அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானபடுகொலைஎன்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்:

கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் ஷாருக் என அடையாளம் காணப்பட்டார். இந்த கலவரம் தொடங்கிய ஆரம்பத்தில் புல்லட் காயங்களால் இறந்த (படுகொலை செய்யப்பட்ட) சிலரில் தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் என்பவரும் ஒருவர். தடயவியல் தகவல்களின்படி, இளம் புலனாய்வுப் பணியாளர் அதிகாரி (IB Officer) அங்கித் சர்மா 400 முறை கொடூரமாக குத்தப்பட்டார். அவரது குடல் பாகங்கள் சின்னா பின்னமாக சிதைக்கப்பட்டது. அவரது உடல் ஒரு AAP கட்சியை சார்ந்த நகராட்சி கார்ப்பரேட்டர் தாஹிர் உசேன் வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. தாஹிர் உசேன் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெரிய கும்பல் கூடி, கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. படுகொலை செய்யப்பட்ட அங்கித் இந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை மதிப்பிடுவதற்கும் அவர்களைத் தடுப்பதற்கும் நிராயுதபாணியாகிவிட்டார். அவர், காட்டுமிராண்டித்தனமான கும்பலுக்கு பலியானார். மேலும் ஒரு தடயவியல் குழு தாஹிர் உசேன் வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள், அமிலம், கற்கள் மற்றும் செங்கற்களை பறிமுதல் செய்துள்ளது. இப்போது இந்த இருவரும், ஷாருக் மற்றும் தாஹிர் ஹுசைன், மறைமுகமாக உள்ளனர்.

ஒரு 51 வயது முதியவர் மற்றும் அவரது மகன் அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது  ஜெய் ஸ்ரீ ராம்ஸ்டிக்கர் ஒட்டிஉள்ளர்த்தற்காக கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டனர். குடியுரிமை மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலால் ஆகாஷ் நாபா என்ற ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டார். விவேக் என்ற சிறுவன், கலவரக்காரர்களுக்கு தனது அடையாள அட்டையைக் காட்டியபோது, ஒரு ட்ரில்லிங் இயந்திரத்தால் அவன் தலையில் துளையிட்டு உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் உள்ளார். பல இந்து வீடுகள் மற்றும் கடைகள் கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் பெட்ரோல் பம்புகளையும் விட்டுவைக்கவில்லை. வீடுகளின் மேலிருந்து துணை ராணுவப் படைகள் மீது அமிலமும் வீசப்பட்டது.

ஆரம்பகட்ட அறிக்கையின்படி, இரு சமூகங்களிடமும் சம எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான ஒருபடுகொலைஎன்று சித்தரிக்க முயற்சிப்பது முற்றிலும் தவறானது. இதன் மூலம் ஹிந்துக்களை  மோசமானவர்களாக சித்தரித்து காட்டும் அவர்கள் நோக்கங்கள் புலப்படுகிறது. உண்மை என்னவென்றால், உலகெங்கிலும் உள்ள இடதுசாரி சார்பு சக்திகள் பிரதமர் மோடியையும், ஆளும் பிஜேபியும் கறைபடுத்தும் விதமாக ஒரு முஸ்லீம்விரோதி என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை. அவர்களின் சமீபத்திய மனக்குழப்பம் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டமாகும். இது அவர்களின் கற்பனை கதைக்கு ஏற்றவாறு திரிக்கப்பட்டிருந்தது. மூன்று அண்டை இஸ்லாமிய நாடுகளில் (ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்) இருந்து அங்கே மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான குடியுரிமை செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டம்:

 

() இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை அந்தஸ்தை இழந்து வருவதாகவும்

() இந்த இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்கள் அவர்களுக்கு வழங்கத் தவறியதாகவும் உருவகைப்படுத்தப்படுகிறது.

 

இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் உட்பட எந்தவொரு புலம்பெயர்ந்தோருக்கும் (immigrants) இந்தியா அதன் கதவுகள் ஒருபோதும் மூடப்படவில்லை என்று மத்தியஅரசு பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. இறையாண்மை கொண்ட எந்தவொரு நாட்டிற்கும் குடியுரிமையைப் பெறுவதற்கான சாதாரண செயல்முறை மூலம் அவர்கள் இந்தியாவிற்குள்ளே வரலாம். அவ்வளவே.

