சபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட்.

இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.

கடந்த 40 நாட்களாக கேரளாவில் நடப்பதை கண்டு நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்கள் குமுறிக்கொண்டுள்ளனர்.

ஆனால் யார் வீட்டுலயோ இழவுவிழுந்த கதையாக பெரும்பான்மை இந்துக்கள் நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி உள்ளது தான் வேதனை. இங்கே ஒவ்வொரு முறையும் இந்துக்களது உணர்வுகளுக்கு குந்தகம் விளையும் போதும், இப்படி தான் பெரும்பான்மை இந்துக்கள் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் தங்கள் கடமையை முடித்து கொள்கின்றனர்.

இதுவரை எல்லா பிரச்சனைகளும் கிளம்பியதும் ஒரீரு நாட்கள் பற்றி எரியும். என்னவோ நடக்க போகிறது, இந்துக்கள் எதிர்ப்பை கண்டு அச்சம் கொண்டு மூலகாரணம் பின்வாங்கப்படும் என்ற நினைப்பு எழும். பாவம் பத்தாம்பசலிகள். சில நாட்கள் கழிந்த பின் ….. அதுவே பழகிவிடும்.

கடைசியாக ஒற்றுமையாக வீதிக்கு வந்து இந்துக்கள் என்று போராடினார்கள் என்று ஒரு சிவில் சர்வீஸ் தேர்வில் தைரியமாக கேள்வி கேட்கலாம். கண்டிப்பாக பதில் அவ்வளோ சுலபமில்லை.

85 சதவிகித இந்துக்களுக்கு என்றும் பொறுமை அதிகம்.

  1. எல்லாம் அவன் பாத்துக்குவான் என்று ஆண்டவன் மேல் பாரத்தை போடும் ஒரு பிரிவினர்.
  2. ‌யாரவது கல்கி அவதாரம் கொண்டு நம்மை காப்பாற்ற வரமாட்டாரா என்று ஏங்கும் இன்னொரு பிரிவு.
  3. ‌நமக்கெதுக்கு இந்த வேலை என்று அமைதிபுறாவாகும் முன்றாம் பிரிவினர்.
  4. அப்படி எல்லாம் கிடையாது, நாம தான் தப்பு பண்றோம் என்று நம் கண்ணையே குத்தும் நான்காம் பிரிவு.
  5. இவையெல்லாம் கடந்தும், களத்திலோ, உணர்விலோ நம் உரிமைக்கு குரல் குடுக்கும் ஐந்தாம் பிரிவு.

கலியுகத்தில் கல்கி வருவது எல்லாம் அவ்வளவு சுலபமில்லை என்று உணர்ந்த முதல் இரு குழுக்கள் தன்னை தானே நொந்து கொண்டு தங்கள் இஷ்டதெய்வத்தின் மேலோ அல்லது தங்கள் அரசின் மேலோ பழிகூறுவர். இவர்கள் மனப்பான்மை என்றும் தங்களை அநீதியில் இருந்து காக்க யாராவது ஒரு ரட்சகன் வேண்டும். இல்லாத பட்சத்தில் தாங்கள் கைவிடபட்டதை போன்று உணர்கின்றனர். இவர்களுக்கு தங்கள் இயலாமையை தான் இப்படி வெளிக்கொணர முடிகின்றது. இவர்கள் மேல் குற்றமுமில்லை கோபமும் இல்லை. இவர்கள் உணர வேண்டியது தட்டினால் தான் திறக்கப்படும் என்ற உண்மையை. நீயும் நானும் சேர்ந்தது தான் இந்து. நாம் ஒரு கால் முன்னெடுக்காமல் நம் கூட்டம் மட்டும் முன்னே செல்லாது என்பதை உணரவேண்டும். மகாபாரதத்தில் பாஞ்சாலியை துகிலுரியும் போது கூட அவள் எழுப்பிய அபயக்குரல் தான் கண்ணனை அழைத்து அவளுக்கு துணைநின்றது.

என் கோபம் எல்லாம், நடுநிலையில் இருக்கும் மூன்று மற்றும் நான்காம் பிரிவினரை பற்றி தான்.

கம்மிகளின் பரமபதம் – பகடை உருட்டும் சகுனிகள்.

