rohingya people

சமீபகாலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களைப் பற்றியும், அவர்கள் அகதிகளாக மியான்மரை விட்டு பல நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்வதை பற்றியும் நாம் செய்திகளை பார்த்து வருகிறோம்.

உங்களில் பலருக்கு, யார் இவர்கள்? இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன? இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும்.

இதன் பின்புலம் என்ன என்பது பற்றியும், 20ஆம் நூற்றாண்டில் நடந்தவை இப்பொழுது என்ன நடக்கிறது என்பது பற்றியும், இவர்களை உள்ளே விட்டால் நம் நிலமை என்ன ஆகும் என்பது பற்றியும் என்னால் முடிந்தவரை உங்களுக்கு விளக்குகிறேன்.

rohingya rakhine map

மியான்மரின் மேற்கு பகுதியின் கடலோரத்தில் இருக்கும் மாநிலம், ரகெய்ன் (பழைய பெயர்: அரகான்). இந்த மாநிலம் வடமேற்கில் வங்கதேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். ரோஹிங்க்யா என்ற சொல் இப்பகுதியில் வாழும் மக்களை குறிக்கிறது என்று சொல்லப் படுகிறது ஆனால் அங்குள்ள முஸ்லிம்கள் அப்பெயர் அவர்கள் இனத்தைக் குறிப்பதாகவும் அவர்கள் அந்த மண்ணில் பிறந்த இனம் என்றும் சொல்கின்றனர்.

இங்க தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. இதை பற்றி விளக்கமாக பார்ப்பதற்கு முன்பு, ரகெய்ன் மாநிலம் பற்றியும் அதன் வரலாற்று பின்புலம் பற்றியும் சிறிது பார்த்தால் இப்பிரச்சனையை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

1430களில் புத்த மதத்தை சேர்ந்த அரசர் ‘மின் சா மோன்’ (Min Saw Mon) மற்றொரு பெயர் நரமெய்க்லா (Narameikhla), ‘ம்ராக்-உ’ (Mrauk-U) என்ற சாம்ராஜ்யத்தை இப்போதிருக்கும் ரகெய்ன் மாநிலத்தை மைய்யமாகக் கொண்டு உருவாக்கினார் (வங்காள சுல்தான் உதவியோடு அமைத்ததாக சிலர் கூறுகின்றனர்).

இவர் அரசராக இருந்த காலகட்டதில் தான் முதன் முதலில் முஸ்லிம்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சாம்ராஜ்யத்தை சேர்ந்த மன்னர்கள் அருகில் இருந்த வங்காள தேசத்து முகலாய மன்னர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததாகவும், இஸ்லாமிய பட்டங்களை தங்கள் பெயரில் சேர்த்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டும்மின்றி இஸ்லாமிய சின்னங்கள் கொண்ட நாணயங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

rakhine coins
Courtesy: Wikipedia

15ஆம் நூற்றாண்டு முதல் அருகில் இருந்த இஸ்லாமிய நாட்டின் தாக்கத்தினாலும், மக்கள் போக்குவரத்தாலும் தான் இப்பகுதிக்கு இஸ்லாம் வந்திருக்கக்கூடும். அங்கு உள்ள முஸ்லிம்கள் அருகில் இருந்த வங்காளத்தில் இருந்து தான் வந்திருக்க முடியும் என்றும் ஓரளவு திட்டவட்டமாகக் கூறமுடியும். அப்படியானால், ரோஹிங்க்யா முஸ்லிம்கள் தங்களை ஒரு தனி இனம் என்று கூறிவது எப்புடி சாத்தியமாகும்?

ரகெய்ன் பகுதியில் வசிக்கின்ற மக்களைத்தான் ரோஹிங்க்யாக்கள் என்று கூறுவது பொருத்தமாகுமே தவிற, அது ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கே உரித்தான பட்டம் இல்லை.

சரி இப்ப பிரச்சனைக்கு வருவோம். தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சிட்டகாங்க் (Chittagong) நகரம் ‘ம்ராக்-உ’ மன்னர்கள் கட்டுப்பாட்டில் தான் 1600கள் வரை இருந்தது. பின்னர் முகலாயர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. 1430களில் இருந்து 1600கள் வரை முஸ்லிம் மக்கள்தொகை ரகெய்னில் கனிசமாக பெருகியிருக்கக்கூடும்.