மேற்கத்திய ஊடகங்களின் ஆதரவு, பிரதமர் மோடியை எதிர்ப்பதற்கான ஒற்றை குறிக்கோளை கொண்டிருக்கும் இந்திய இடது புத்திஜீவிகள், தவறான தகவல்ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில பிரிவுகளின் முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் தீவிரவாத பிரிவு அவர்களுடன் கைகோர்த்துள்ளது. இந்தச் செயலில் அவர்கள் பொய்களைக் கூறி, முஸ்லிம்களிடையே ஒரு பயம் கலந்த அச்சத்தை உருவாக்க முடிந்தது. அனால் உண்மைகள் இவர்கள் கதைக்கு எதிராக உள்ளது. மோடி அரசின் முயற்சியால் CAA பற்றிய அவர்களின் அரை குறை அறிவு தெளிவுபட்டபோது, அவர்கள் NRC உடன் CAA இணைத்து முஸ்லிம்கள் மீது பேரழிவு வருகிறது என்ற ஒரு புதிய கதையை ஏற்படுத்த முயன்றனர். இவை இந்திய முஸ்லிம்களின் உரிமைகைளை பறிப்பதாகவும் அதனால் முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் பிழைப்புக்காகவும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் வந்து போராட வருமாறு வற்புறுத்த முடிந்தது. உண்மை என்னவெனில், NRCக்கான வரைவு இன்னும் வெளிவரவில்லை.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மணி சங்கர் அய்யர் போன்ற ஹிந்துவிரோத தலைவர்களின் பல அழற்சி உரைகள் சமூகவலைத்தளங்களில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றி வருகின்றன. சந்தர்ப்பவாத முஸ்லீம் தலைவர்கள் அமானத்துல்லா கான், வாரிஸ் பதான் போன்றவர்கள் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டதாகவும், விரைவில் 15 கோடி முஸ்லிம்கள் 100 கோடி இந்துக்களை அடிமைப்படுத்துவார்கள் என்றும் சர்ச்சை கிளப்பினார். பத்ர், உஹத் மற்றும் கர்பாலா போன்ற போர்களில் பலதெய்வவாதிகள் கொல்லப்பட்ட அல்லது மதமாற்றப்பட்டனர் என்பதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். முன்னாள் அலிகர்க் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான பைசுல் ஹசன் போன்ற செல்வாக்கு மிக்க முஸ்லீம் தலைவர்கள், முஸ்லிம்கள் விரும்பினால் லட்சங்களைக் கொன்று எந்த நாட்டையும் அழிக்க முடியும் என்று வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்தார். போராட்டங்களில் ஈடுபடும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் முகாம்களில் வைக்கப்படுவார்கள், உணவு மற்றும் உடைகள் இழக்கப்படுவார்கள் என்று பொய்யான விஷத்தை விதைத்து பிஞ்சு மனதையும் நஞ்சாகியுள்ளார்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை அசிங்கமாக துவேஷம் செய்வதற்கும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. “காபிர்களிடம் இருந்து ஆசாதிபோன்ற தேசவிரோத கோஷங்கள் எந்நேரமும் முழக்கமிடப்பட்டது! இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து அசாமை துண்டிக்கும் திட்டங்களை ஷாஹீன் பாக் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஷர்ஜீல் இமான் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் படைப்பாளரான ஜின்னாவைப் பற்றி அவருக்குப் நல்ல மதிப்பிருந்தது. சுதந்திர வேளையில் முடிக்கப்படாத வேலையை முடிக்க முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கியிருப்பதாக அவர் நம்பினார். இவ்வாறான எண்ணங்களும் சிந்தனைகளும் முஸ்லிம்கள் மனதில் நஞ்சை விதைத்து டெல்லி கலவரத்திற்கு வழிவகுத்து. இதனால் முஸ்லிம்களின் தங்கள் (ஏற்கனவே அனுபவிக்கும்) உரிமைகளுக்காகவும் (கற்பனையான எதிர்கால) அடக்குமுறைக்காகவும் போராடுவதாக நம்பினர்.

