
#RafaleScam #Rafale
ரபேல் பிரச்சனையின் பின்னணியை ஆராய்ந்தால், மிக முக்கியமாக முன்னாள் பிரஞ்ச் தலைவர் பிராங்கோயிஸ் ஹோலாண்டின் பேட்டி ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதை ஒரு காரணமாக கூறலாம். உண்மையும் அதுவே!
உங்களிடத்தில் ஒரு கேள்வி, நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக நம் நாட்டின் இராணுவத்தை பற்றி புரிந்துகொள்ள உங்கள் வாழ்க்கையில் எத்தனை மணி நேரம் செலவழித்திருப்பீர்கள்? அதை பற்றி கிட்டத்தட்ட 99% பேர் சிந்தித்து இருக்கமாட்டிர்கள் என்று என்னால் உறுதிபட கூற முடியும். நீங்கள் அதற்காக Facebook மற்றும் twitterஐ நாடியிருப்பீர்கள் என்றும் தெரியும். இவையெல்லாம் பொதுவான கருத்தை வெளியிடும் தளங்கள் மட்டுமே. அதற்க்கு விடை கிடைக்கவும் நேரம் செலவிடவும் நீங்கள் தயார் என்றால் செல்லவேண்டிய தளம் https://defenceforumindia.com
தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பகுதி நேர பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமானபேர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கையின் வழியே தான் எதையும் பார்பர். இந்த பிரச்சனையின் உண்மை தன்மையை அறிய @iyervval @Aryanwarlord @KesariDhwaj போன்றோரின் ட்விட்டர் பக்கங்களை அலசுங்கள்.
சரி, நாம் விஷயத்திற்க்குள் வருவோம். காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் இந்த ரபேல் பற்றி அள்ளி வீசிய பொய்களை பற்றி பார்ப்போம்.
பொய் #1: பாரத பிரமர் மோடி தன்னுடைய 2015 ப்ரான்ஸ் நாட்டு சுற்றுப்பயணத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவருடன் அனில் அம்பானியையும், தொடங்கி சில நாட்களே ஆன அவருடைய கம்பனியை ரபேல் ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போதைய இராணுவ அமைச்சர் திரு.மனோகர் பரிக்கருக்கும் இது தெரியாது.
உண்மை: ப்ரான்ஸ் நாட்டில் மோடி எந்த ஒப்பந்திலும் கையெழுத்திடவில்லை. அது “expression of intent” க்கான புரிதல் கடிதம் மட்டுமே. ஆதாரத்திற்க்கு இந்திய அரசின் கூட்டு அறிக்கை #14 இங்கே பார்க்கவும்:
மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் அனில் அம்பானி மட்டுமல்ல, CEOக்கள் எனப்படும் கம்பனி தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர். பிரதமர்களின் வெளிநாட்டு பயணங்களின் போது சாதாரணமாக நடக்கும் ஒரு செயல் தானே இது?
https://www.indiawrites.org/diplomacy/french-ceos-upbeat-about-india-story-make-in-india/
இந்திய அரசு சார்பாக இந்த போர்விமானம் வாங்க 18 மாதங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையை முன்நடத்திய விமானப்படை அதிகாரி, தான் அந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்தேன் என்று விளக்கும் காணொளி இங்கே:
அதில் நீங்கள் கூர்ந்து கவனித்தால், இந்த ஒப்பந்தம் 23.09.2016 அன்று இராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கரும் ப்ரான்சின் அமைச்சர் ஆகிய இருவரும் தான் கையெழுத்திட்டனர் என்று தெளிவாக சொல்லியிருப்பார்.
பொய் #2: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட தொகையை விட இப்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது.
