Sterlite Copper thoothukudi

ஆலைகள் செய்வோம் என்று பாரதியார் பாடினார். நடந்து முடிந்த ஸ்டெர்லைட் போராட்டம் மூலம் ஆலையை மூட வைத்ததை கண்டு மனம் வருந்தி இருப்பார். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் இது போன்ற போராட்டங்கள் ஹிந்துக்களுக்கு, அதிலும் குறிப்பாக தங்களை நடுநிலை, மிதவாதி என்று கூறிக்கொள்ளும் ஹிந்துக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

தொடர் திட்டமிடல், ஒருங்கிணைப்பின் மூலம் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள் ஆலையை மூடும்படி செய்துவிட்டனர். போராட்டத்தை சரியாக கையாளாத அரசுக்கு இதில் பங்கு உண்டு என்றாலும், அதற்கான மூலகாரணத்தை நாம் புறக்கணிக்க முடியாது. இதற்கு மூலக்காரணம் – சர்ச் மற்றும் அதன் கைக்கூலிகள். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு ஆர்பாட்டக்காரர்களுக்கு பணத்தை வாரி இறைத்தது போராட்டங்களை நடத்தியது.

கூடங்குளம், கொளச்சல் மற்றும் இந்த ஸ்டெர்லைட். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்தப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. வடமாவட்டமான ஆம்பூர் தோல் தொழிற்சாலை, மேற்கு மாவட்டமான திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு எதிராகவோ இது போன்ற வன்முறை போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தென் மாவட்டங்களின் இந்த போராட்டங்கள் கவனம் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் சர்ச் மற்றும் கிறித்துவ அமைப்புகளே காரணம். தமிழ்நாட்டில் சராசரியாக 10% இருக்கும் கிறித்துவர்கள் எண்ணிக்கை – கன்னியாகுமரியில் 45% ஆக உள்ளது.

tamil nadu Christianity population percentage

சரி, சர்ச்சுகள் ஏன் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கறது?

முதன்மையான காரணம்: மதமாற்றம் செய்ய இயலாது. ஆலைகள் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும். அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மக்களின் வறுமையை பயன்படுத்தி மதம் மாற்றும் செய்யும் சர்ச்சுக்கு இது பெரிய தடை. ஆகவே தனது கைக்கூலிகளான செபாஸ்டியன் சைமன், திருமுருகன் (டேனியல்) காந்தி போன்றவர்களை கொண்டு போராட்டங்கள் நடத்துகின்றது.

ஆங்கிலத்தில் “soul vultures” (ஆன்மா வியாபாரிகள்) என்று இவர்களை கூறுவார்கள். வறுமை மற்றும் அடித்தட்டு மக்களே இவர்களின் மதமாற்று தொழிலுக்கு மூலதனம். பொருளாராதர மேம்பட்டுவிட்டால் தொழில் படுத்துவிடும். பணம், அரிசி மூட்டை இத்தியாதிகளை குடுத்து மதம் மாற்றம் செய்ய முடியாது. 1991 -இல் பொருளாதார தாராளமயமாக்களுக்கு பிறகு மதமாற்று தொழில் மந்தம் ஆகிவிட்டது. காரணம் – நடுத்தர மக்களின் வளர்ச்சி. தற்போது மிகவும் வறுமையில் உள்ள மக்களை மட்டுமே மதமாற்றம் செய்ய முடிகிறது.

உதாரணமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறது.. அதாவது, 35,000 குடும்பங்கள்- குடும்பத்துக்கு நான்கு பேர் என்றாலும், மொத்தம் 1.5 – 2 லட்சம் மக்கள்… இவர்களை மத மாற்றம் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆலையை விரிவு படுத்துவது மேலும் மத மாற்ற தொழிலுக்கு இடையூறு விளைவிக்கும். எனவே இத்தகைய போராட்டங்களின் மூலம் அந்த பகுதி மக்களின் வளர்ச்சியை தடுக்கலாம், எனவே போராட்டங்களும், அதனை தொடர்ந்து வன்முறைகளையும் கிறித்துவ அமைப்புகள் நடத்துகிறது. நாளொன்றுக்கு 400 ரூபாய் கூலி குடுத்து போராட்டக்காரர்களை களம் இறக்குகிறது.

