. அட அந்த 126 விமானமாவது எங்கேன்னு தெறியுமா?
உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் டீல் தான். பாதுக்காப்புதுறைய காட்டி டீலிங் பேச தெரியும் உங்களுக்கு. ஆனா நாங்க நாட்டின் பாதுகாப்புக்கு வேண்டி டீல் ஏற்படுத்தினோம்.

523 கோடி டீல் பேசினதா சொன்னீங்களே, ஆனா 2014 பெப்ரவரி மாசம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி மீடியால பேசினது நியாபகம் இருக்கா? அது என்ன டீல்? அது என்ன பணம்? எங்கே இருக்கிறது பணம்ன்னு? வெளிப்படையா கேட்டார்.

இல்லாத ஒரு டீலும், குடுத்ததா சொன்ன பணமும் என்னாச்சு. 10 வருஷமா டீல் பேசி பேசியே நாட்டை கெடுத்து வெச்சீங்க. வாஜ்பாயி முன்னெடுத்த பாதுகாப்பு திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாம அப்படியே கிடப்பில போட்டு வெச்சீங்க. உங்களுக்கு டீல் பேச எப்பவும் கிறிஸ்டியன் மைக்கேல் வரணும். நாங்களும் கொண்டு வந்திருக்கோம், அவரை, கைது பண்ணி. இனி அந்தாள் வாய் திறந்தா நீங்க போட்டதா சொல்ற டீல் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

HAL மேல அவ்வளோ கரிசனம் காமிச்சி பேசரீங்களே, ஏன் ஹெலிகாப்டர் ஆர்டர் மட்டும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட்க்கு போச்சு. இங்கேயே தயாரிக்க முடியலையா? ஏன்னா HALக்கு ஆர்டர் குடுத்தா கமிஷன் வாங்க முடியாது. ஆனா அங்கே க்ரிஸிட்டியன் மைக்கேல் வாங்கி கொடுப்பார்.

126 ஹெலிகாப்டர் ஆர்டர் கொடுத்தோம்ன்னு சொல்றது பொய். உண்மையில் நீங்க பேசிய டீல் வெறும் 18 விமானங்களுக்கு தான். அதுவும் பல வருஷ இழுப்புக்கு அப்புறம் தான் வரும். பாக்கி? ஆப்செட் தயாரிப்புல தான் பண்ணனும். அதுக்கு HAL கேக்கற தொகையும் நேரமும் 2.5 மடங்கு அதிகமானது. முன்னே சொன்ன மாதிரி நம் அண்டைநாடுகள் அவ்வளோ வேகமா அதிகரிக்கும் போது பல ஆண்டுகளுக்கு பின்னர் கிடைப்பது எப்படி சரியாகும்.

ஆனா நாங்க போட்டது 36 விமானம் அதுவும் உடனடியா வாங்க போட்ட காண்ட்ராக்ட். 2019ல முதல் விமானம் வரும், கடைசி 36வது விமானம் 2022 வரும்ன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டு தூக்கற காண்ட்ராக்ட். எப்பவும் விமானப்படை குறைந்தபட்சம் இரண்டு ஸ்க்வாட்ரன் உடனடியா வேணும்ன்னு கேப்பாங்க. அப்படி தான் அவங்க கேட்டதும் கிடைக்க வழி பண்ணினது.

ஏன் ஆப்செட் தயாரிப்பு அனில் அம்பானிக்கு குடுத்தேன்னு சொல்ற உங்களுக்கு தான் AAன்னு வரும் போது எல்லாம் Q (கோத்ரோச்ச்சி) மற்றும் RV (ராபர்ட் வாட்ரா) நியாபகம் வரும். RV என்ன காங்கிரஸ் குடும்ப மருமகனா இல்லே நாட்டுக்கே மருமகனா? போபர்ஸ் பீரங்கி ஊழல் செஞ்சு ஆட்சியை இழந்தவங்க காங்கிரஸ்காரங்க, ஆனா மோடிக்கு இந்த ரபெலின் வெற்றி தான் மீண்டும் ஆட்சியை தரப்போகுது.

இனி ஒரு முறை என்னையும் பிரதமரையும் திருடன், பொய்யர்ன்னு சொல்றத நிறுத்திட்டு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் செல்லுங்க பார்ப்போம். உங்களால் முடியாது, ஏன்னா உன்களுக்கு வெறுமனே கேள்வி எழுதிவெச்சு கேக்க தான் முடியும்.
(அடைப்புகுறிக்குள் உள்ள கருத்துக்கள் ராணுவ அமைச்சர் சொன்ன கருத்துக்கள் அல்ல)

அப்படின்னு சிறுத்தை சீறின சீறலுக்கு கரடி கூட்டம் வாயடைத்து தான் போயிடுச்சு.

ஆனாலும் கரடி விடும் கரடி திரும்பவும் அதே “என் கேள்விக்கு என்ன பதில்” பழைய பல்லவியை பாட தொடங்கிடுச்சு. எப்படியும் மே மாசம் தேர்தல் வர்ற வரைக்கும் வேற ஒன்னும் பேச தெரியாது, இதையே போட்டு காலத்தை ஓட்டிடலாம்ன்னு நினைச்சிருக்கும்.

ஆனா அதுக்குள்ள கம்பி எண்ணாம இருந்தா சரி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கரடியாரே….

பாராளுமன்ற விவாதத்தின் முழு காணொளி…….

 

Author : முகுந்தன்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.