
ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பகுதி -1ல் நாம் இரண்டாம் உலகப்போர் வரை என்ன நடந்தது என்று பார்த்தோம். அடுத்தது நடந்தவற்றை பார்ப்பதற்கு முன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று பாப்போம்.
ஜப்பான், ’பிரிட்டிஷ் பர்மாவை’ தாக்குவதற்கு முன்னதாகவே, ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களது கோரிக்கையான முஸ்லீம் தேசிய பகுதி (Muslim National Area) அமைத்து தருகிறோம் என்று வாக்கு கொடுத்தனர். இதற்கு பின்னரே ரோஹிங்கியா முஸ்லிம்கள் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷாருக்கு ஆதரவு கொடுத்தனர்.
நினைவில் கொள்ளுங்கள், நம் நாடு போலவே பர்மாவிலும் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்காமல் தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயருக்கு பின்னால் சென்றனர் முஸ்லிம்கள். இந்த கதை எங்கோ இதுக்கு முன்ன கேட்ட மாதிரி தெரிகிறதா? நாட்டின் பெயர்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனா அவர்களின் ‘டிசைன்’ ஒன்று தான். அதுமட்டுமில்ல, இவர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவு தெரிவித்ததால் முஸ்லீம் மக்கள் மட்டும் இராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டது, அங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் பர்மா பௌத்தர்கள் சேர அனுமதி இல்லை. சாதாரணமாகவே இவர்கள் அராஜகம் தாங்க முடியாது, இதில் கையில் ஆயுதம் கொடுத்துவிட்டால்? இந்த காரணத்தால் தான் பர்மா பௌத்தர்கள் ஜப்பான் உதவியை நாட நேரிட்டது.
இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் வீழ்ந்தவுடன் பர்மா மீண்டும் பிரிட்டிஷார் கைவசம் வந்தது. அரசாங்க துறைகளிலும், முக்கிய ஆட்சி பொறுப்பிலும் ரோஹிங்கியா முஸ்லிம்களை அமர்த்தியது ப்ரிட்டிஷ் அரசு (தனி நாடு கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது). இதை பயன்படுத்தி, உலகப்போரில் தங்களுக்கும் ஆங்கிலேயருக்கும் எதிராக செயலபட்ட பர்மா பௌத்தர்களை குறிவைத்து தாக்க தொடங்கினார்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள்.
பர்மாவில் இருந்த ஹிந்துக்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் பெரும்பாலும் நட்புறவாகவே இருந்து வந்தனர். ஹிந்துக்கள் அவர்களது தனி நாடு கோரிக்கையையும் கூட ஆதரித்தனர். ஆனால் 1939 -1940ல் உலகப்போரின் போது பிரிட்டிஷாருடன் சேர்ந்து பௌத்தர்கள் மட்டுமல்லாமல் சிறிது கூட நன்றியின்றி ஹிந்துக்களையும் தாக்கி உள்ளனர் இவர்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு ஹிந்துக்கள் பௌத்தர்களுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கினர்.
1945 இல் உலகப்போர் முடிந்தவுடன் ராக்கெய்னில் முஸ்லீம் மக்கள்தொகை பெரும்பான்மையாக இருந்தது. அதுமட்டுமின்றி, மதக்கலவரத்தால் வெளியேறிய அங்கிருந்த அரக்கான் மக்களின் (மண்ணின் மைந்தர்கள்) நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்து கொண்டனர். இதெல்லாத்தையும் ஒரு சாதாரண பர்மா பௌத்த குடிமகன் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பிரச்சனை இதனால் இரு மதத்தவர் இடையே அதிகமானது.
1946-47 இல் பர்மாவில் தேசியவாத இயக்கத்தின் போராட்டங்கள் வலுவாக தொடங்கின. இதனுடன் சேர்ந்து பௌத்த மதம் மீண்டும் அவர்கள் மண்ணில் புத்துயிர் பெற்று ஓங்க, பௌத்த மத மறுமலர்ச்சி இயக்கங்கள் தீவிரமாக செயல்பட தொடங்கினர். பர்மா முழுமையாக விடுதலை ஆகிவிட்டால் தங்கள் இஸ்லாமிய அடையாளம் என்ன ஆகும் என்று “அஞ்சினர்” ரோஹிங்கியா முஸ்லிம்கள். ராக்கெய்னை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஜின்னாவை சந்தித்து பேச்சு நடத்தினர். நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.
(பர்மாவில் முஸ்லீம் லீக் கட்சி 1909 இல் தொடங்கப்பட்டது.1914 வரை மிகவும் குறைந்தபட்ச செயல்பாட்டில் இருந்தது. அதற்கு பிறகு 1918 இல் மீண்டும் முழுவீச்சுடன் செயல்பட தொடங்கியது. அதே ஆண்டில் கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு பர்மாவின் எதிர்காலத்தை விட, இந்திய முஸ்லீம் லீகின் எதிர்காலத்தை பற்றியே அக்கறை இருந்தது. இதில் பர்மா இவர்களின் பூமி, அந்த மண்ணின் மைந்தர்கள்னு சத்தம் வேறு.)

