நாளைய தீர்ப்பு

தமிழ்நாட்டில் பிரிக்க முடியாதது சினிமாவும், அரசியலும். கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும் நான்கு பேர் சந்தித்துக் கொண்டால் பேசுவது சினிமா அல்லது அரசியலாகத்தான் இருக்கும். அந்தளவுக்குச் சினிமா தமிழ் மக்களை மதிமயக்கி வைத்துள்ளது. ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். இணையத்தில் மீம்ஸ் வெளிவர ஆரம்பித்தபோது அமெரிக்கர்கள் பல வேடிக்கையான சித்திரங்களை மீம்ஸ்களாகப் போட்டு கலாய்த்தனர். இந்தக் கலாச்சாரம் தமிழகத்திலும் பரவியது. ஆனால் இங்கு வந்த மீம்ஸ்களோ வடிவேலு, கவுண்டமணி, ரஜினி, விஜயகாந்த் போன்றவைதான். […]