சர்தார் படேலின் உலகிலேயே மிகப் பெரிய சிலையை மோடி அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்த பிறகு ஊடகங்களில் அதை நிறுவ செலவுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பல கதைகளை அவர்கள் இஷ்டத்துக்குப் பரவ விட்டனர். பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் இச்சிலையை நிறுவ கொடுத்ததாக ஒரு வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. அதையும் தவிர பிரிட்டன் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவியை மோடி அரசு இச்சிலையை நிறுவ தவறாகப் பயன்படுத்தியதாக இன்னொரு செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்தன. சிலர் எண்ணெய் நிறுவனங்கள் இச்சிலைக்கான பெரும் பகுதி செலவினை ஏற்றுக் கொண்டன, எண்ணெய் விலையை குறைக்க இந்திய மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது இது போன்ற செயல் அவசியமா என்கிற கூப்பாடுகளும் எழுந்தன. இன்னும் சில ஊடகங்கள் சைனாவிடம் இருந்து 3500 கோடி ரூபாய் கடன் பெற்று இச்சிலை செய்யப்பட்டதாக தகவலை கசியவிட்டது.

இந்தியா டுடே உண்மை அறியும் குழு

உண்மை நிலையை தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்ளவுமே இப்பதிவு. ‘இந்தியா டுடே’யின் உண்மை அறியும் குழு இந்த துப்பறியும் வேலையை மேற்கொண்டது. அவர்கள் ஆய்வு செய்ததில் சிலை செய்வதற்கான பெரும் பங்கை குஜராத் மாநில அரசு கொடுத்துள்ளது என்பதும் அதற்கு அடுத்தப் பெரும் பங்களிப்பாளர் மத்திய அரசாகும் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் எவ்வளவு பணம் இச்சிலைக்காக கொடுத்தன என்று தெரிந்து கொள்ள அவர்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளையும், பட்ஜெட் பட்டியல்களையும் இந்தியா டுடே உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது.

சர்தார் படேல் சிலை நிறுவ அரசின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு
சர்தார் படேல் சிலை செய்யப்படும் திட்டம் அக்டோபர் 7 2010 மோடி அம்மாநில முதல்வராக இருந்த போது அறிவிக்கப் பட்டது. ஆனால் 2013ஆம் வருடம் வரை அவ்விஷயத்தில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பின் இச்சிலையை நிறுவவதற்காகவே சர்தார் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்னும் அமைப்பு உண்டாக்கப்பட்டது. 2014ல் மோடி பிரதமரான பிறகு இத்திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மத்திய அரசு இந்த திட்டத்துக்காக 2014-2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாயை குஜராத் அரசுக்கு ஒதுக்கியது. அதன் பின் குஜராத் மாநில அரசு இச்சிலைக்காக மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க ஆரம்பித்தது.

சர்தார் படேல் சிலை நிறுவ அரசின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு.

Year Budgetary Provision
2018-19 899 Crores
2016-17 1066* Crores
2015-16 915 Crores
2013-14 100 Crores

*இந்த நிதி ஒதுக்கீட்டில் பழங்குடி மக்கள் ஆராய்ச்சி பயிற்சி மையம் அமைக்கவும் ஏற்பாடு உள்ளது.

இதற்கிடையில் பொதுத் துறை நிறுவனங்களும் இச்சிலை நிறுவ பணம் கொடுக்க ஆரம்பித்தன. இதை Comptroller & Auditor General (CAG)இவ்வாறு நிறுவனங்கள் செய்வது சரியானதா என்று கேள்வி எழுப்பினர். 2018ஆம் ஆண்டின் நிதி அறிக்கையை ஆய்வு செய்த CAG, பொதுத் துறை நிறுவனங்களான ONGC, IOCL, BPCL, HPCL & OIL மொத்தமாக 146.83 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. அதனால் இது ஆய்வு செய்யப்பட்டு வெளிவந்த அறிக்கைத் தகவல்.

