
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அக்டோபர் 6ம் தேதி 2017ல் பொறுப்பை ஏற்றார். பொறுப்பேற்ற ஆறு மாதங்களில், ஆளுநர் மாளிகையின் செலவுகளை 80% அதிரடியாக குறைத்தார். அதாவது அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான ராஜ்பவனின் செலவு 30 லட்சம் ரூபாய் மட்டுமே.

முன்னாள் (பொறுப்பு) தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் ஏப்ரல் 2017 முதல் செப்டம்பர் 2017 வரையிலான 6 மாதங்களில் ஆளுநர் மாளிகையின் செலவு 1.68 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்று அடுத்த 6 மாதங்களில் ராஜ்பவனின் செலவு 30.3 லட்சம் ரூபாய் மட்டுமே.
அதற்காக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று கூற முடியாது. தமிழக ஆளுநர் பொறுப்பு அவருக்கு கூடுதல் பொறுப்பாகத்தான் இருந்தது. மகாராஷ்டிர ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்ததால் சென்னை ராஜ்பவனில் குறைந்த நாட்களே அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி பன்வாரிலால் புரோஹித் கொண்டு வந்த மாற்றங்கள் என்னென்ன?
முன்னாள் ஆளுநர் (Apr 1 – Sep 30 2017) |
பன்வாரிலால் (Oct 1 – March 31 2018) |
|
---|---|---|
கேட்டரிங் | 41,70,000.00 | 9,20,000.00 |
போக்குவரத்து | 80,50,000.00 | 4,70,000.00 |
தோட்ட பராமரிப்பு | 11,90,000.00 | 2,83,000.00 |
வாகன எரிபொருள் | 1,90,000.00 | 1,80,000.00 |
மாளிகை பராமரிப்பு | 3,20,000 | 65,000.00 |
மின் கட்டணம் | 28,50,000 | 10,90,000.00 |
மொத்த செலவுகள் | Rs. 1,67,70,000.00 | Rs. 30,08,000.00 |
இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அவருடைய அதிகாரிகள் விமானத்தில் ECONOMY CLASS (வகுப்பில்) பயணம் செய்கிறார்கள். தமிழ் நாட்டில் பயணம் செய்தால் ரயிலில் தான் பயணம். ஆளுநர் மாளிகையில் மின்சார பயன்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது; தேவையற்ற அறைகளில் இருந்த குளிர்சாதன பெட்டிகள் எடுக்கப்பட்டது. LED விளக்குகள் ஆளுநர் மாளிகையில் எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டது.
பயணம் மேற்கொள்ளும்போது ஆளுநர் உடன் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கவர்னர் டெல்லிக்கு சென்றால் கவர்னர் மாளிகையில் இருந்து 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் டெல்லிக்கு அலுவலக ரீதியாக சென்றபோது எதற்கு வீண் செலவு என்று, ஒரே ஒரு அதிகாரியை மட்டும் பன்வாரிலால் புரோகித் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
தன்னை பார்க்க வரும் யாரும் பூங்கொத்துகள், சால்வைகள் தரக்கூடாது என்று அறிவித்தார். அதன் பின்னர் யாரிடமும் அவர் பூங்கொத்து, சால்வை பெறுவது இல்லை.
ஆளுநர் மாளிகை கான்டீனில் Rs. 10க்கு பரிமாறப்பட்ட டிபன் மற்றும் சாப்பாடு விலையை Rs.50/Rs.80 ஆக உயர்த்தினார். இதற்கு முன்னர் தனியார் கடைகளில் தான் மளிகை சாமான்கள் வாங்கப்பட்டது. பன்வாரிலால் பதவிக்கு வந்ததும் Amudham cooperative stores கடைகளில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய ஆணையிட்டார். ஊழலை அதிரடியாக ஒழித்தார்.
கடந்த வருடம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின் அவர் தேவையற்ற குளிர்சாதன பெட்டிகளை திரும்ப அனுப்பியது நம் நினைவில் இருக்கும். அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோதும் இவ்வாறான எளிய வாழ்க்கை தான் வாழ்தார்.
ஆனால் போன வாரம் கர்நாடாவில் ஒரு காங்கிரஸ் அமைச்சர் தனக்கு பெரிய சொகுசு கார் (SUV) வேண்டுமென்றும், அப்பொழுது தான் மக்கள் முன் தனக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் என்று கூறியதும் நினைவிருக்கும். இவ்வாறாகத்தான் இருக்கிறது அவர்களுடைய போக்கு.
இனிமேலாவது நம் ஊர் அரசியல்வாதிகள் பன்வாரிலால் மற்றும் யோகி ஆதித்யநாத் போன்ற எளிய மனிதர்களைப்பார்த்து திருந்துவார்களா?