இதை நன்றாக புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட்கள் சரியாக பகடைகாயை உருட்டுகின்றனர். பாம்பையும் கம்யூனிஸ்ட்களையும் ஒன்றாக பார்த்தால் பாம்பை விட்டு விட சும்மாவா சொன்னார்கள். அவ்வளோ விஷம். கம்யூனிஸ்ட்கள் உருட்டும் பகடையில் சரியாக ஒவ்வொரு பாம்பிடமும் கடிவாங்கியும் அசராமல் அவர்களை நம்பும் கூட்டத்தை என்னவென்று சொல்வது.

கேரளா மந்திரி சுதாகரன் சொல்கிறார் – இது பிராமணர்கள் சதி. சபரிமலை தந்திரி ஒரு பிராமண அசுரன் என்று வர்ணிக்கிறார்.

Kerala minister calls Sabarimala tantri ‘Brahmin monster’ – Manorama Online

sabarimala brahmin monster comment kerala minister

இங்கே தெரியாமலயே ஒரு சாதிபின்னல் பின்னப்படுகிறது. நாயர்கள் இதை எதிர்க்கும் போது ஈழவா பிரிவினரை கொண்டு ஆதரித்து சொல்ல வைப்பது. மலைஜாதி பெண்களை முன்னெடுத்து செல்ல வைப்பது. ஒன்றுபட்ட இந்துக்களை சாதிவலை கொண்டு பிளவுபடுத்த திட்டமிட்டே காய்நகர்த்தும் கம்மிகள். ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை பாடப்புத்தகத்தில் மட்டுமே இந்துக்கள் படிக்கின்றனர் பாவம்.

sabarimala ezhava caste

என் மதம், என் கோவில், அங்கே உள்ளது என் கடவுள், அதில் பின்பற்றும் ஆச்சாரங்கள் என் உரிமை. அதில் என்ன பாஸ் உங்களுக்கு வேலை என்று கேட்டால், என்னை சங்கி என்றும், நான் பிராமணன் என்றும் முத்திரை குத்தி பிரச்சனையை டேக்டைவெர்ஷன் எடுக்க கம்மிகளால் மட்டுமே முடியம். நான் சங்கி ஆனது உங்களால் தான்டா என்று பெருமையாக சொல்ல தோன்றும் அதே நொடியில் எனக்கே தெரியாமல் என்பிறப்புக்கு ஒரு புதுசாதி அடையாளம் கொடுப்பது தான் வேதனை. சொல்றது தான் சொல்றீங்க கவுண்டன்னோ, பிள்ளைன்னோ சொல்லாம் தானே.

பாஸ் பண்ணும் கம்மிகள்.

இவர்கள் சொல்லும் சமத்துவம், நீதிமன்ற தீர்ப்பு எல்லாம் இந்துமதத்திற்க்கு மட்டும் தான் பொருந்துமா, சட்டத்தின் ஆட்சி இந்துக்களுக்கு மட்டுமா, ஏன் அவர்கள் மட்டும் தான் இந்த நாட்டின் குடிமக்களா என்று ரொம்பநாளாக மனதில் ஒரு கேள்வி.

sabarimala justice katju comment

 

பிரவம் சர்ச்சில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை, அங்கே மட்டும் ஏன் சமரசம் பேச அரசு செலவில் ஒரு குழுவை அனுப்பகிறீர்கள் என்று எதிர் கேள்வி கேட்டால், கேரள முதல்வர் இந்து, அதனால் தான் அவருக்கு இந்துக்கள் பிரிச்சனையில் தலையிட உரிமையுள்ளது. கிறிஸ்தவர்கள் பிரச்சனை பொதுவானது, அதை அப்படிதான் தீர்க்கணும்ன்னு வெண்ணெயை நாக்கில் தடவிகொண்டே பேசுகிறார்கள்.

சரிதான் நமக்கு தான் அறிவில்லை போல, கடவுள் இல்லைன்னு சொல்ற, இந்து மதத்தை பின்பற்றாத கம்மிக்கு எங்கே மதம் வந்துச்சு, அப்படியே ஆனாலும் மதத்தின் பெயரால் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன்னு உறுதிமொழி எடுத்த முதல்வர் அது தன் மதமே ஆனாலும் எப்படி ஒரு மதத்திற்கு எதிரா முடிவெடுக்கிறார். இதை கேட்டால் சங்கீகளுக்கு பதில் இல்லையாம்.

