
தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை பற்றி விளக்கம் அளிக்கும்படியும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் மட்டுமே ஊடகங்களில் வெளியானதே தவிர, அருண் ஜெட்லீ அவர்கள் அளித்த பதில்கள் வெளிவரவே இல்லை. ராகுலின் பொய்களை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதில்களை. ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றே தோன்றுகிறது.
அந்த பதில்களைப் பார்ப்போமா?!
குற்றச்சாட்டு 1:- 1.3 லட்சம் கோடி அணில் அம்பானி நிறுவனத்துக்கு
அருண் ஜெட்லீ பதில்:- 2005ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, offset Clause ஒன்றை கொண்டுவந்தது. ஒப்பந்த தொகையில் 30% முதல் 50% வரை இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர் குடுக்க வேண்டும். ஒப்பந்தத்தின் மொத்த தொகையே 58000 கோடி தான். அப்படி இருக்க 1.3 லட்சம் கோடி என்பது எப்படி சாத்தியம்?! இது முதல் பொய். டாஸோ நிறுவனமே, மொத்த ஒப்பந்த தொகையில் 3-4% வரை மட்டுமே, அதாவது 800 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட் தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, அதுவும் வரும் 10 ஆண்டுகளில் கொடுக்கப்படும் என்று சொல்லியது! அதனால் 1.3 லட்ச கோடி என்பது பொய்.
குற்றச்சாட்டு 2:- மோடி எந்த கமிட்டியையும் கேட்காமல் தானாக முடிவெடுத்தார்
அருண் ஜெட்லீ பதில்:- கேபினெட் கமிட்டி, ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் கமிட்டி, மற்றும் பல கமிட்டிகள் 74 முறை கூடி, விவாதித்து, அதன் பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டங்கள் நடந்த விபரமும் உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 3:- HAL நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கவில்லை.
அருண் ஜெட்லீ பதில்:- காங்கிரஸ் கூட்டணி அரசே HAL நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை மறுத்தது. அது மட்டுமில்லாமல், HAL நிறுவனம், 2.7 மடங்கு அதிக நேரம் கேட்டது. இந்த நேரத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் அதிக பலம் பெற்றுவிடாதா?
குற்றச்சாட்டு 4:- காங்கிரஸ் அரசை விட அதிக விலை.
அருண் ஜெட்லீ பதில்:- இந்த ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையில் நடக்கும் ஒப்பந்தம் என்பதால், இது குறைவான செலவில் முடியும். இடைத்தரகர்கள் இல்லை.
குற்றச்சாட்டு 5:- விலை விபரங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்படவில்லை.
அருண் ஜெட்லீ பதில்: உச்ச நீதிமன்றம் விலை விபரங்களை கேட்டது. அவர்களுக்கு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை பார்த்துவிட்டு தான் உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இது மட்டுமில்லாமல், காங்கிரஸ் அரசு, விமானங்களை வழங்க 11 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தனர். ஆனால் இப்போது, 2016-ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு, இரண்டே ஆண்டுகளில் விமானங்கள் எங்கே என்று கேட்கின்றனர். இப்போது கூட, 2019-ல் முதல் விமானம் இந்திய வரும் என்படாது குறிப்பித்ததக்கது!
இப்படி சொன்ன பதில்கள் எதுவும், எந்த முன்னணி மீடியாவிலோ , செய்தி தாள்களிலோ வரவில்லை. ஏன் என்று மக்களுக்கு புரியாதா என்ன!
Source opindia
ஊடகங்கள் ஏன் அரசுத் தரப்புச் செய்தியை மறைக்கின்றன என, ஆளும் பா.ஜ., அரசுக்குத் தெரியாதா? செய்தி ஒலி/ஒளி பரப்புத் துறையை வைத்துக்கொண்டு என்ன தான் செய்கிறார்களோ!