1700களில் ‘ம்ராக்-உ’ சாம்ராஜ்யம், பலவீனமடய தொடங்கியது. 1785ல் தெற்கிலிருந்து கொன்பாஉங்க் (Konbaung Dynasty) என்ற பர்மா-பொளத்த சாம்ராஜ்யம் படையெடுத்து வந்து ம்ராக்-உ சாம்ராஜ்யத்தை வீழ்த்தியது. இதில் சுமார் 35000 முஸ்லிம் மக்கள் ரகெய்னை விடுத்து சிட்டகாங்குக்கும் (முகலாயர் ஆட்சி), ஆங்கிலேய கட்டுப்பாட்டில் இருந்த வங்காளத்திற்கும் தப்பி ஓடினர். இதான் பர்மா புத்தர்கள் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்குக் குடுத்த முதல் சவுக்கடி.

1824-26ல் நடந்த முதல் ஆங்க்லோ-பர்மீஸ் போருக்குப் பிறகு, அரகான் (அ) ரகெய்ன் மாநிலம் ஆங்கிலேயர் கைவசம் வந்தது. ரகெய்னில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்து. மேலும் ரகெய்ன் நெல் விளையும் செழிப்பான பகுதி என்பதால் விவசாயம்செய்ய ஆட்கள் தேவைப்பட்டது. எனவே ஆங்கிலேயர்கள் வங்கதேசத்தில் இருந்த மக்களை ரகெய்ன் சென்று குடியமைக்க ஊக்குவித்தனர். ஏற்கனவே தப்பிச்சென்ற முஸ்லிம் மக்களின் வம்சாவளியும், புதிதாகவும் மக்கள் ரகெய்ன் சென்று தங்கள் வாழ்வை அமைத்தனர்.

ஆக, இப்போதிருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்கள், ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்கு முன் வயலில் வேலை செய்யவும் பொருளதார மேம்பாட்டிற்கும் ரகெய்னிற்கு குடிபெயர்ந்தவர்கள் வழி வந்தவர்களே தவிற, பர்மாவின் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெள்ளத்தெளிவாக தெறிகிறது. திடீரென்று மக்கள் வெள்ளம், குறிப்பாக முஸ்லிம் மக்கள் வரத்தொடங்கியதைக் கண்ட ரகெய்ன் பொளத்தர்கள் கடுமையாகக் கண்டித்தனர். இதுவே ”இன” வெறியை தூண்ட முக்கிய காரணமானது. இந்த ரோஹிங்க்யா பிரச்சனையை நாம் இன்று வரை பார்க்கிறோம்.

இந்நிலையில், இரண்டாம் உலகப்போர் வெடிக்கிறது. பர்மா விடுதலை இராணுவம் போரில் ஜப்பானை ஆதரிக்கிறது. ஜப்பானின் அடியை தாங்க முடியமல், ஆங்கிலேயர்கள் பின்வாங்க தொடங்கினர். போறவன் சும்மா போக வேண்டியதுதானே? ரகெய்ன் முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை கொடுத்து நீங்க அடிங்கடானு சொல்லிவிட்டு, கழட்டிக்கொண்டனர் பேடி பிரிட்டிஷார். இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம்கள் தங்களது அரசு ஆதரிக்கும் ஜப்பானியர்களையும், ரகெய்ன் பொளத்தர்களையும் தாக்க ஆரம்பிக்கின்றனர்.

இரு சாராரிடமும் அப்பொழுது ஆயுதம் இருந்தது. ஜப்பானிய படை, தற்போது இருக்கும் ரகெய்ன் பகுதியை சூரையடுகிறது. அடி தாங்க முடியாமல், மீண்டும் முஸ்லிம்கள் சிட்டகாங்கிற்கு தப்பி ஓடுகின்றனர். ரகெய்ன் பௌத்தர்கள் அம்மாநிலத்தின் உட்பகுதிகளில் குடிபுகுந்தனர்.

உலகப்போருக்கு பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றியும், ரோஹிங்க்யா முஸ்லிம்கள் போருக்கு பிறகு செய்த அட்டகாசங்கள் பற்றியும் நாம் அடுத்த பகுதியில் காண்போம்.

இக்கட்டுரைக்குப் பயன்படுத்திய மூலங்கள்

  1. https://www.soas.ac.uk/sbbr/editions/file64388.pdf
  2. http://statecrime.org/data/2015/10/ISCI-Rohingya-Report-PUBLISHED-VERSION.pdf
  3. http://www.netipr.org/policy/downloads/19720101-Muslims-Of-Burma-by-Moshe-Yegar.pdf
  4. https://www.thoughtco.com/who-are-the-rohingya-195006
  5. https://ash.harvard.edu/files/a_fatal_distraction_from_federalism_religious_conflict_in_rakhine_10-20-2014_rev_6-26-15.pdf
  6. https://web.archive.org/web/20150103190417/http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-east-asia/burma-myanmar/b143-myanmar-s-military-back-to-the-barracks.pdf

One Reply to “ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 1 – ரகெய்ன் & ரோஹிங்க்யா பற்றிய பின்புலம்”

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.