இதை போல் தான் சபரிமலை தீர்ப்பை உதாரணம் காட்டி நிஸா என்ற பெண்கள் அமைப்பு மசூதியில் கூட்டுத்தொழுகைக்கு உரிமைக்கு போராடறங்க, அவங்களுக்கும் ஆதரவு குடுப்பீங்களான்னு கேட்டா, அது முஸ்லீம் பிரச்சனைன்னு ஓரமா போய் ஒதுங்குகிறார்கள் கம்மிகள். சரி அவ்வளோ எல்லாம் வேண்டாம், சபரிமலைக்கு போற பெண்களை அப்படியே கீழே வாவர் சமாதியிலும் கும்பிட்டு விட்டு போக சொல்லுங்கள் என்று ஒரு தொலைக்காட்சி நேரலையில் கேட்டது தான் மாயம், அந்த கம்மி பதறிய பதறல் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது. இல்லாத பிரச்சனை எல்லாம் கெளப்பாதீங்கன்னு ஒரே ஓட்டம். ஐயோ பாவம் கம்மிகள். கொண்டையை மறைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

சில அப்ரண்டீஸ் கம்மிகள் இதனிடையே அய்யப்பன் உக்கார்ந்து இருக்கிறத பார்த்தா புத்தர் மாதிரி இருக்கு, அதனால புத்தரே அய்யப்பன் என்று புது பிரிச்சனையை கிளப்பி சில்லறைதனங்களை வாரி இறைக்கிறார்கள். அடேய், சத்தமா சொல்லாத, இது புத்தர் பூமி என்று சிங்கள பிட்சுக்கள் படையெடுத்துவிடுவர் என்று நேரில் பார்த்தால் சொல்ல வேண்டும்.

ஒரு விஷயம் உறுதி, கம்மிகள் பிறந்ததில் இருந்தே கம்மிகளாக சுவாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள், ஆனால் உலகில் இந்துக்களுக்கு மட்டும் தான் இவர்கள் ஆடும் பாம்பும் ஏணியும் பிரிவினை விளையாட்டு புரிவதில்லை.

கேரளாவில் சபரிமலைக்காக போராடும் ஒரே கட்சி பிஜேபி தான், நிஜத்தில் அங்கே எலி போன்ற அமைப்பு. ஆனால் அது தான் கம்யூனிச பாம்பை எதிர்த்து நிற்கிறது. பிஜேபி தொண்டர்கள் தான் அடியும் மிதியும் வாங்கி ஜெயிலில் வதைபடுகிறார்கள்..

ஆனால் ஒருபுறம் பிஜேபி தான் அரசியல் லாபத்திற்காக இதை தூண்டிவிடுகிறது என்று பொறுப்பற்ற குற்றச்சாட்டு. மறுபுறம் பிஜேபி ஒன்றும் பெரிதாக இந்துக்களுக்கு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு.

இந்துக்கள் தனிச்சையாக வீதிக்கு வந்தால், பிஜேபி எதற்கு தூண்டி விட வேண்டும் முட்டாள் இந்துக்களே. நேற்று தமிழ்நாட்டில் ஆண்டாளுக்கு நேர்ந்தது இன்று கேரளாவில் அய்யப்பனுக்கு. இங்கே எச்.ராஜாவை திட்டிய அளவுக்கு வைரமுத்துக்கு கண்டனம் தெரிவிக்க காணோம். அதே போல் அங்கே பினராயியை செல்லம் கொஞ்சும் இந்துக்கள் தான் பிஜேபியை குறை சொல்லுகின்றனர்.

