குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம். என்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்? இந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை […]
உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்
“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க? பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “ உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி. செய்தி என்பது என்ன? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
மீண்டும் இந்தியா இவ்வுலகை வெல்ல வேண்டும் அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல-சுவாமி விவேகானந்தர் மேற்கண்ட பொன்மொழிக்கேற்ப தற்போது இந்தியா செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாக வந்தே விட்டது.ஆம்!எது நடக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் முதல் பாகிஸ்தான், பத்திரிக்கையாளர்கள் வரை நினைத்தனரோ அது நடந்தே விட்டது இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதென எதிர்க்கட்சிகள்/பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து கலவரத்தை […]
குதிரைக்குக் குர்ரம், ஆனைக்கு அர்ரமா?
தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள். இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […]
அவருக்கு மட்டுமா?
கிராமத்துல ஒரு கதை சொல்லுவாங்க — கவுண்டமணி காமெடியாக் கூட வந்திருக்கு — கிராமத்து நாட்டாமை ரொம்ப செல்வாக்கா இருக்காரு. அவரோட மச்சானுக்கு பொறாமை. ஒரு நாள் நாட்டாமையோட மனைவி என்னோட தம்பியையும் பெரிய மனுஷனாக்கி விடுங்களேன்னு ஒரே பொலம்பல். நாட்டாமையும் போகுமிடத்துக்கெல்லாம் மச்சானைக் கூட்டிச் செல்கிறார். ஒரு இழவு வீட்டுக்குச் செல்கிறார். மகனை இழந்த தாய் கதறுகிறார். “ நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் தாய்” என்று […]