போலியான சுற்றுசூழல் வாதங்கள்

சுற்றுசூழல் பாதிப்பு, பல விதமான நோய்கள் வருகிறது என்று முழக்கமிட்ட போராட்டக்காரர்களால், நீதிமன்றத்தில் அதற்கு சாதகமாக ஒரு ஆய்வு கட்டுரைகூட சமர்ப்பிக்க முடியவில்லை. தற்போது ஆலை மூடப்பட்டதுகூட அரசியல் நிர்பந்தத்தினால் எடுக்கப்பட்ட முடிவே ஆகும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலயம் இயங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிரண்டு கசிவு ஏற்பட்டபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு அது சீர் செய்யப்பட்டது. வாரியத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தால், போராட்டக்கார்கள் (பணம் பெற்று போராட்டம் செய்யும்) ஆலையின் பாதுகாப்பு தரத்தை உயர்த்த போராட வேண்டுமே தவிர, ஆலையை மூடுவது சரியான முடிவாகாது.. ஆலையை நம்பி இருக்கும் பல ஆயிரம் குடும்பங்களும், அதனை சார்ந்த லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால், கிறித்துவ அமைப்புகளுக்கு இதுவே தேவை. இல்லாவிட்டால் வறுமையை பயன்படுத்தி எப்படி மதம் மாற்றத்தில் ஈடுபடுவது??

தமிழகத்தின் பிற பகுதிகளில் இது போன்ற ஆலைகள் இயங்குவதை நினைவில் கொள்ள வேண்டும். திருப்பூரின் சாய பட்டறைகள், நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வேலூர் ஆம்பூர் பகுதிகளை சேர்ந்த இறைச்சி கூடம் & தோல்பதனிடும் தொழிற்சாலைகள். திருப்பூர் பகுதி சேர்ந்த மக்கள் இந்த போலி மதமாற்று வியாபாரிகளின் மகுடிக்கு மயங்கமாட்டார்கள்.

ambur leather ducks killed

ambur leather fish killed in pond

ambur leather pollution disaster

ஆம்பூர் பகுதியில் மிருக ரத்தத்தோடு மனித ரத்தத்தை ஓடவிட்டு விடுவார்கள் அப்பகுதி மக்கள். நெய்வேலி போராட்டம் நினைத்துக்கூட பார்க்க முடியாது, ஏனென்றால் அங்கு வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நிறுத்து தமிழகத்தை இருண்டு போக செய்து விடுவார்கள். எனவே அங்கு சர்ச் அமைப்புகள் எந்தவொரு போராட்டங்களில் செய்வதில்லை.

மிதவாத / நடுநிலை / சோசியலிச/ கம்யூனிசம் பேசுபவர்களுக்கு இது எச்சரிக்கை மணி

எப்படி? ஸ்டெர்லைட் ஆலையை மூடச்செய்தது நாட்டின் வலது சாரி, முக்கியமாக ஹிந்துக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வது என்பது தற்போது அந்த பகுதியில் இருக்கும் மக்கள் தொகை மற்றும் அங்கு வசிக்கும் சிறுபான்மையினர் சமூகத்தின் சதவிகிதத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. சிறுபான்மையினரின் மக்கள் தொகை சிறிது உயர்ந்தாலும், அங்கு வளர்ச்சி பணிகள் பாதிப்புக்குள்ளாகிறது. மத அரசியல் செய்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் அதற்கு அத்தாட்சி.

புதிய முதலீடுகளும் இனி தமிழகத்தை நோக்கி வருவது கடினமே. அண்மையில், 6000 கோடி முதலீடுகள் ஆந்திராவை நோக்கி சென்றது மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. காரணம் தினம் ஒரு போராட்டம், காரண காரியம் இல்லாத வெற்று போராட்டங்கள்.ஒரு காலத்தில், முதலீட்டாளர்களின் சொர்க்கமாக கருதப்பட்ட தமிழகம் – அதன் மூலம் நாட்டின் மூன்றாவது பணக்கார மாநிலம் என்ற அந்தஸ்து – இதெல்லாம் இந்த போராட்டங்களின் மூலம் மூதலீட்டாளர்களை முகம் சுளிக்க வைத்து, தமிழகத்தை பின்னுக்கு தள்ளுகிறது.

தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்காளம் போல மாறி வருகிறது. அதுதான் கிறித்துவ அமைப்புகளின் தேவை, தங்களது மத மாற்ற தொழிலை தவிர வேற எதுவும் நடக்க கூடாது அவர்களுக்கு. இது ஒரு தொடக்கம் மட்டுமே. துர் எண்ணம் கொண்டஅமைப்புகள் நமது பாரதத்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் பண்பாற்றை ஒழித்து, நாட்டை ஆப்பிரிக்கா கண்டம் போல மாற்றும் பணியில் ஜோராக இயங்குகிறார்கள். நடந்து முடிந்த சம்பவங்களின் மூலம் அதற்கான அறிகுறிகள் நெறைய தென்படுகின்றன.

நடுநிலை பேசி, தமிழனுக்கு இனம் உண்டு, மதம் இல்லை என்று வசனம் பேசி மக்களை ஏமாற்றும் கும்பலை ஹிந்துக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

வாழ்க பாரதம்.

(இந்த பதிவு “யுகபரிவர்தன்” இணையதளதில் வெளியான Sterlite Protests: Development hits minority roadblock கட்டுரையிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.