ஊடக நிறுவனங்கள் வன்முறையை தூண்டும் இந்த தேசவிரோத உரைகளை கண்டிக்கவில்லை. இவற்றை, பேச்சு சுதந்திரம் என்று தங்கள் இடதுசாரி எஜமானர்களுக்கு ஆதரவாக அமைதியாக இருந்தனர். மறுபுறம், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா சாலை தடைகளால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைகிறது. அதனால் அதை சீர்குலைத்து வரும் போராட்டக்காரர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறையை வலியுறுத்திய பேச்சை, அவர் கலவரம் தூண்டுவதாக சித்தரித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் பரவலாக விளம்பரப்படுத்தி கலவரத்தைத் தூண்டியது.

உண்மையில், ட்ரம்பின் டெல்லி வருகை குடியுரிமை பிரச்சினை போராட்டங்களை கலவரங்களாகவும், அப்போது அதை சர்வதேசமயமாக்குவதற்கும், அமெரிக்க காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மற்றும் பிற இடங்களில் விவாத பொருளாகவும் மாற்ற ஒரு சரியான வாய்ப்பை போராட்டக்காரர்களுக்கு வழங்கியது. மேற்கத்திய ஊடகங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், தேவையான ஒளியியலை அது உருவாக்க தவறிவிட்டது. குடியுரிமைச் சட்டத்தை இந்தியாவின் உள் விஷயமாக ஜனாதிபதி டிரம்ப் கருதினார். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே டஜன் கணக்கான உயிர்கள் பறிபோனது மற்றும் பல சொத்துக்கள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் அழிக்கப்பட்டதால் இந்த கலவரத்தை CAA எதிர்ப்பு கலவரமாக காட்டாமல், இதுஇந்துத்துவாதாக்கமாக காட்டப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இவை அனைத்தும் ஒரு தீவிரவாத மற்றும் போர்க்குணமிக்க இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.) இன் முழு ஆதரவால் நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலே சொன்ன தாஹிர் ஹுசைனுக்கு ஆதரவாக பி.எஃப்.ஐ இப்போது களமிறங்கியுள்ளனர். மேலும், .எஸ்..எஸ் சார்பு குழு ஒன்று சமீபத்தில் இந்தியாசார் வெளியீட்டை வெளியிட்டது. இதுவாய்ஸ் ஆஃப் ஹிந்த்என்ற தலைப்பில் முஸ்லிம்களின் கொந்தளிப்பான உணர்ச்சிகள் / மனநிலையைத் தட்டியெழுப்பியது.

சமீபத்தில் லண்டனில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை அந்நாட்டின் பாதுகாப்பு கருதி சுட்டு கொன்று அமைதியை நிலை நாட்டினார். இந்திய மற்றும் உலக ஊடகங்கள் இந்த நடவடிக்கையை சமமாக பாராட்டின. இதே ஊடகங்கள் இந்தியாவில், காவல்துறையினர் ஒரு லத்தி அல்லது குச்சியைக் கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யும்போது அதுவும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில், இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பயங்கரவாதத்தையும் அது தொடர்பான அமைப்புகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். குடிவரவு சட்டங்கள் புள்ளிகள் அடிப்படையிலான அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன, இதனால் சரியான நபர்கள் இங்கிலாந்திற்குள் வந்து ஒரு சுமையாக இருப்பதை விட பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். ஊடகங்கள் இங்கிலாந்தின் இந்த முயற்சிகளை பாராட்டுகின்றன. ஆனால் நிலத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு குடியுரிமை அளவுகோல்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா முடிவு செய்தால், அதே ஊடகங்கள் அதை அலசி ஆராய்ந்து மோசமாக விமர்சிக்கின்றன. சட்டவிரோத பொருளாதார மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை இந்தியா வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது, அதன் அண்டை நாடுகளுடன் திறந்த எல்லைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இடதுசாரிகளிடம் உள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் இடது புத்திஜீவிகளின் போலியான முகங்கள் இதன்மூலம் அம்பலமாகிறது

   

One Reply to “டெல்லி கலவரம்: ஹிந்துக்கள் பலியாடுகளா?”

  1. Well analysed, but the lost of Hindu life in the violence by jihadis and they died many because of security forces which tried to control arson and killing of innocent hindus

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.