
9/11. இது அமெரிக்க வரலாற்றுக்கு மட்டுமல்ல இந்திய சரித்திரத்திலும் ஓர் மிக முக்கிய நாள்.
ஆம், அவர்களுக்கு செப்டம்பர் 11, நமக்கு நவம்பர் 11.
நமக்கு சொந்தமான ஒன்றை, இந்த நிலத்தை அபகரித்த கயவர்களிடம் இருந்து அறப்போர் வழியில் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே நிலம், நம் இந்திய நிலம் மட்டுமே. அப்படிப்பட்ட நிலத்தில், அந்த பெரும்பான்மையான இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற வாசலை தட்டி போராடிய பெருமை நமக்கே உண்டு.
இதைவிட நம் இந்துக்களின், இந்திய மக்களின், மத சார்பின்மைக்கு வேறு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா?
நீதிமன்ற வாசலில் காலடி வைத்த முதல் நாட்களிலேயே அனைவருக்கும் தெரியும், இது இந்துக்களின் உரிமை என. அவர்களது நிலம் என. இருந்தும் பொறுமையாக வழக்காடப்பட்டது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி இவ்விடத்தில் இந்து கோயில் இருந்ததையும் அது இடிக்கப்பட்டு அதன் மேல் இன்று இருக்கும் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட நாம் இத்தனை ஆண்டுகளாக போராட வேண்டியுள்ளது என்று நினைக்கும் போது, இதுவும் அவனது லீலை என்றே தோன்றுகிறது.
ஆச்சர்யமாக இருக்கிறதா?
நம் நாட்டினுள் உள்ள பசுந்தோல் போத்திய புலிகளை நாம் எளிதாக அடையாளம் காண அவன் நமக்கு தந்த அருமையான ஒரு வாய்ப்பு. இந்துக்களின் ஒற்றுமை ஓங்க அவன் ஆடிய திருவிளையாடலாகவே இதை காண முடிகிறது.
2010ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தினால் இந்த இடத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அறிவித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது “அகில இந்திய இந்து மகாசபா”.
ஆனால், 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை விசாரிக்க 2017-18ம் ஆண்டு தான் துவங்கியது. பின், இதை தினம் விசாரித்து துரிதமாக தீர்ப்பு வழங்கும் படி கோரப்பட்டது.
இந்த வழக்கு சென்ற அக்டோபர் மாதம் வரை விசாரிக்கப்பட்டு அனைத்து தரப்பினரின் வாதம் பிரதிவாதம் கேட்கப்பட்டு இன்று தீர்ப்பளிப்பாதாக அறிவிக்கப்பட்டது.
இதோ ஒருவழியாக தீர்ப்பும் வந்து விட்டது, விரைவில் ராமனின் திருக்கோயிலும் வரவுள்ளது.
இருந்தும் சுதந்திர இந்தியாவில் இந்த வழக்கை அறுபது எழுபது ஆண்டுகளாக இழுத்தடித்த பெருமை நமது முந்தைய அரசாங்கத்தையே சாரும். போலி மத சார்பின்மை என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிய வண்ணமே இருந்தனர் அவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்துதலின் காரணமாக இந்த வழக்கை துரிதமாக விசாரித்து ஒரு சுமுக முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.
இந்த சந்தோசத்தை நாம் கொண்டாடும் இந்த வேளையில் பல நல்லுயிர்கள் மேலே இருந்து நம்மை கண்டு பெருமை கொண்டிருக்கும். நாமும் இதற்காக போராடிய பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் நினைவில் கொண்டு போற்ற வேண்டும்.
ராமருக்கு கோவில் வேண்டுமென நாம் போராடினால் மட்டும் போதுமா? தனக்கு ஒரு கோவில் வேண்டுமென அவர் நினைக்க வேண்டாமா?
அவன் அருளின்றி அணுவும் அசையாது என்பது எவ்வளவு உண்மை?
இந்த தீர்ப்பின் மூலமாக நமக்கு வேறு ஒன்றையும் இந்த நீதி மன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
ஜனநாயக அரசியல் அமைப்பு படி நிறுவப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள் எந்த மத வழிபாட்ட்டு முறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கு
எப்படி ஒரு நீதிமன்றம் ராமர் நம்பிக்கைக்கு குறுக்கீடாக இருக்க கூடாதோ அதே போன்றே அய்யன் சபரிகிரி நாதன் விஷயத்திலும் குறுக்கிட கூடாதென்று தெளிவுப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
எது எப்படியோ, இன்னும் சிறிது நாட்களே.
அச்சமின்றி எந்த வித தயக்கமுமின்றி அதிவிரைவிலேயே நமது ராமருக்கு ஒரு கோயில் எழுப்பப்படும், நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு அவனை வழிப்பட முடியும்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் வாயுப்புத்திரா!! வானர மித்திரா!!
இது இல்லையெனில் எது ராம ராஜ்ஜியம்?
ஜெய் ஸ்ரீராம்.