உண்மை: செலவாகும் மொத்த தொகையை வரப்போகும் விமான எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் ஒரு விமானத்திற்க்கு சுமார் 670கோடி விலை வருகிறது. இந்த தொகையில் பயிற்ச்சி, உள்கட்டமைப்பு போன்ற ஒரு முறை (முதல் முறை) செலவுகளும் அடங்கும். இதற்கான இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு இங்கே:
உங்கள் புரிதலுக்காக அதிகாரபூர்வமில்லாத தனித்தனி செலவினங்கள் இங்கே:
காங்கிரஸ் ஆட்சியில் விமானத்தின் விலை வருடந்தோறும் (2012-14) ஏறியதற்கான ஆதாரம் இங்கே:
பொய் #3: Offset எனும் இழப்பீடு தொகையாக அம்பினி 30,000கோடி பெறுவார்.
உண்மை: இந்த தொகையானது ஒப்பந்தத்தின் மொத்த இழப்பீடு தொகையாகும். அம்பானி அதில் 3% மட்டுமே பெறுவார். இந்த ஒப்பந்தத்தில் பல கம்பனிகள் கூட்டாக சேர்ந்துள்ளதால் மீதமுள்ள 97% தொகை அவர்களுக்கும் சேரும். அதில் சில கம்பனிகள் உங்கள் பார்வைக்காக:
இந்த offset கம்பனிகளின் இறுதி பட்டியல் செப்டம்பர் 2019ல் வெயிடப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.
இழப்பிட்டுத்தொகை பற்றிய விளக்கம் தருகிறார் @SandeepUnnithan
காங்கிரஸாரின் 126 போர் விமானங்கள் வாங்க 2லட்சம் கோடிகள் செலவாகும் என கணக்கிடப்பட்டது. முன்னாள் இராணுவ அமைச்சர் அந்தோணி இந்த விமானங்கள் வாங்க பணமில்லை என்பதை அறிவித்த காணொளி.
ஆக நாட்டின் பாதுகாப்பிற்க்கு பணமில்லை என்று சொன்னவர் தான் முன்னாள் இராணுவ அமைச்சர் அந்தோணி.
சரி, இந்த அம்பானி கம்பனி ரபேல் விமானத்தை தயாரிக்கவில்லை என்றால், அதன் பங்கு தான் என்ன? DRA எனப்படும் Dassault Reliance Aerospace நிறுவனமானது 51:49 பங்கில் ரிலையன்ஸ் மற்றும் டஸால்ட் நிறுவனத்தின் கூட்டுமுயற்ச்சியே. இது டஸால்ட் நிறுவனத்தின் பால்கன் வகை பிசினஸ் ஜெட் தயாரிக்க பயன்படும்.
மேலும் இந்திய விமானப்படை மேலும் ரபேல் விமானங்கள் வாங்கினால் முன்னர் கொடுத்த விலையை விட 40% குறைவாகவும் கிடைக்கும். ஏற்கனவே நமக்கு பயிற்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளதால் இந்த விலை குறைவு கிடைக்கும்:
Offset என்றால் என்ன? நாட்டில் விமானபாகங்களுக்கான கட்டமைப்பு சரியாக இல்லாததால், நம்மால் பல நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் வாங்க வேண்டியுள்ளது. அந்த கட்டமைப்புகள் உள்நாட்டில் ஏற்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் தான் இந்த offset.
HAL அப்போ என்ன செய்கிறது? அந்த நிறுவனம் விமானங்கள் செய்யவில்லை. மாறாக அதன் உதிரி பாகங்களை பிறநாடுகளில் இருந்து வாங்கி இங்கே ஒன்று சேர்கிறது. அவ்வளவே!
https://www.thehindu.com/news/national/hals-import-assemble-supply-model/article8194894.ece?homepage=true
ரபேல் சர்சையை எளிதாக விளக்க முயற்சித்துள்ளோம். இனியும் சந்தேகங்கள் இருப்பின் மேலே கொடுத்துள்ள DFI வலை தளத்தை பாருங்கள்.
Source : Twitter thread by @NorthernCavalry
Translated by : Shyam