மே 22,2018 தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்

அன்று தான் தமிழகத்தை தன் கைக்குள் போட எண்ணிய லாபிகள் தங்கள் முழு வெற்றியையும் ருசித்தார்கள்!

ஆம் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி முழுக்க பொய்களை சிறிது உணர்ச்சிப்பிரவாகத்துடன் இல்லுமினாட்டி சதி என்று மூளைச்சலவை செய்து 13 தமிழர்களை தங்கள் அரசியல் லாபத்திற்காக பலியாக்கி தங்கள் வெற்றிக்கொடியை அந்த லாபி நட்ட அதே நாள் தான்!

சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்தேன் நண்பர் ஒருவருடன்(திருநெல்வேலியில் இருந்தது தூத்துக்குடி சென்று வேலை செய்பவர்), தூத்துக்குடியில் எங்களுக்குத் தெரிந்தவருடன் பேசிட்டு இருந்தப்ப திருநெல்வேலிக்காரர் கேட்டார் “ஏலே நீங்க என்னவோ போராடி ஸ்டெர்லைட் ஐ மூடிட்டோம்னு பீத்திகிட்டு திரிஞ்சீக ஊர்க்குள்ளே அவனை விட எல்லா பேக்டரியும் புகையை கக்கிட்டு இருக்கான் அங்க வேலையை விட்டவனை பத்தி நெனைச்சி பார்த்தீகளால!

தூத்துக்குடி ஊருக்கு உள்ளே இருக்குற பல ஆலைகள் (திருநெல்வேலி போல் அல்லாமல் இங்கன பல ஆலைகள் உண்டு பார்த்துகிடுக) எவ்வளவு மாசு உண்டு பண்ணுதான் SPIC ல இருந்து வராத புகையையாலே அந்த கம்பெனி விட்டான் என்ன ஏதுன்னு தெரியாத ஒரு பேக்டேரியை மூடினதால வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவருக்கு பெரிய நட்டம் இல்ல எல்லா நஷ்டமும் உன் ஊருக்கு தான்” என்று பேசப்பேச தூத்துக்குடிக்காரர் தான் போராட்டித்தை ஆதரித்தற்கு சென்ற வருடம் வந்த அந்த மீம்களை நினைவுகூர்ந்து முட்டு கொடுத்தார்

அவர் 2016ல் குடும்பத்துடன் திமுகவிற்கு ஓட்டு போட்டார் 2021லும் அவ்வாறே தான் ஓட்டு போடுவார்

அவரைப் பொறுத்தவரை ஸ்டெர்லைட் எனும் அரக்கன் தமிழர்களை நோயாளியாக்கி அழிக்க வந்தவன் அவர்களுக்கு நாம் இன்று காப்பர் இறுக்குமதி பண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியாததோடு நில்லாமல் இந்தியா 2022 க்குள் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறாது என்று நினைப்பில் வாழ்பவர்

அவர் அறியாமையில் இருக்கும் வரை நாம் அந்த கெடுவுக்குள் அவ்வளவு பெரிய பொருளாதாரமாக இருப்பது சந்தேகமே

தனது களவீரர்களை பலிகொடுக்காமலயே திமுக அங்கே கனிமொழியை வெல்ல வைத்தது இதே சூட்டோடு 2021 ஐயும் வெல்ல காத்திருக்கிறது

sterlite staff quarters violent protests fire

ஆனால் போராடிய ஒருத்தருக்கு கூடவா யோசிக்க முடியவில்லை அங்கே ஆலை குடியிருப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு வராத நோயா தங்களுக்கு வரப்போகிறது என? இதை கூட யோசிக்கவிடாமல் மக்களுக்கு ஒரு கற்பனை எதிரியை காட்டி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி ஒரு போராட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்த முடிகிறது அந்த லாபியால்

அந்த லாபி என்ன பண்ணாலும் பலன் எல்லா நேரமும் திமுகவிற்கே கிடைக்கிறது

ஆனால் அங்கே வேலை இழந்து வாடும் 20000(நேரடியாகவும் மறைமுகமாகவும்) மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஏன் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.5 ஐயை தொட்டது என புலம்புகிறார்கள்!

இன்று இதே லாபி இதே முறையை மகாராஷ்டிரா ஆரே காலனி விஷயத்திலும் பின்பற்றி பாஜகவின் எளிதான தேர்தல் வெற்றியை தடுக்க நினைக்கிறது

இவர்களது நோக்கமே நமது வேலையை பறித்து நிம்மதியை கெடுத்து அதைப் பயன்படுத்தி சமூகத்தில் அமைதியற்ற கலகச்சூழலை உருவாக்கி நம் நாட்டை துண்டாட நினைப்பதே! அதில் அமோக வெற்றி பெற்று விட்டார்கள் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்

ஆனால் இந்த லாபியினை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் (!)யாராவது சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பது,ஏரியை விற்று வீடு கட்டுவது என்ற பிழைப்பு நடத்தும் திராவிடர்களை நோக்கி தங்கள் குற்றச்சாட்டை வைத்ததுண்டா?

இவர்களுக்கு பணம் வரும் வழியை தடுக்க மட்டுமே அரசால் முடியும் ஆனால் இவர்களது முகத்திரையை கிழக்க நம் தேசத்தினை நேசிக்கும் ஒவ்வொருத்தரும் ஒன்று பட வேண்டும்

ஏற்கனவே இத்தனை இழந்து விட்டோம் இனியும் ஜாக்கிரதையா இல்லாமல் இருந்தால் நாளை இழந்ததை திரும்பி பார்க்க வரலாறு கூட இருக்காது

அழிக்கும் அவர்களது நோக்கம் தெளிவாகவே உள்ளது காக்கும்(ஆக்கும்)நாமே தெளிவின்றி உள்ளோம்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.