
இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை விழாவாக அக்டோபர் 8ஆம் தியதி விமானங்களை பெற்றுக்கொள்வார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏர் மார்ஷல் R.K.S. Bhadauriaவின் பங்களிப்பை பறைசாற்றும் விதமாக முதல் விமானம் “RB-001” என்றழைக்கப்படும். இந்தியா கேட்டுள்ள 13 மாற்றங்களோடு முதல் தொகுப்பு விமானங்கள் இங்கு வர அடுத்த வருடம் ஏப்ரல் மாதமாகும். விமான படை பயன்பாட்டிற்க்கு வர அதிலிருந்து 6 மாதங்கள் ஆகும். ஒப்பந்த விதிகள் படி இந்தியா இதுவரை ₹34,000 கோடி கொடுத்துள்ளது.
இது ஒருபுறமிருக்க 10 பைலட்கள், 10 ப்ளைட் இஞ்சினியர்கள், 40 டெக்னீஷியன்கள் ப்ரான்சில் பல்வேறு கட்டங்களாக பயிற்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். மொத்தமுள்ள 36 விமானங்களும் ஏப்ரல் 2022 இந்தியா வந்தடையும். அவற்றை பாதுகாக்க ₹400கோடி செலவில் இங்கே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபட்டுள்ளது.
சமீப காலத்தில் குஜராத் முத்ரா துறைமுகம் வழியாக வந்த சினூக் ஹெலிகாப்டர் போல இந்த விமானங்களை கப்பலில் கொண்டுவரப் போவதில்லை. மாறாக அதை இயக்கியே இந்தியா கொண்டு வருவார்கள். ஒரே ஒரு விமானம் கொண்டு வருவது செலவு அதிகமாவதால், 6-8 விமானங்கள் ஒரு தொகுப்பாக பறந்து வரும். முதல் வேலையாக வழிதடம் நிர்ணயம் செய்யப்படும். இவ்விமானங்கள் இத்தாலி மற்றும் ஓமன் நாடுகள் வழியா குஜராத் ஜாம்நகருக்கு கொண்டுவரப்படலாம். சுங்க அனுமதி நடவடிக்கைகள் முடிந்தபின் அம்பாலாவிற்க்கு பறக்கும். விமானங்கள் வரும்போது C-17 போன்ற இரண்டு சரக்குவிமானங்கள் உதிரி பாகங்கள், மற்றும் பயிற்ச்சி விமானிகளை எடுத்துவரும். இவை பன்னாட்டு வான்வழி வரும் போது “இந்தியா 1 அல்லது 2″ சிமிக்கை உபயோகிக்கலாம். சாதராண விமானங்கள் உபயோகிக்கும் ரேடியோ ப்ரிக்வென்சியும், 33,000அடி உயரத்தில் பறக்கலாம். இந்த விமானங்கள் 1.8 மாக் வேகம்(2222கிமி) வரை பறக்கலாம் என்றாலும், இந்தியா வரும்போது 0.8மாக் (1000கிமி) வேகத்தில் தான் பறக்கும். இதனால் எரிபொருளும் மிச்சமாகும். இந்திய விமானபடையில் சேர்த்த பிறகு நடைமுறைக்கு ஏற்ப்ப அதன் வேகம் மற்றும் சிமிக்கை மாற்றப்படும்.
மொத்தமுள்ள 36 விமானங்களில் (2 squadron), ஒன்று பாக்கிஸ்தான் எல்லைக்கு அருகில் பஞ்சாபிலுள்ள அம்பாலாவிலும் மற்றொன்று சீன அச்சுறுத்தலை தடுக்க மேற்க்கு வங்காளம் ஹசிமராவில் விமானதாவளத்தில் அமையும்.
17th Squadron (Golden Arrows):
ரஃபேலின் ஒரு ஸ்க்வாட்ரண் நிறுத்தப்படும் ஒரு விமானத்தாவளம், பஞ்சாப் மாநில அம்பாலாவில் இப்போது உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200கிமி உள்ள தாவளம். 1951 முதல் இயங்கி வந்த இந்த ஸ்க்வாட்ரண் 2016இல் முழுவதுவாக நிறுத்தப்பட்டது. 1961 கோவா விடுதலை போரிலும், 1965 இந்தோ சீன போரிலும், 1971 பங்களாதேஷ் விடுதலை போரிலும் முக்கிய பங்காற்றியது.
1999 கார்கில் போரில் ஆற்றிய பணியில் பல விருதுகளை பெற்ற இந்த ஸ்க்வாடரண் ரஃபேலுக்காக இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது.
22 Squadron:
ரஃபேல் நிறுத்தப்படும் மற்றுமொரு ஸ்க்வடரண் வங்காள மாநிலம் ஹசிமராவில் உள்ளது. 1966 முதல் இயங்கிவரும் இது 1965 இந்தோ சீன போரிலும் 1971 பங்களாதேஷ் விடுதலை போரில் பங்கு பெற்ற பெருமை உள்ளது. இந்த தாவளம் திபெத், பூட்டான் மற்றும் சீன எல்லைக்கு மிக அருகாமையில் உள்ளது. சீன அச்சுறுத்தலை சமாளிக்க இங்கே ரஃபேல் நிறுத்தப்பட்டுள்ளது.
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் என்பது போல, சும்மாவா வந்தது ரஃபேல்.
By @isitso15
Awesome information… Feeling proud.