CAG அறிக்கைப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் பங்களிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Public Sector Undertaking Amount given under CSR
Oil and Natural Gas Corporation Limited 50 Crores
Indian Oil Corporation Limited 21.83 Crores
Bharat Petroleum Corporation Limited 25 Crores
Hindustan Petroleum Corporation Limited 25 Crores
Oil India Limited 25 Crores

கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமான தொகை கொடுத்ததாக சொல்லப்பட்டது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது. IOC 900 கோடி கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் 2016-17 நிதியாண்டில் கொடுத்தத் தொகை 21.83 கோடி. ONGC 500 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லப்பட்டது உண்மையல்ல. கொடுக்கப்பட்டது 50 கோடி ரூபாய். BPCL, OIC & GAIL ஒவ்வொன்றும் 250 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்தியா டுடே கண்டுபிடித்த தகவல் படி BPCL 45 கோடி, OIC 25 கோடி GAIL 25 கோடி. Power Grid கொடுத்திருப்பது 12.5 ஆனால் வதந்தியோ 125 கோடி ரூபாய்!

லோக்சத்தா பதிவு HPCL 250கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லியது. ஆனால் 2016-17 வருடாந்திர நிதி அறிக்கையை பார்த்தபோது அவர்கள் கொடுத்திருப்பது ரூ 25 கோடி என்று தெரிகிறது. குஜராத் கனிம வள நிறுவனம் (GMCL) 100 கோடி கொடுத்ததாக சொலப்பட்டது ஆனால் இந்தியா டுடே கண்டுபிடித்த உண்மையின் படி அந்நிறுவனம் 11கோடி ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. Petronet & Balmer Lawrie இந்த நிறுவனங்கள் தலா 50 கோடி கொடுத்ததாக அப்பதிவு சொல்லியது. கொடுக்கப்பட்டதோ பெற்றோநெட் 5 கோடி ரூபாய், பால்மர் லாரி 2017-18ல் 62லட்சமும் 2016-17ல் 38 லட்சமும் தான். Engineers India Limited என்னும் நிறுவனம் எதுவுமே அளிக்கவில்லை.
பொது நிறுவனங்களும் தனியார் கொடுத்த நன்கொடைகள்
இந்தியா டுடே, சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடட் (SSNNL) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சந்தீப் குமாரை தொடர்பு கொண்டு சிலைக்கான நிதி வேறெங்கிருந்து வந்தது என்று மற்ற விவரங்களை கேட்டறிந்துள்ளது. சிலை நிறுவும் மேற்பார்வை பொறுப்பு இந்த நிறுவனத்துக்கே அளிக்கப்பட்டது. சந்தீப் குமார் அளித்த தகவல் படி திட்ட செலவு 2362 கோடி ரூபாய், அதைத் தவிர 650 கோடி ரூபாய் அடுத்த 15 வருட பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த திட்ட செலவில் நினைவுச் சின்னம், 50 அறைகள் கொண்ட தங்கும் விடுதி, சுற்றுப்புற அடிப்படை வசதிகள் கட்டுவது ஆகியவை அடக்கம். மேலும் அவர் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 300 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் 550 கோடி ரூபாய் மத்திய மாநில பொது நிறுவனங்களும் தனியார் கொடுத்த நன்கொடைகள் என்றும் தெளிவு படுத்தியுள்ளார். மிச்ச செலவு மொத்தமும் குஜராத் மாநிலம் செய்தது என்று கூறியுள்ளார்.
சைனாவிடம் இருந்து நிதியுதவியோ கடனோ பெறப்படவில்லை
இதில் இருந்து பொது நிறுவனங்கள் பணம் கொடுத்துள்ளன ஆனால் மிகக் குறைந்த அளவே அவை கொடுத்துள்ளன 2500 கோடி எல்லாம் தரவில்லை என்று தெரிகிறது. சைனாவிடம் இருந்து நிதியுதவியோ கடனோ பெறப்படவில்லை. பிரிட்டன் கொடுத்தப் பணம் இதற்குப் பயன்படுத்தப் படவில்லை. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அதுவும் மோடி அரசு செய்யும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் கிடையாது, வெளிப்படைத் தன்மை நிறைந்தவை. வாழ்க பாரதம்.
~பல்லவி

One Reply to “சர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது?”

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.