பர்மா விடுதலை அடைவதற்கு இரண்டு வருடம் முன்னதாகவே முஜாஹித் போராட்டங்கள் ஆரம்பித்து விட்டது. மார்ச் 1946ல் சிட்டகாங்கை (Chittagong) சேர்ந்த ஜஃபார் கவால் (Zaffar Kawal) என்ற நபரால் முஸ்லீம் விடுதலை இயக்கம் [Muslim Liberation Organization (MLO)] துவங்கப்பட்டது. 4 ஜனவரி, 1948 பர்மா விடுதலை அடைந்தவுடன் பிரிட்டிஷார் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு, தனி முஸ்லீம் தேசிய பகுதி தருவதாக செய்து குடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சில நாட்களிலேயே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம்கள் திருட்டு, தீவைப்பது, கற்பழிப்பு போன்றவற்றை ஊக்குவித்தனர்.
மே 1948 இல் மோங்க்டாவில் (Maungdaw) நடந்த பொதுக்கூட்டத்தில் முஸ்லீம் விடுதலை இயக்கம் ‘முஜாஹித் கட்சி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அருகில் இருந்த சிட்டகாங்க் (Chittagong) கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் போரின்போது கையகப்படுத்திய ஆயுதங்களை கொண்டு வந்து மசூதிக்கு கொடுத்தனர். ராக்கெய்ன் பகுதியை முஸ்லீம் பகுதியாக அறிவிக்க வேண்டும், உருது மொழி ஆரக்கான் பகுதியில் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், முஜாஹித் கட்சிக்கு அரசியல் கட்சி என அங்கீகாரம் வழங்க வேண்டும், முஜாஹித் கட்சி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கிடையே ரோஹிங்கியா முஸ்லீம் தரப்பில் ராக்கெய்னை சேர்ந்த மோங்க்டாவ் (Maungdaw) மற்றும் புதிடாங்க் (Buthidaung) பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுடன் (தற்போதைய வங்கதேசம்) சேர்க்க பர்மா அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பர்மா அரசாங்கம் நிராகரித்து விட்டது. ஏற்கனவே இருந்த பிரச்சனையை இது மேலும் அதிகரித்தது.
1950 இல் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் (முஜாஹிதீன்). இதனை பார்த்த பாகிஸ்தான் வழக்கம்போல் தங்கள் “முஸ்லீம் சகோதரர்களுக்கு” ஆயுதங்கள் அனுப்பி உதவி செய்தனர். பர்மா பிரதமர் ‘உ நூ’ (U Nu ) முஸ்லீம் தூதர் ‘உ பே கின்’ (U Pe Kin) என்பவரை அனுப்பி பாகிஸ்தானை பின்வாங்க செய்தார். நவம்பர் 1954 இல் பர்மா ராணுவம் செம்மையாக பதிலடி கொடுத்து முஜாஹிதீன் கிளர்ச்சியை முடக்கினர்.
1961 முஜாஹிதுகள் முழுமையாக சரண் அடைந்தனர். 1962 இல் ஜெனரல் ‘நீ வின்’ (General Ne Win) தலைமையில் ராணுவம் பர்மாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு பிறகு முஸ்லீம் அரசியல் கட்சிகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் முற்றிலும் முடக்கிவிட்டது.
இதையடுத்து பர்மா அரசாங்கம் பல குடியேற்ற விதிகளை மிக கடுமையாக்க ஆரம்பித்தது. 1982 இல் பர்மா குடியுரிமை சட்டத்தை இயற்றதன் விளைவாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மா குடியுரிமையை இழந்தனர். மேலும் அவர்களது நடமாட்டத்தை ராக்கெய்ன் பகுதியில் கடுமையாக கட்டுப்படுத்தியது பர்மா ராணுவ அரசு. அதற்கு பிறகு பல சலசலப்புகளால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராக்கெய்னை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர்.

அடுத்த பகுதியில் 1982 – பர்மா குடியுரிமை சட்டத்தை பற்றியும் இவர்கள் வங்கதேசத்து அகதிகள் முகாமில் செய்த/செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் பற்றியும் பாப்போம்.
இக்கட்டுரைக்குப் பயன்படுத்திய மூலங்கள்
- https://www.hrw.org/reports/2000/burma/burm005-01.htm
- https://rlp.hds.harvard.edu/faq/rohingya
- http://www.burmalibrary.org/docs21/FCO-1952-12-31-The_Mujahid_Revolt_in_Arakan-en-red.pdf
- https://www.soas.ac.uk/sbbr/editions/file64388.pdf
- http://statecrime.org/data/2015/10/ISCI-Rohingya-Report-PUBLISHED-VERSION.pdf
- http://www.netipr.org/policy/downloads/19720101-Muslims-Of-Burma-by-Moshe-Yegar.pdf
- https://www.thoughtco.com/who-are-the-rohingya-195006
- https://ash.harvard.edu/files/a_fatal_distraction_from_federalism_religious_conflict_in_rakhine_10-20-2014_rev_6-26-15.pdf
- https://web.archive.org/web/20150103190417/http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-east-asia/burma-myanmar/b143-myanmar-s-military-back-to-the-barracks.pdf