கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பெரும்பாலோனோர் கரைதிரும்பியுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 19 விசைபடகுகள் உள்ளிட்ட 80 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளதாக கூறினார்.
மேலும் கரை திரும்பாத மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் 2 டார்னியர் விமானங்கள், மற்றும் 2 கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.