
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வர்ப் பெறின்”
புலால் என்பது வேறொரு உடலின் சொந்தமான புண், அதை உண்ணக்கூடாது என்று நான் அல்ல, நமது திருவள்ளுவர் கூறியுள்ளார்.
சத்தமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த மிருகங்கள் இன்று சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கிறது.
யார் என்ன உண்ண வேண்டும் என்பது, தனிமனித சுதந்திரம். அதில் தவறில்லை.
அது போன்றே மாட்டிறைச்சி உண்பது தனிப்பட்ட உணவு சுதந்திரம்.
ஆனால், அதனால் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களையும் நீர் பற்றாக்குறைகளையும் இல்லையென்று கூறிவிட முடியுமா? அதனால் உண்டாகும் தீமைகளை தான் இல்லை என்று விட்டுவிட முடியுமா?
நாளை நம் அடுத்த தலைமுறைக்கு குடிக்க நீர் இல்லாதபோது உண்ண மாட்டிறைச்சி இருந்தால் என்ன, காய்கறிகள் இருந்தால் தான் என்ன?
அட, தண்ணீர் பிரச்சனைக்கும் மாட்டிறைச்சி உண்பதற்கும் என்ன சம்பந்தம். என்னது, அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள சம்மந்தம் போல் இருக்கிறதா?
அப்படியென்றால், அதை பற்றி அறிந்து கொள்ள மேலும் படிங்கள்.
எந்த ஒரு உணவை உற்பத்தி செய்வதற்கும் நீர் அடிப்படை என்பது உண்மைதானே? அதை ஒத்துக்கொள்கிறீர்களா? நல்லது!
நாம் கூறினால் தான் நம்ப மறுப்பர். வெள்ளைக்காரன் சொன்னால் நம்புவீர்கள் அல்லவா?
How much water is needed to produce food and how much do we waste? | News | theguardian.com
Foodstuff | Quantity | Water consumption, litres |
---|---|---|
Chocolate | 1 kg | 17196 |
Beef | 1 kg | 15415 |
Sheep Meat | 1 kg | 10412 |
Pork | 1 kg | 5988 |
Butter | 1 kg | 5553 |
Chicken meat | 1 kg | 4325 |
Cheese | 1 kg | 3178 |
Olives | 1 kg | 3025 |
Rice | 1 kg | 2497 |
Cotton | 1 @ 250g | 2495 |
Pasta (dry) | 1 kg | 1849 |
Bread | 1 kg | 1608 |
Pizza | 1 unit | 1239 |
Apple | 1 kg | 822 |
Banana | 1 kg | 790 |
Potatoes | 1 kg | 287 |
Milk | 1 x 250ml glass | 255 |
Cabbage | 1 kg | 237 |
Tomato | 1 kg | 214 |
Egg | 1 | 196 |
Wine | 1 x 250ml glass | 109 |
Beer | 1 x 250ml glass | 74 |
Tea | 1 x 250 ml cup | 27 |
ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய நமக்கு 2,500 லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோ வாழைப்பழம் உற்பத்தி செய்ய நமக்கு தேவையான தனியரின் அளவோ 790 லிட்டர். இன்னும் கூற போனால், நமது பாரம்பரியமான சிறு-குறுதானியங்களுக்கு இதை விட சிறிய அளவு நீர் இருந்தாலே போதும்.
அதன் பொருட்டே நமது விவசாயி நம்மாழ்வார் அவர்களும் இது போன்ற சாகுபடிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்தி ஆக வேண்டிய தண்ணீரின் அளவு என்னவென்று தெரியுமா? 15,415 லிட்டர் தண்ணீர். அதாவது ஒவ்வொரு கிலோ மாட்டிறைச்சிக்கு உற்பத்தி செய்ய தீர்க்கும் நீரை கொண்டு 6 கிலோ நெற்கதிர்களை விளைவிக்க முடியும்.
இறைச்சி தான் உண்ண வேண்டுமாயின் குறைவாக நீரை உபயோகிக்கும் கோழியையோ அல்லது பன்றியையோ உண்ணலாமே. அப்படி செய்வதால் பாதிக்கும் மேலான மீதமாகும் நீரை கொண்டு அதிக நெற்கதிர்களை வளர செய்யலாம்.
அது சரி. ஆசைக்கு உண்ணுபவரிடம் கூறி புரியவைக்கலாம். ஆனால், வீம்புக்கு உண்பவர் பற்றி என்ன சொல்வது?
பசிக்கு மாட்டிறைச்சி உண்ணும் எண்ணம் கொண்டவர்களிடம் கூட கருணை எதிர்ப்பார்க்கலாம். ஆனால், வீம்புக்கும் மற்றவர்களை நோகடிக்கவென்றே உண்ணும் மக்களின் எண்ணங்களை கண்டு வருந்த தான் முடியும்.
இன்று இந்தியா முழுவதும் இந்த கருத்து வேறுபாடு தலை தூக்கியுள்ளது. பசுவதைக்கும் மாட்டிறைச்சிக்கு பல வேறுபாடுகள் உண்டு. இரண்டையும் குழப்பி அரசியல் செய்வதாலேயே இன்று இந்த நிலைமை என்பது எனது கருத்து.
மாட்டிறைச்சிக்கு இந்திய அரசாங்கமே அங்கீகாரம் செய்து பல வழிமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால் அரசியல் நோக்கங்களுடனும், சுயலாபம் என்னும் அரக்கனின் பிடியிலும் சிக்கி கொண்டும் பலர் பசுக்களை திருடி பலரது வாழ்வாதாரத்தையே அழிக்கிறார்கள்.
அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிற்க வைக்க பொது மக்கள் களமிறங்கினால் மதத்தின் பெயரால் அநியாயம் நிகழ்கிறது. சட்டமும் மத கலவரம் வருமோ என அஞ்சி திறன்பட செயல் படுவதில்லை. ஊடகங்களோ, கேட்கவே வேண்டாம். அதை பற்றி பேசாமலிருந்தாலே சாலை நன்று.
காண கண் கூசும் வகையில் பசுக்களையும் அதன் கண்ணுகுட்டிகளையும் கோணிப்பைகளில் கடத்தி கொண்டு சென்ற கொள்ளையர்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதை தானே நாம் தவறென்று கூறுகிறோம்?
எனினும், என்றும் போல் இன்றும் நாம் நம் கண்மூடியே இருப்போம்.
ஆம் கோகுலத்தின் இன்னுயிர்களை காக்க கண்மூடி அந்த கோபாலனையே சரணடைவோம்.
அந்த ஆண்டவனையே சரணடைந்து அவனையே இதற்கும் ஒரு நல்வழி பிறக்க வழிவகை செய்ய பிராத்திப்போம்.
வேறு என்ன செய்ய முடியும், பொறுத்தார் பூமியாள்வார்.
பொறுத்திருப்போம் அல்லவா?