விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான்.

 

இதே கதை ரஃபேல் போர் விமான கொள்முதல் வரை அனைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்பந்தங்களிலும்  உண்டு. ரஃபால் (சரியான உச்சரிப்பாம்) விமானங்களை ஏன் வாங்க வேண்டும்?

 

இந்தியா பாகிஸ்தான் போரில்  நமக்கு உதவியது ரஷ்யாவின் மிக் விமானங்களும்  ஃப்ரான்ஸின் மிராஜ் விமானங்களும் தான் இதுவும் டஸோ  (Dassault aviation industry) நிறுவன தயாரிப்பே.

இன்னொரு முக்கியமான அம்சம் நமது விமானப்படையில் 42 ஸ்குவாட்ரன் விமானங்கள் (1ஸ்குவட்ரன் = 18 விமானங்கள்) இருக்க வேண்டும். ஆனால் 33 squadron தான் இப்போது இருக்கிறது. இந்த விஷயத்தை எப்படி சாதாரணமாக விட முடியும்?

 

எனவே இதை கருத்தில் கொண்டு நமது விமானப்படை 2002ம் ஆண்டை தவிர நாம் அந்த எண்ணிக்கையில் விமானங்களை கைவசம் வைத்திருக்காததால் போர் மூண்டால் வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்று புது விமானங்களை வாங்க அரசை கேட்டுக் கொண்டது

அதற்குள் ஆட்சி மாறி மன்மோகன் சிங்  நம் பிரதமராகியிருந்தார். எனவே வழக்கும் போல இந்த கோப்பு 10 வருட காலம் சும்மா இருந்தது இடைத்தரகர்களால். 

 

போனால் போகிறதென்று 2012 ஆண்டில் கம்மியான தொகைக்கு (ஒப்பீட்டளவில்) 128 போர் விமானங்களை தயாரித்து தர Dassault aviation industry முன்வந்ததால் அரசு டஸோவை தேர்ந்தெடுத்தது. அதில் 18 உடனடியாகவும் மீதி விமானங்களை Hindustan aeronautics limited மூலம் தயாரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் பேசப்பட்டது. ஆனால் ஐயகோ HAL ன் லட்சணத்தை தேஜாஸ் ஆகாய விமானங்களை தயாரிப்பதில் அவர்கள் செய்யும் தாமதத்தின் மூலம் அறிந்த Dassault aviation HAL வேண்டாம் என்றது

 

அப்போது அம்பானியின் (அப்போது முகேஷ் அம்பானி) நிறுவனம் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான தொகை 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (128 விமானங்களுக்கு).

 

ஆனால் மோடி அரசு 36 விமானங்களை வாங்கியது 12 பில்லியன் டாலர்களுக்கு. இங்கே எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வி புதிய ஒப்பந்தத்தில் ஏன் 41% விலையுயர்வு அதில் ஊழலா? அதற்கான பதில் 128 கத்தி வாங்குவதை விட 36 AK 47 வாங்குவதில் ஏன் காசு அதிகம் என்று கேட்பதை போல சிறுபிள்ளைத்தனமானது.

காங்கிரஸ் வாங்க நினைத்ததில் 128 ம் சும்மா showcaseகாக தான். அந்த ஒப்பந்தத்தில் விமானங்கள் மட்டுமே அடங்கும், சர்வீஸ், உதிரிபாகங்கள், பயிற்சி, ஹெல்மட்டில் இருக்கும் visual equipment என எதுவும் கிடையாது. இந்த ஒப்பந்தமே வீண்.அதனால் பெரிதாக பிரயோசனம் இருந்திருக்காது

 

எனவே மோடி பதவியேற்ற பின் இவற்றை சீரமைத்து இடைத்தரகர்களை ஒழிக்க நேரடியாக பிரான்ஸ் அரசிடமே ஒப்பந்தம் போட்டார். எங்களுக்கு 36 விமானங்கள் பறக்க தயார் நிலையில் அனைத்து உதிரிபாகங்கள், பயிற்சி,ப்ரம்மோஸ் பொறுத்த தேவையான மாற்றங்கள் என எல்லாம் சேர்த்து தாங்கள் வாங்கும் 12 பில்லியன் டாலர்களில் பாதியை இந்தியாவில் offset contract களுக்காக ஒதுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது

அதன்படி  டஸோ தேர்ந்தெடுக்கும் இந்திய நிறுவனங்கள் உடன் இணைந்து உதிரிபாகங்களை தயாரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் (HALன் நிலை அவர்களுக்கு தெரிந்து விட்டது. எனவே அம்பானியின் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன)

 

அதில் ராணுவ அனுபவமே இல்லாத அம்பானிக்கு என்றில்லை வேறு பல நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் உண்டு 

ஊழல் என்றால் என்ன?

 

முறைகேடான ஒப்பந்தம் மூலம் தனக்கு வேண்டியவர்களின் (தகுதியில்லாத) நிறுவனத்தை அரசு விடும் ஏலத்தில் பயன்பெற வைத்துவிட்டு அதன் மூலம் தான் அவர்களிடம் காசு வாங்கி ஆதாயம் அடைவது. இதில் ஏதாவது நிரூபிக்கப்பட்டால் ஊழல் நடந்தது என்று எண்ண முகாந்திரம் உள்ளது (.கா. 2ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்மேக்ஸிஸ், அகஸ்டா வெஸ்ட்லாண்ட்)

அதில் அம்பானி நிறுவனம் இதைப்பெற 30000 கோடி மோடிக்கு கொடுத்தது நிரூபணம் ஏன் அதற்தான அறிகுறிகளாக மோடி தன் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய வீடு கட்டி தன் பினாமி பெயரில் எக்கச்சக்க சொத்து குவித்து அதில் தீவு வாங்கினால் தான் அது ஊழல்.. இல்லையேல் இவ்வளவு நாள் எதிர்க்கட்சிகள் கிளப்பியது வெறும் குப்பையையே

 

By @mrSoapu

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.