இந்தா ஆரம்பிசிட்டாங்கல்ல….

கிரகண காலங்களில் உணவருந்துவது நல்லதல்ல என்பது மூட நம்பிக்கை என்று கேலி செய்து விருந்து உண்ணும் வினோத போராட்டம். [சோறு முக்கியம் அமைச்சரே!!!]

விஷம் குடித்து இறந்தவர்களும் உண்டு, பிழைத்தவர்களும் உண்டு. அதற்காக விஷம் குடித்தால் பிழைக்கலாம்னு அதை குடிப்பது எவ்வளவு மூடத்தனமானதோ அதே போன்று தான் இந்த வினோத போராட்டமும்.

சரி, இது அறிவியலா அல்லது மூட நம்பிக்கையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஏனெனில், நம்மில் பலரும் இது போன்ற தினங்களில் சில முறை உணவு உண்ண நேர்ந்துள்ளது.
 அதனால் இப்பதிவு இந்த திடீர் போராட்ட கோமாளிகளை பற்றியது அல்ல அறிஞர்களை பற்றியது.

இந்தநாள், இந்த கிழமை, இந்த நாழிகை என்று துல்லியமாக கணக்கிட்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த நமது முன்னோர்கள் பற்றியது தான் இந்த பதிவு. இது ஏதோ ஒரு சாதாரண கணிப்பு தானே என்று தள்ளி விட முடியாது. இதில் தான் நமது புலமைக்கு இன்று வரை புலப்படாத கணிதமும், அறிவியலும் ஒளிந்துள்ளது.

இன்றுள்ள நவீன தொழில்நுட்பம் கொண்டும், நாளை மழை வரும் என்று ஆணித்தரமாக கூற முடியா நிலையில் தான் நாம் உள்ளோம். ஆனாலும் நம் முன்னோர்களால் அன்றே எவ்வாறு இவ்வளவு துல்லியமாக கூற முடிந்தது?

ஆம் அது தான் விந்தையிலும் விந்தை.

நமது சக்தியால் இதை ஆராய்ந்து அதில் உள்ள அறிவியலை அறிய தான் உபயோகப்படுத்த வேண்டுமே தவிர, இதை எவ்வாறு தவறு என்று திரிக்க அல்ல. இவ்வுலகில் பல வெளிநாட்டு பண்டிகைகள் அட்டவணை போன்று ஒரு குறிப்பிட்ட தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதியன்று உலகமெங்கும் இயேசுநாதர் பிறந்த தினமாக கிருஸ்துமஸ் என்ற பெயரால் கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துவர்கள், இதற்கு எந்த ஒரு வரலாற்று உண்மையும் இல்லை என்று அறிந்தும்,  அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தேதியில் இதை கொண்டாடி வருகிறார்கள். அதில் தவறுமில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு இருந்து கொண்டு, இந்துக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களையும் சேர்த்து கொச்சைப்படுத்துவது தான் வேதனை.

ஏனென்று கேட்பவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கு தான்.

நமது இந்து பண்டிகைகளை எடுத்து கொள்ளுங்கள். அனைத்து பண்டிகைகளும் நிலவின் அடிப்படையில் ஓர் குறிப்பிட்ட கால நேரங்களில் கணிக்கப்பட்டதாகவே இருக்கும். நமது ராசி, நட்சத்திரமும் நிலவின் சுற்றுபாதை பொறுத்தே அமையும்.

எப்படி என்று அறிவீர்களா?

அமாவாசை முதல் பௌர்ணமி வரை உள்ள நாட்களுக்கு பெயரிட்டு (திதி) அதை கொண்டே அனைத்து சுப காரியங்களும், பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றது. அமாவாசை – பிரதமை – துவிதியை – த்ரிதியை – சதுர்த்தி – பஞ்சமி – சஷ்டி – சப்த்தமி – அஷ்டமி – நவம்மி – தசமி – ஏகாதசி – துவாதசி – த்ரயோதசி – சதுர்த்தசி – பௌர்ணமி.
 இது ஏதோ சமஸ்கிரத வார்த்தை என்று எள்ளி நகையாடும் இவர்களை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு கிருஷ்ணனின் பிறந்த தினம் அஷ்டமி என்று புராணங்களில் உள்ளது. எனவே தான், அமாவாசை அடுத்த எட்டாம் தினமான அஷ்டமி நாளில் ஜென்மஷ்டமி என்று கொண்டாடப்படுகின்றது.

அதே போன்று ஹனுமந்த் ஜெயந்தி என்பது  மார்கழி திங்களில் வரும் அமாவாசை தினத்தன்றே கொண்டாடப்படுகின்றது. அது மட்டுமல்ல, அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்த காரணம் கொண்டு அந்த நாழிகை துவங்கும் தருணத்தில் அதை கொண்டாடுகின்றனர்.

இப்படி சரியான நாட்களில் மட்டும் அல்ல, துல்லியமான நேரங்களிலும் நம்மால் இன்றும் நமது இறைவனின் பிறந்த நாட்களை சரிவர கணித்து கொண்டாட முடியும். அதற்கு முழுமுதற்காரணம், நமது முன்னோர்கள் அன்று நமக்கு தந்து சென்ற இந்த பஞ்சாங்கமே என்றால் அது மிகையாகாது. நிலைமை இப்படி இருக்க, இந்த அறிவுஜிவீகள் இப்படி குதித்து கொண்டிருப்பதை காணும் போது வேடிக்கைமட்டுமல்ல, விநோதமாகவும் உள்ளது.

இளைஞர்களே, புரிந்து கொள்ளுங்கள். எதையும் ஆராயாமல் நமக்கு புரியவில்லை என்ற ஒரே காரணத்தினால், அந்த விசயம் மூட நம்பிக்கையாக முடியாது.தெரியவில்லை என்றால், பெறியவர்களிடம் கேளுங்கள். நல்ல சிந்தனையுள்ள புத்தகங்களை படியுங்கள், தெளிவு பெறுங்கள்.

நன்றி.

 

மகேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.