வனிதாமதில் என்று ஒரு மாற்றுமத பெண்களை கொண்டு இந்துக்கள் பிரச்சனையில் தலையிட செய்த கம்யூனிஸ்ட் விஜயனை கண்டிக்கத்தவர்கள், வேண்டும் என்றே இரு கம்யூனிச, நக்ஸல் தொடர்புடைய பெண்களை கொண்டு சீண்டிவிட்ட விஜயனை கண்டிக்க வக்கில்லாதவர்கள் தான், ஹர்த்தால் அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பிஜேபியை குறை சொல்லுகிறார்கள். எய்தவனுக்கு சாமரம் வீசி அம்பினை குற்றம் சொல்பவர்களே, நல்லா இருக்கு உங்கள் நியாயம். RSSம் பிஜேபியும் எதோ தீண்டதகாதவர்கள் போன்று காட்டி, ஒரு அப்பாவியின் தலையில் செங்கல் வீசி கொன்ற CPMன் வன்முறையை கண்டுகொள்ளாமல் இருப்பது அடுக்குமா?

burka-clad women

என்றும் ஒரு கடவுள் அவதரித்து உங்களை காக்க வரமாட்டார். உங்கள் பகைவர்களை அடையாளம் கண்டு, உங்களுக்கு வேண்டி முன்னால் நிற்பவர்களை கேலி, குற்றம் சொல்லாமல் இருங்கள். கடவுள் என்றும் நம்மை சுற்றி உள்ளவர்களை ஒரு நிமித்தமாக பயன்படுத்தி தான் நமக்கு உதவுவார்.

கம்யூனிசம் பேசும் போலி மனிதிகளுக்கு இங்கே வேலையில்லை, கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட, பக்தியுடைய மனுஷிகளுக்கு தான் இங்கே இடம் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். அப்படி ஒரு பக்தைக்கு வேண்டி ஆச்சாரங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டுமானால் அதற்க்கு சாத்தியம் இருந்தால் நம்மத பெரியோர்களை கொண்டு தீர்வு காண்போம். இதற்க்கு முன்பும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்றுகொண்ட மதம், இந்த அர்த்தமுள்ள நம் இந்து மதம்.

இது இந்துக்கள் கோவில், இது இந்துக்கள் பிரிச்சனை. பெண்கள் போகவேண்டுமா இல்லயா என்பதை நாமே கூடி முடிவெடுப்போம். பிஜேபி உற்பட்ட அரசியல்வாதிகள் யாரும் துணைக்கு வேண்டாம். அதே போல தான் கம்யூனிஸ்ட்களும். அதிகாரம் இருந்தாலும் யாரும் இதில் தலையிட அனுமதிக்க வேண்டாம். மற்ற மதத்தவர் இதே போல் தான் தங்கள் மதத்தை பாதுக்கக்கின்றனர். உலகுக்கு சகிப்புதன்மையை சொல்லி குடுத்த நம் இந்து மதம், மதபாதுகாப்பை மற்றவர்களிடம் இருந்து கற்றுகொள்வோம்.

மாற்று மதத்தினர் கொள்கை அது பிரவம் சர்ச் ஆனாலும் மசூதி ஆனாலும் நமக்கு கவலையில்லை. ஆனால் இது எங்களுக்கும் ஆன நாடு. எங்களை நாங்களாக வாழவிடுங்கள்.

இந்துக்களே, உங்கள் நடுநிலைத்தன்மையை கண்டு வேதனைப்படுகிறேன். ஆனால் வெறுக்க முடியவில்லை. இனிமேலாவது குற்றம் காணின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து இந்து என்ற உணர்வால் ஒன்றுபடுவோம்.

இப்படிக்கு வேதனையுடன்

ஒரு இந்து.

சாமியே சரணம் ஐயப்பா!

Article by :  முகுந்தன் 

2 Replies to “தோழர் ஐயப்பன்”

  1. the greatest drawback of hindus is very few knew to what extent the dharma has ascended and resulted in merging with the highest consciousness.sat-chit-ananda.at god level the energy alone remains but we give them form to undersatnd the godliness.two such greater energies had merged to form dharma sastha.again dont relate body with energy.thesiddas are in energy bodies.ultimately all of us are going to merge with that greatest consciosness.the drawback is crores of minds with various levels of evolution so at what level are they only that can be understood by them.if they are seekers they will take each stage as steps.unfortunately what swami vivekananda proudly declared to west that a truth seeker in my hinduism will stand on one leg and do penance to achieve it was routed by brirish.their evolution of mind is low.we are highly divided at mind ;levels and not caste ones.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.